சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 5,891 
 

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

உடனே செந்தாமரை உடனே ”சுமதி.நான் உனக்கு தினமும் கணக்கு சொல்லி தறேன். நீ பத்தாவதிலே நிச்சியமா கணக்கிலே ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணுவே சுமதி” என்று சொன்னதும் சுமதி செந்தாமரையை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு “உண்மையாகவா செந்தாமரை நான் உன்னைக் கேட்டதும் நீ இவ்வளவு சீக்கிரமா எனக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க ஒத்துப்பே ன்னு நான் கனவிலும் நினைக்கலே.ரொம்ப ‘தாங்க்ஸ்’ செந்தாமரை. நீ பண்ண போற இந்த உதவியை நான் என் உயிர் உள்ள வரைக்கும் மறக்க மாட்டேன்”என்று தன் கண்களில் கண்ணீருடன் சொன் னாள் சுமதி.உடனே ”நீ என்னை ‘தாங்க்’ எல்லாம் பண்ண வேண்டாம் சுமதி.நான் நிச்சியமா உனக்கு கணக்கு சொல்லி தரேன்.அதுக்கு முன்னாடி நீ என்னைப் பத்தி நல்லா தொ¢ஞ்சுக்கோ.நான் ரொம்ப ஏழைப் பொண்ணு.சேத்துப் பட்டு குடிசையிலே நான் இருந்து வரேன்.என் அப்பா ஒரு சாதாரண தச்சரா ஒரு ‘கன்ட்ராகடர்’ கிட்டே வேலை செஞ்சி வறார்.என் அம்மாவும் ஒரு சித்தாளா வேலை செஞ்சி வறாங்க.நீயோ ரொம்ப பணக்காரப் பொண்ணு.உங்க வீட்டிலே உங்க அப்பா அம்மா இந்த சோ¢ப் பொண்ணு கிட்டே கணக்கு சொல்லிகிறதை ஒத்துப்பாங்களா.நீ இதை முதல்லே இதை யோஜ னைப் பண்ணு.நீ உங்க அப்பா அம்மா கிட்டே ‘நான் பத்தாவது கணக்கை எல்லாம் செந்தாமரை என் கிற ஒரு சேரிப் பொண்ணு கிட்டே கத்துக்கலாம் என்று இருக்கேன்’ ன்னு சொன்னவுடன் அவங்க இதை ஏத்துப்பாங்களா.நீ நல்லா யோஜனைப் பண்ணு.ஆனா நான் உனக்கு கணக்கு சொல்லிக் கொ டுக்க அவங்க ஒத்துக் கொண்டா,அதுக்கு நீ எனக்கு காலணா கூடத் தரவே வேணாம் சுமதி. நான் உனக்கு ‘ப்ரியா’ கணக்கு சொல்லித் தறேன்” என்று சுமதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் செந்தாமரை.உடனே சுமதி ”செந்தாமரை,நீ சாயங்காலம் என்னோடு என் காரிலேயே என் பங்களாவுக்கு வா.நீ எனக்கு கணக்குகளை சொல்லிக் குடு.கணக்கு’க்லாஸ்’ முடிஞ்ச அப்புறம நான் என் காரிலெ உன்னை உன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விடறேன் செந்தாமரை” என்று சொன்னாள்.”நீ பயப் படாதே செந்தாமரை.எங்க வீட்டிலே உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்று சொல்லி செந்தாமரைக்கு ¨தா¢யம் சொன்னாள் சுமதி.சுமதி பள்ளிக்கூடம் விட்டதும் செந்தா மரைக் கூட்டி கொண்டு வாசலில் காத்துக் கொண்டு இருக்கும் அவள் காரில் ஏறிக் கொண்டு அவள் பங்களாவுக்குப் போனாள்.பங்களாவுக்குள் நுழைந்த செந்தாமரை அந்த பங்களாவை மேலும் கீழும் மாறி மாறிப் பார்த்தாள்.‘சுமதி இவ்வளவு பெரிய ஒரு வீட்டிலா வாழ்ந்து வறா. எவ்வளவு பொ¢ய வீடு இது. இந்த வீட்டிலெ நூறு பேருக்கு மேலே இருந்து வரலாமே’ என்று யோஜனை பண்ணி கொண்டு இருந்த போது “செந்தாமரை,இது தான் என் அம்மா” என்று செந்தாமரைக்கு சொல்லி தன் அம்மாவை அறிமுகம் செய்து வைத்தாள் சுமதி.உடனே செந்தாமரை அந்த அம்மாவைப் பார்த்து ”வணக்கம்மா” என்று சொல்லி தன் கையைக் கூப்பி வணக்கம் தொ¢வித்தாள்.செந்தாமரை அந்த அம்மாவைப் பார்த் தாள்.நல்ல பட்டுப் புடவையைக் கட்டி இருந்தாள்.சுமதி “அம்மா,இவ தாம்மா செந்தாமரை.என் கூட படிக்கிற பொண்ணு. செந்தாமரை எட்டாவதிலே எங்க பள்ளி கூடத்திலே முதல் மாணவியா வந்து இருக்காம்மா.