கதையாசிரியர் தொகுப்பு: டைரக்டர் ப.நீலகண்டன்

1 கதை கிடைத்துள்ளன.

மணமகள் வந்தாள்!

 

 அன்று அவளுக்கு முதல் இரவு! வரப்போகும் ஆயிரமாயிரம் இன்ப இரவுகளுக்கு அது ஆரம்ப இரவு! இளம் பெண்கள் சிலர் அவளுக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் கேலிப் பேச்சில், புஷ்பாவின் நெற்றி யிலிருந்த குங்குமம் முகமெல்லாம் பரவியது போல, வெட்கத்தால் அவள் முகம் சிவந்தது. “அடி போங்கடி இவளுங்களா! எதுக்கு இப்படிக் கஷ்டப்பட்டு டிரஸ் பண்ணிவிடுறீங்க? என்னமோ எல்லாம் அப்படியே இருக்கப் போற மாதிரி… சும்மா சேலையைச் சுத்திவிட்டு அனுப்புவீங்களா!” என்றாள் ஓர் அனுபவக்காரி. அறைக்குள் அடையப்போகும் கோலத்தை