கதையாசிரியர் தொகுப்பு: தஞ்சை பிரகாஷ்

7 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சுமாடி

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘வாங்க’ என்றார் கோபிராவ். நான்கு படிகளும் ஏறுவதற்குள் சடசடவென்று கொட்ட ஆரம்பித்துவிட்டது. கோடை மழை பெரும் துளிகள். எதிரில் லாரி புக்கிங் ஆபீஸ் மேல்கரை தகரம். தடதடவென்று அதிர்கிறது தகரம். “ஐயய்யோ ம்ஸ! நல்லா நனைஞ்சிட்டீங்களே சார்!” “என்ன பண்றது கீழவீதி முனைக்கி வந்துட்டேன். ஆனாக்க எங்கியும் ஒதுங்க முடியல்ல. கோடெ மழல்ல பெரிசு பெரிசா உளுவுது” “அட மேலே வாங்க சார்


அங்கிள்

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுடைய பற்கள் அவர் புஜத்தில் ஆழப் பதிந்து பல் பதிந்த குழிகளில் ரத்தம் தளும்பி அரும்பிக் கொண்டு எரிச்சல்… அந்த சிங்கப்பூர் குளோஸ் கட்நெக், அந்த புது ரத்தம் ஊறிப் பரவ ஆரம்பித்தபோது… சாளிப்பிள்ளை வாசலைக் கடந்து லேசாகத் திறந்திருந்த கேட்டின் திறப்பின் வழியே போய் விட்ட அவளைக் கண்களால் துழாவினார். மிஷன் தெருவில் யாருமே இல்லை. வரவில்லை, போகவில்லை. சாளிப்பிள்ளை முற்றத்தில்


வைரமலை

 

 ரொம்ப ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்ட கல்யாண ராத்திரி விடித்து, மழை பெய்திருந்தது இரவெல்லாம். புசு புசு என்று சிணுக்கு மழை பெய்து கொண்டிருந்தது. சாவித்திரிக்கு தெரியும் ஒவ்வொரு மழைத் துளியாக எண்ணிக் கொண்டுதான் படுத்துக்கிடந்தாள். கல்யாணம் எல்லாமே கொஞ்சம் அவசரக்கோலத்தில் நடந்தது. கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பூக்களின் வாசனை மந்திர புகை ஹோமப்புகைபெல்லாம் எழுப்பிய கதகதப்பு கூட்டத்தின் நெரிசல் சம்பந்திகளின் மோதல்கள் குழந்தைகளின் கூச்சல்கள், மனதில் இனம் தெரியாத திகில் இவர்களிடையே உட்காந்திருந்தான் பார்த்தசாரதி. அவனுக்கு சாவித்திரி


பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம்

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். – கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு வெகு நேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே


அங்குசம்

 

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் மீண்டும் சலித்து நின்றாள். பின்னே என்ன அவர்கள் இருவருக்கும் இருந்த பிரச்சனை சுதந்திரம்தான்! அது இல்லாமல் இருந்தால் அவனும், அவளும் இந்நேரம் ஒன்று சேர்ந்து குடும் பாமாகி குழந்தைகள் பெற்று வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப் பார்கள், இரண்டு பேருமே அதில் சளைத்தவர்களில்லை. வாழ்க்கையின் பொருள் சுதந்திரம்தான் என்று சாதித்தார்கள். அதுதான் சுதந்திரமற்றுப் போனார்கள், அந்த பஸ் ஸ்டாண்டில்தான் எத்தனை நேரம்


வெட்கங்கெட்டவன்

 

 ரங்கம் நிம்மதியாய் அழுது கொண்டிருந்தாள். வாசல் கதவு சும்மா ஒருக்களித்திருந்தது. மதிய வேளையின் வெய்யில் மணி நாலு ஆகியும் ஜன்னல் வழியே உள்ளே பாட்டம் போட்டு வெளிச்சம் கண்னை கூசியது கோடை வெய்யில் ஆத்திரத்துடன் அழுது கொண்டிருந்தாள். ஒரு பழைய பாவடை அது முழுவதும் கண்ணீரால் நனைந்து சோர்ந்துவிட்டது. அழுவதற்காகத்தானே தஞ்சாவூருக்கு அம்மா வீட்டுக்கு வந்தாள்? இங்கும் வந்து விட்டான் பின்னாலே அப்போது ரங்கத்துக்கு பதிமூணு வயசு யார் கேட்டார்கள் கல்யாணம் வேணுமென்று அவசர அவாரமாய் கல்யாணம்


மேபல்

 

 மேபலுக்கு ரொம்ப பயம். அப்பான்னாலே பயம். அவளுக்கு அப்பா மட்டும்தான் மிச்சம். அம்மா மோனத்திலிருக்கிறாள். கர்த்தரின் மடியில் அம்மா இருக்கிறதை மேபல் பல தடவையும் கனவில் பார்த்திருக்கிறாள். அம்மா ரொம்ப அழகு. சிவப்பு வெள்ளப் பட்டுடுத்தி சம்மனசு மாதிரி கர்த்தரோட மடியில் உட்கார்ந்திருக்கிறதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்பா கறுப்பு! முரடு. திமுசு மாதிரி, புளியமரத்து அடி மரம் மாதிரி கண்டு முண்டா இருக்கிற அப்பாவெ மேபல் குட்டிக்கு எப்படிப் பிடிக்குமாம்? கொஞ்சம்கூடச் சிரிக்காத மனுஷன் உண்டா?