இப்போ ஒன்பதாவது கால் இறுதிப் பரி¨க்ஷயிலே இவ தாம்மா முதல் மார்க் வாங்கி இருக்கா.செந்தாமரை எல்லா கணக்கு பரிக்ஷயிலும் நூத்துக்கு நூறு மார்க் வாங்கி வறாம்மா.நான் இவளை எனக்கு கொஞ்சம் கணக்கு கத்துக் கொடுக்கச் சொன்னேன்மா.அதுக்கு இவளும் ஒத்துக் கிட்டு இன்னைக்கு என் கூட வந்து எனக்குக் கணக்கு சொல்லிக் குடுக்க இங்கே வந்து இருக்காமா. அவ எனக்கு கணக்குச் சொல்லிக் கொடுக்க தனக்கு காலணா கூட வேண் டாம்னு வேறே சொல்லி இருக்காம்மா” என்று சந்தோஷத்தில் சொல்லி செந்தாமரையை தன் அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் சுமதி.உடனே “அப்படியா,நீ சுமதிக்கு கணக்குக் கத்துக் குடுக்க உனக்கு காலணா கூட வேண்டாம்னா சொல்லி இருக்கே” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சுமதியின் அம்மா.உடனே செந் தாமரை “ஆமாங்க” என்று சொன்னாள்.

“நீ எட்டாவதிலே சுமதி படிக்கிற பள்ளிக்கூடத்திலே முதல் மாணவியா வந்து இருக்கியா மே.கணக்கிலே எப்போதும் நீ நூத்துக்கு நூறு மார்க வாங்கி வறயாமே.கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு செந்தாமரை.நீ பாக்கவும் ரொம்ப அழகா இருக்கே.நீ ஒரு ஐயர் வீட்டுப் பொண்ணா.உன் வீடு எங்கே இருக்கு.உங்க அப்பா என்ன வேலை செஞ்சு வறார்” என்று ஆச்சரியத்துடன் சுமதியின் அம்மா கேட்டதும் செந்தாமரை தன்னைப் பற்றின உண்மையைச் சொல்லி விட வேண்டும் என்று நினைத்து பயந்துக் கொண்டே “இல்லேம்மா.அம்மா,நான் ஒரு ஐயர் வீட்டுப் பொண்ணு இல்லே.நான் சேத்துப் பட்டு குடிசையிலே வாழ்ந்து வறேங்க.நான் ரொம்ப ஏழைப் பொண்ணுங்க.என் அப்பா ஒரு சாதாரண தச்சாரா ஒரு ‘கன்ட்ராக்டர்’ கிட்டே வேலை செஞ்சி வறார்.என் அம்மாவும் ஒரு ‘கன்ட்ராக்டர்’ கிட்டே சித்தாளா வேலை செஞ்சி வறாங்க” என்று சொன்னாள் செந்தாமரை.“ஓ அப்படியா செந்தாமரை. நீ சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடு. நீ அவளுக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்கிற வேளையாவது அவ நல்ல ‘பாஸ்’ மார்க் வாங்கி பத்தவது பாஸ் பண்ணட்டும்.அவ இந்த ‘க்வார்ர்டர் எக்ஸாம்லே’ முப்பத்தைஞ்சு மார்க் வாங்கி ‘பெயில்’ ஆகி இருக்கா.அவ கணக்கிலே ரொம்ப ‘வீக்’.நீ அவளுக்கு கணக்கு சொல்லிக் குடுத்தா அவளுக்கு அது நல்லா புரிஞ்சி அவ மெல்ல ‘பாஸ்’ மார்க் வாங்கட் டும்.நீ இப்ப பிடிச்சே அவளுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கிறதே ஆரம்பி” என்று சொல்லி விட்டு தன் செல் போனை எடுத்து அவள் ‘ப்ரென்ட்’ யாருடனோ பேச ஆரம்பித்தாள் சுமதியின் அம்மா. உடனே சுமதி செந்தாமரையை அழைத்துக் கொண்டு அவள் படிக்கும் அறைக்குப் போனாள்.சுமதி படிக்கிறதுக்குன்னு ஒரு தனி ரூம் இருக்கே’என்று நினைச்சு ஆச்சரியப்பட்டாள்.பிறகு சுமதியுடன் சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு இந்த வருஷ முதல் கணக்கு பாடத்தில் இருந்து சுமதிக்கு இருந்த சந் தேகங்களை எல்லாம் புரிய வைத்து கணக்கை சொல்லிக் கொடுத்தாள்.செந்தாமரை கணக்கு சொல்லி க் கொடுக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகி இருக்கும்.“இன்னைக்கு இது வரை போதும் செந்தா மரை.நான் நீ சொல்லிக் கொடுத்த கணக்கை எல்லாம் திருப்பிப் போட்டு பாக்கிறேன்” என்று சொல்லி விட்டு எழுந்தாள்.