கதையாசிரியர் தொகுப்பு: ச.பாலமுருகன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

பள்ளித்தளம்

 

 அந்தியூரிலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் பேருந்து பர்கூர் வந்து மணியாச்சி பள்ளத்தை அடையும்போது எட்டரை மணி ஆகிவிடும். மணியாச்சி பள்ளத்திற்கு மேல் தம்புரெட்டி, ஒன்னகரை, கொங்காடை போன்ற மலை கிராமங்களுக்கு கால் தடத்தில்தான் நடந்துபோக வேண்டும். மணியாச்சி பள்ளத்தில் எல்லாக் காலங்களிலும் தண்ணீர் சலசலத்து ஓடும். காலை ஒன்பதரை மணிக்கு ஒன்னகரை பள்ளியின் காலை வழிபாட்டு சப்தம் மணியாச்சி பள்ளத்தில் உள்ளவர்களுக்கு லேசாகக் கேட்கும். மலைப்பகுதிகளில் தொலைதூரத்திற்கு கூப்பிடும் ஒலி கேட்பதை பலசமயம் நான் ஆச்சர்யத்துடன்


சட்லெஜ் நதி அமைதியாக ஓடியது

 

 ”பைத்தியக்காரக் கிழட்டு முண்டமே, இரண்டு நாட்களாக உன் தொல்லை தாங்க முடியவில்லை!” என்று கடுங் கோபத்துடன் சீறி விழுந்தான் இன்ஸ்பெக்டர். தனது மேஜை யின் மீது இருந்த நீளமான பிரம்பை எடுத்து, அந்த வயதான பெண்ணை அடிப்பதுபோலக் கை ஓங்கினான். அடுத்த நொடியே, தனது செயலால் வெட்கித் தலை கவிழ்ந்து, அந்தப் பிரம்பைத் தூக்கித் தூர எறிந்தான். காவல் நிலையத்தில் இருந்த பிற போலீஸார் தங்க ளின் பணிகளை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். இன்ஸ்பெக்டர் தனது எதிரில் நின்ற மூதாட்டியின் கண்களைக் காணச் சக்தியற்று,


அவளை நீங்களும் அறிவீர்கள்!

 

 நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு குளிர்ந்திருந்தது. வனத்தில் இருந்து புலி உறுமுவது போன்று தற்காலிகமாகக் காணாம்புற்களில் வேய்ந்த குடிசையில் இருந்து குறட்டை ஒலி. தூக்கம் காணாத முத்து அருளானந்தப்பிள்ளை, தனக்கு அருகில் புளித்த கள்ளின் போதையில்கிடக்கும் ஸ்மித்தைப் பார்த்தார். வெள்ளைக்காரனை அதட்ட முடியாத இயலாமையைத் தனக்குள் கடிந்துகொண்டே குடிசையில் இருந்து வெளியே வந்தார். ராமநாத சமஸ்தானத்துக் காவலர்கள் குடிசையின் முன் கணந்து


ஒரு கடல், இரு கரைகள்!

 

 ராமேஸ்வரம் தீவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், மண்டபத்தின் பாம்பன் கடற்பாலத்துக்குச் சற்று முன், அகதிகள் முகாம் உள்ளது. அது சாலையின் வலப் புறத்துக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரே மாதிரி கட்டப்பட்ட வரிசையான ஆயிரக்கணக்கான குடியிருப்புகளைக் கொண்டது. முகாமின் முன் புற வாயிலில் காவல் துறை சோதனைச் சாவடி உள்ளது. அதன் அருகிலேயே அகதி மக்களுக்கான தாசில்தார் அலுவல கமும் இயங்கி வருகிறது. முகாமில் உள்ள லைன் வீடுகள் தள்ளி பொது கழிப்பறைக்கூடம், அதன் பின் இடைவெளி, பின்