கதையாசிரியர் தொகுப்பு: ஜமீலா

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஜைனப்பீ அளித்த தீர்ப்பு!

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருமணப் பத்திரிகையைப் படித்து முடிப்பதற்குள் பொல பொலவென்று நீர் சிந்திய கண்களை ஜைனப்பீ தாவணியின் தலைப்பினால் ஏழாவது தடவை துடைத்துக் கொண்டாள். நெஞ்சின் அடித்தளத்திலிருந்து கொந்த ளித்து எழுந்த நெடுமூச்சு அந்த நங்கையின் உடலை உலுக்கி விட்டது. எந்தப் பிஞ்சு உள்ளம் பல மாதங்க ளாகக் கற்பனைச் சுவர்க்கத்தில் ‘ களிப்புடன் மிதந்ததோ அதே உள்ளம் நடுங்கிக்கொண் டிருந்த விரல்களுக் கிடையே சலசலத்த


நஷ்டத்தின் ரகஸியம்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்வாரி தெரு மசூதி பழுது பார்ப்பதற்குப் பத்தாயி ரம் ரூபாய், உள்ளூர் அரபு மதராஸாவிற்கு ஆறாயிரம், பாத்திமா பீ அநாதை விடுதிக்கு ஐயாயிரம் – இம்மாதிரி யாக ஏராளமான நன்கொடைகள் தாராளமாக அளித்த ஷேக்மீரா ராவுத்தரிடம் ஆண்டவன் காட்டிவிட்ட சோத னைகள் என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. ஐந்து ‘வேளை ‘நமாஸ்’ தவறாதவரும், எதற்கெடுத்தாலும், ‘அல்லாஹுத்தாலாவின் செயல்’ என்று பல்லவி பாடு பவருமான ராவுத்தருக்கு


அடிமை

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானத்தில் அங்குமிங்கும் சிதறிக் கிடந்த மேகங் கள் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஒன்று கூடிக் கருமுகிலாகத் தோற்ற மளித்தன. பளிச் பளிச்சென்று நெளிந்து கொண்டு பாய்ந்த மின்னல்களுக்கிடையே இடியின் குமுறல் ஆங்காங்கு எழுந்து கொண் டிருந்தது. காற்றின் வேகம் அதிகரித்தவுடன் சாரல், சுழன்று சுழன்று அடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்திற்குள். ‘சோ’ வென்று விம்மிக்கொண் டிருந்த அச்சாரல், ‘ஹோ’ வென்று பிலாக்கணத்தை யெழுப்பிக்கொண்டு


மனப் புயல்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வருணனும் வாயுவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு பலப் பரீட்சையில் இறங்கிய போது. உயிருக்கும் பயிருக்கும் உலை வைக்க வேண்டுமென்ற குலை நடுங்கச் செய்யும் நயவஞ்சக எண்ணத்துடன் உருவாகிக் கொண்டிருந்த புயலை அந்தத் தேவர்கள் அறவே மறந்து விட்டார்கள்! இயற்கையின் பிரதிநிதிகளாகிய அந்தப் பரோபகாரிகளே இத்தகைய கேவலமான நிலைமையை அடைந்து விட்ட போது மனித வர்க்கத்திலே முளைக்கும் சுயநலக்காரர்களைக் கண்டிப்பதற்கு இனி யார்


பாச்சாவின் வஞ்சம்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரசியலும் தத்துவமும் விவகாரமும் பிரதிபலிக்கும் சொற்களைத் தன் வாடிக்கைக்காரர்களிடம் தாராளமாகப் பரிமாறிக்கொண்டு, ஒன்பது வருஷ காலமாகக் கசாப்புக் கடையை நிம்மதியாக நடத்தி வந்த பாச்சாவின் வாழ்க்கை , தடம் புரண்டது. தனிக்காட்டு நவாபாக அவன் தர்பார் நடத்தி வந்த இடத்தில் ஓர் ‘ஜபர்தஸ்த்’ சுல்தான் படையெடுக்கலானான்! என்றைக்கு மஜீத் கசாப்புக் கடையை அந்த மார்க்கெட்டில் திறந்தானோ அன்றைக்கே பாச்சாவின் வியாபாரத்தில் ஒரு திருப்பம்