செந்தாமரையும் உடனே “ஆமாம் சுமதி,நீ நான் சொல்லிக் கொடுத்த கணக்குகளை எல்லாம் திருப்பிப் போட்டுப் பார். அப்போது தான் அவைகள் உன் மனைலே நல்லா பதியும்.நீ அந்த கணக்குகளில் மறுபடியும் எந்த வித தப்பும் பண்ணமாட்டே” என்று சொல்லி அவள் கூடவே எழுந்துக் கொண்டாள்.பிறகு சுமதி செந்தாமரையை அழைத்துக் கொண்டு ‘டைனிங்க் ஹாலுக்கு’ வந்தாள். சுமதியும் செந்தாமரையை ‘டைனிங்க் டேபிளின்’ எதிரில் போட்டு இருந்த ஒரு சேரில் உட்காரச் சொன்னாள்.செந்தாமரை ஒரு சேரில் உட்கார்ந்துக் கொண்டதும் சமையல்கார அம்மா ரெண்டு பேரு க்கும் சூடா மசால் தோசையையும்,தொட்டுக் கொள்ள சாம்பாரும்,சட்னியும் கொண்டு வந்து வைத் தாள்.உடனே சுமதி செந்தாமரையை பார்த்து “சாப்பிடு செந்தாமரை.உனக்கு போதலேன்னா சொல்லு. சமையல்கார அம்மா சூடா இன்னும் ஒரு தோசை போடுவாங்க” என்று சொல்லி மசால் தோசையை விண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.செந்தாமரை சுமதியைப் பார்த்து “எனக்கு டி·பன் எல்லாம் வேணாம் சுமதி.என்னை எங்க வீட்டுக்கு கிட்டே கொண்டு போய் விட்டு விட்டா போதும்.நான் என் குடிசை க்குப் போய் எங்க ஆயா குடுக்கிறதைச் சாப்பிட்டுக்கிறேன்”என்று சொல்லி எழுந்துக் கொண் டாள்.உடனே சுமதி செந்தாமரையின் கைகளைப் பிடித்து இழுத்து ”உக்கார்.நீ ரொம்ப அதிகம் ஒன் னும் சாப்பிட வேணாம்.இந்த தோசையை மட்டும் சாப்பிடு.சாப்பிட்டு முடிந்ததும் நான் உன்னை உங்க வீட்டுக்குக் கிட்டே எங்க கார்லே கொண்டுப் போய் விட்டு விட்டு வறேன்.வாசல்லே எங்க கார் ரெடியா இருக்கு” என்று சொன்னாள்.அந்த பக்கம் வந்த சுமதியின் அம்மா,செந்தாமரை உட்காராமல் இருந்ததைப் பார்த்ததும்,“இதோ பார் செந்தாமரை.நீ இந்த ஒரு மணி நேரம் சுமதிக்கு உன் தொண் டைத் தண்ணி போக சொல்லிக் கொடுத்ததை நான் பாத்தேன்.நீயோ சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடுக்கறதுக்கு காலணா கூட வேணாம்ன்னு சொல்லி இருக்கே.எங்க வீட்டு பலகாரத்தையாவது நீ சாப்பிட்டே ஆகணும்.சாப்பிடு செந்தாமரை” என்று வற்புறுத்தவே செந்தாமரை வேறு வழி இல்லாமல் அந்த மசால் தோசையை சாப்பிட்டு விட்டு அப்புறமா அந்த சமையல்கார அம்மா கொடுத்த கா·பியை யும் குடித்தாள்.செந்தாமரை சாப்பிட்டு விட்டு எழுந்து கைகளை கழுவிக் கொண்டு தன் குடிசை க்கு போக ரெடி ஆகும் போது பங்களா வாசலில் படகு போல ஒரு கார் வந்து நின்றது.அந்த காரில் இருந்து சுமதியின் அப்பா ‘கோட் சூட்டுடன்’ ஒரு ‘ப்¡£·ப் கேஸை’ எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து பங்களாவு க்குள் நுழைந்தார்.உடனே சுமதியின் அம்மா ஓடிப் போய் அவர் கிட்டே இருந்து ‘ப்ரீப் கேஸை’ வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டு “வாங்க, இன்னைக்கு சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட்டு இருக்கீங்களேங்க.மறுபடியும் எங்காவது வெளியே போக வேணுங்களா” ன்று கேட்டாள். அவர் உடனே ”ஆமாம்,ராதா நான் இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு ஒருத்தரை பார்க்க போகணும். அப்படிப் போன வர ரொம்ப லேட்டாகும்.அதான் இந்த ‘ப்ரீப் கேஸை’ பங்களாவிலே வச்சு விட்டு, உன் கிட்டே சொல்லிட்டு போகலாம்ன்னு தான் நினைச்சு பங்களாவுக்கு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சமையல் அம்மா சூடா ஆவி பொங்க கா·பியை கொண்டு வந்து அவர் கிட்டே கொடுத்தாள்.

