கதையாசிரியர் தொகுப்பு: டி.எஸ்.கோதண்டராமன்

1 கதை கிடைத்துள்ளன.

மகன் வந்தான்

 

 தெருவில் மாட்டு வண்டியின் ‘ஜல், ஜல்’ என்ற ஒலி கேட்டதும் கனகம் அம்மாள் பரபரப்புடன் வெளியே வந்தாள். அவள் வீட்டைத் தாண்டிக்கொண்டு கீழ்த் திசை நோக்கிச் சென்றது வண்டி. மாட்டு வண்டி போவ தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கனகம் மெல்லிய நகைப்பைச் சிதற விட்ட வண்ணம் உள்ளே செல்லத் திரும்பினாள். கிழக்குப் பக்கத்திலுள்ள யார் வீட்டுக்கோ யாரோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவளுடைய அருமை மகன் துரை அந்த வண்டியில் வர வில்லை. இதில் ஏமாற்றத்துக்கு