கதையாசிரியர் தொகுப்பு: ஜனநேசன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

கௌரவம்

 

 “பளார்’ என்று ஓர் அறை. பிரியாவின் இடது கன்னத்தில் மின்னல் தாக்கியது போலிருந்தது. “”காதல் திருமணமா – அதுவும் சாதிவுட்டு சாதி கேட்குதா உனக்கு?” என்று சொன்னபடி அவர் வெளியே போய் கதவை அறைந்து சார்த்தி பூட்டினார். அறைபட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “”மாமா மாமா ஏன் உள்ளே வச்சு பூட்றே?” என்று ஜன்னலருகே சென்று கதறினாள். அவர் காது கேளாதவர் போல் விரைந்தார். அவர் நின்ற இடத்தில் சாராய நெடி சுழன்று கொண்டிருந்தது. கன்னத்தைத் தடவினாள். நெருப்பு


பாடம்

 

 இலண்டனுக்குப் போவதற்கு முன்னால் இரண்டு காரியங்களைச் செய்து முடிக்கணும்னு மெனு மாஸ்டர் துரை முடிவு செய்திருந்தார். முதலில் தனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியராக இருந்த வைத்தியநாத வாத்தியாரைப் பார்த்து வாழ்த்துகளைப் பெறுவது, அடுத்து அம்மாவையும் அப்பாவையும் நன்றாகப் பராமரிக்கிற முதியோர் விடுதியில் சேர்ப்பது. இப்போது வாத்தியார் வைத்தியநாதனைப் பார்க்கத்தான் போய் கொண்டிருக்கிறார். அவரது கார் போகும் வேகத்தினை விட அவரது நினைவு பல மடங்கு வேகத்தில் பின்னோக்கிப் பாய்ந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள்


மீட்பு

 

 ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார். இணைப்பு கிட்டவில்லை. கணினியில் அப்படி இப்படி என்று முயற்சி செய்து பார்த்தார். மின்சாரம் எப்போ போகும், எப்போ திரும்ப வருமோ… அதற்குள் செய்திகளை அனுப்பி விட வேண்டும். பரபரப்பும் பதற்றமும் கூடிக்கொண்டது. இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மழையில் நனைந்தபடி அலைந்ததில் நீர் கோர்த்துக் கொண்டது. குனிந்தால் மூக்கின் நுனிவரை சளிநீர் திரண்டு வந்து மூக்கு முணுமுணுத்து