கதையாசிரியர் தொகுப்பு: ஜே.ஷாஜஹான்

1 கதை கிடைத்துள்ளன.

வளர்சிதை மாற்றம்!

 

 நிறைய புதுக் கவிதைகளும், நாற்பதுக்கு மேல் கேள்விகளும், கிட்டத்தட்ட நூறு வாசகர் கடிதங்களும் பிரசுரமாகியும், ஒரே ஒரு கதை எழுதிப் பிரசுரமாவது மட்டும் விஜயனுக்கு இதுவரை சித்திக்கவில்லை! எழுதி அனுப்பும் கதைகளுடன் விளக்கம், இரங்கல், கெஞ்சல் என இணைப்புக் கடிதங்களும் அனுப்பிப் பார்த்தான். கதைத் தலைப்பு, கதைக் கரு, முடிவு என எதனையும், தனது பெயர் தவிர மாற்றிக்கொள்ளலாமென வாக்குமூலம் தந்தான். எந்த எமகாதகனும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஒரு கதை மட்டும் பிரசுரமாகிவிட்டால், இவனது இலக்கியத் திறன்