கதையாசிரியர் தொகுப்பு: ஜெயா மாறன்

1 கதை கிடைத்துள்ளன.

எங்க? மரத்தைக் காணோம்?

 

 ‘மரத்தக் காணோம்! ஐயோ! வச்ச மரத்தக் காணோம்!’ என்று அலறியபடி பின் தோட்டத்திலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார் அம்மா. ஹெட்போனை மாட்டிக் கொண்டு கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த நான், அம்மாவின் பதற்றமான முகத்தைப் பார்த்ததும், அவசரமாக ஹெட்போனைக் கழற்றிவிட்டு, ‘என்னாச்சும்மா?’ என்றேன். ‘மரத்தக் காணோம்டி’ என்றாள். ‘என்ன! மரத்தக் காணோமா?’ (இதென்னடா இது. வடிவேலு கெணத்தக் காணோம்னு சொன்ன கதையால்ல இருக்கு – என்று மனத்தில் நினைத்தபடி) என்றேன். ‘ஆமாடி ஒனக்கு எத்தனை தடவ சொல்றது?