கதையாசிரியர் தொகுப்பு: ஜெயலட்சுமி

1 கதை கிடைத்துள்ளன.

அன்புள்ள அப்பா

 

 “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே” என்ற சுப்ரபாத பாடல் காலையில் சத்தமாக ஒலிக்கவே சந்தியா கண்களை கசக்கிக் கொண்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள். “என்னமா சந்தியா எழுந்துட்டியா… இந்தா காபி குடி” என ஆவி பறக்க காபியை நீட்டினார் பாலமுருகன். “எதுக்குப்பா நீங்க இதெல்லாம் செய்றீங்க, நான் பாத்துக்க மாட்டேனா” என தூங்கி வழிந்து கொண்டே சொன்னவள், “அப்புறம் இவ்வளவு சத்தமா சுப்ரபாதம் போட்டு கேட்கிறீங்க தல வலிக்குது” என தலையில் கை வைத்த