கதையாசிரியர் தொகுப்பு: ஜி.கே.பொன்னம்மாள்

1 கதை கிடைத்துள்ளன.

யாரை நம்பி வந்தாய்?

 

 அந்த ஆலமரத்து நிழலுக்கு வந்ததும் தார் ரோட்டில் நடந்து வந்த அலுப்புத் தீர நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சுடலைமுத்து. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் பளபளக்கும் தார் ரோடும், பளிச்சென்ற வெயிலும் அவன் கண்களைக் கூசச் செய்தன. அவனுடன் வந்த செல்லி பக்கத்தில் இருந்த குழாயடியில் முகத்தைக் கழுவிக் கொண்டு நாலு கை தண்ணீரையும் அள்ளிக் குடித்துவிட்டு, ”அப்பாடா! இந்தக் குழாய்த் தண்ணி கூடவா இப்படிக் கொதிக்கணும்?” என்றபடி அங்கிருந்த