கதையாசிரியர் தொகுப்பு: ஜுனைதா ஷெரீப்

1 கதை கிடைத்துள்ளன.

முள்ளை முள்ளால்…

 

 பள்ளிவாசலில் அஸர் தொழுகையை முடித்துக்கொண்ட கையுடன் சம்சுதீன் தனது நண்பரான உதுமானைச் சந்திப்பதற்காக அவரது வீடு நோக்கி நடந்தார். நீலமும், பச்சையுமான கோடுகளுடன் கூடிய சாரனொன்றை உடுத்து, முடிகள் நிறைந்த சதைப்பிடிப்புள்ள வெற்று மார்புடன் ஆடுகளைக் காலைக்குள் சாய்த்துக் கொண்டிருந்த உதுமான் இவரைக் கண்டதும் முகமலர்ந்தார். பள்ளிக்குத் தொழ வருவீங்க எனப் பார்த்தன். காணல்ல. அதான் ஊட்டுக்கு வந்த ‘ என்றார் சம்சுதீன். காலைக்குள் நான்கைந்தும், வெளியே ஐந்தாறுமாக ஆடுகள் நின்றன. வெளியே நின்றவற்றை உள்ளுக்குள் ஏற்றுவதில்