இரங்கிய உள்ளம்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எந்த இன்பகரமான நாளை நஸீருத்தீன் இத்தனை மாதங்களாக எதிர்பார்த்து வந்தானோ, அந்தப் புனித மான பண்டிகை நாளும் பலபலவென்று புலர்ந்தது. “பிஸ்மில்லா ” என்று ஜபித்துக்கொண்டு வைகறை யில் துயிலெழுந்த அந்த இளைஞன் முதல் காரியமாகச் சுவரை ஒட்டி நின்ற பெட்டியை மெல்லத் திறந்து அதற் குள் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த கிச்சிலி வர்ண ஷேர்வானியைத் தன் கண்குளிரக் கண்ட பிறகு தான்


வெள்ளிக்கிழமை

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘லுஹர்’ நேரம் ஆரம்பித்ததும் குஞ்சாலி மரக்காயர் சந்திலிருந்து மசூதியின் முஅத்தினார் மினாராவின் படிக ளில் ஏறத் தொடங்கினார். உச்சியை அடைந்து இரு கலிமா’ விரல்களைச் செவிகளின் பால் வைத்துக்கொண்டு மேற்குத் திசையை நோக்கி நின்று கொண்டு, ‘அல்லாஹு அக்பர் …. அல்லாஹு அக்பர்” என்று உரத்த குரலில் பாங்கொலியை எழுப்பி அன்றைய வெள்ளிக்கிழமை நமாஸை அறிவித்ததுதான் தாமதம், ஊரிலே ஓர் சலசலப்பு உண்டாயிற்று.


காதலும் போட்டியும்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலுப்பூர்ப் பயில்வான் இடியப்ப பிள்ளையிடம் சிட்சை பெற்று, ‘சிறுத்தைப் புலி’ சிங்காரத்தின் முந்திரிப் பழ மூக்கை ஓர் உலுக்கு உலுக்கிவிட்ட தார்பாட்டா பரம் பரையைச் சேர்ந்த ஜாம்பஜார் ‘பாயின்டிங் பாக்ஸர்’ சுல்தானுக்கும், சண்டைச் சேவல்’ சர்தார் முனியப்ப பயில்வானின் ஆசீர்வாதம் பெற்று வீரமுத்துவின் விலா வெலும்பைப் பதம் பார்த்த நாக் அவுட் புகழ்க் காட்டுக் கரடி’ மைக்கேல் காளிமுத்துவுக்கும் ஏழு ரவுண்டு ‘பாக்ஸிங்


பல்கீஸின் பதற்றம்

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டிபுடி கலெக்டர் ஷேக் பஷீர் சாஹேப் பள்ளி கொண்டா ‘காம்பி’லிருந்து திரும்பியவுடன், முதல் காரிய மாக டபேதார் முனுசாமியைக் குஞ்சுமணி ஐயரின் பங்களாவிற்கு விரட்டிய பிறகுதான் தம் சிவப்பு நிறத் துருக்கிக் குல்லாவை வெடுக்கென்று கழற்றி அலமாரியில் வைத்தார் ! அணிந்திருந்த ‘அல்பாக்கா’ ஷேர்வானியின் பத்துப் பொத்தான்களை அவர் விடுவிப்பதற்குள் அவர் விரல்கள் நொடிந்து தளர்ந்து விட்டன. ‘கம்மிஸ்’ஸைக் கழற்றுவதற்குள் சாஹேபிற்கு நெடுமூச்சு


பெருநாள் பரிசு

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அகலமான ஜரிகை பார்டர் போட்ட சிவப்பு நிற மதுரைச் ‘சிந்தோடி’ தாவணியைத் தன் துணைவிக்குப் பொறுக்கி யெடுத்தபோது அப்துல் காதரின் முகமெல்லாம் மலர்ந்தது. அதற்காக அறுபது ரூபாயை அலட்சியமாக வீசி எறிந்துவிட்டு, அதன் சரிபாதி விலையில் ஜிமிக்கி போட்ட நாகூர்ப் புடைவையைத் தன் தங்கைக்காக அவன் பேரம் செய்தபோது அவன் முகம் ஏனோ சுளித்து விட்டது! மீதியிருந்த பணத்தில் தன்னைப் பெற்றெடுத்தவள் என்ற