உடனே ராதா ”கடவுள் தாங்க உங்களை இன்னைக்கு பங்களாவுக்கு சீக்கிரமா வர புத்திக் குடு த்து இருக்காரு.இதோ நிக்கறாளேங்க இந்தப் பொண்ணு.இவ பேரு செந்தாமரை.இவ நம்ம சுமதி ‘க்லாஸ்லே’ படிச்சு வறாங்க.நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க.இந்தப் பொண்ணு எட்டாவதிலே சுமதி படிக்கிற பள்ளிக்கூடத்திலே முதல் மாணவியா வந்து இருக்கா.இவ கணக்கிலே எப்போதும் நீ நூத்து க்கு நூறு மார்க தாங்க வாங்கி வறாங்களாம்.நம்ம சுமதி செந்தாமரையைப் பாத்து ‘நீ எனக்கு கொஞ்சம் கணக்கு கத்துக்குடுன்னு கேட்டாளாங்க.அதுக்கு இவளும் ஒத்துக் கிட்டு இன்னைக்கு சுமதி கூட வந்து சுமதிக்கு கணக்கு சொல்லி குடுக்க நம்ம பங்களாவுக்கு வந்து இருக்காங்க.அந்த மாதிரி சும திக்கு கணக்குச் சொல்லிக் கொடுக்க தனக்கு காலணா கூட வேணாம்னு சொன்னாங்களாங்க இந்த செந்தாமரை.நான் அவளெப் பாத்து ‘நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கே.நீ ஒரு ஐயர் வீட்டுப் பொண் ணா,உன் வீடு எங்கே இருக்கு, உங்க அப்பா என்ன வேலை செய்து வறார்’ன்னு என்று ஆச்சரியத் துடன் கேட்டேங்க.அதுக்கு செந்தாமரை ‘நான் ஒரு ஐயர் பொண்ணு இல்லே.நான் சேத்துப்பட்டு குடிசையிலே வாழ்ந்து வறேங்க.என் அப்பா ஒரு சாதாரண தச்சாரா ஒரு ‘கன்ட்ராகடர்’ கிட்டே வேலை செஞ்சி வறார்.என் அம்மாவும் ஒரு ‘கன்ட்ராக்டர்’ கிட்டே சித்தாளா வேலை செஞ்சி வறாங்க”ன்னு சொன்னாங்க.இப்ப ஒரு மணி நேரமா நம்ம சுமதிக்கு கணக்கு சொல்லி கொடுத்து இருக்காங்க” என்று தன் மூச்சை பிடித்து கொண்டு சொன்னாள்.உடனே ராஜன் “அப்படியா செந்தாமரே, ராதா சொல்றது எல்லாம் உண்மையா” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.செந்தாமரை தன் தலையை குனிந்து கொண்டு ”ஆமாங்க” என்று சொன்னாள்.“வொ¢ குட்’.நீ சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடுத்தா அவ நிச்சியமா கணக்கிலே நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணுவா.உனக்கு முடியும் போதெல்லாம் நீ தவறாம எங்க பங்களாவுக்கு வந்து சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடு” என்று சொன்னார் ராஜன். உடனே செந்தாமரை ”நான் வாரத்திலே ஐஞ்சு நாளும் இங்கே வந்து சுமதிக்கு நான் கணக்கு சொல்லி தறேங்க.மத்தவங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்குங்க. அவளுக்கு நான் நீச்சியமா கணக்கு சொல்லிக் குடுப்பேனுங்க.நான் இப்போ போய் வறேனுங்க” என்று தன் கையைக் கூப்பிச் சொன்னாள் செந்தாமரை.உடனே ராதாவும் ராஜனும் “ரொம்ப ‘தாங்க்ஸ் ம்மா’ உனக்கு” என்று சொல்லி செந்தாமரைக்கு நன்றி சொன்னார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் சுமதி செந்தாமாரையை கூட்டிக் கொண்டு காரில் ஏறி செந்தாமரை சொன்ன இடத் தில் விட்டு விட்டு “நான் போய் வறேன் செந்தாமரை.நீ ஜாக்கிறதையா உன் வீட்டுக்கு போ” என்று சொல்லி விட்டு காரில் கிளம்பி அவள் பங்களாவுக்குப் போனாள் சுமதி.காரில் இருந்து செந்தாமரை கீழே இறங்கி தன் புஸ்தகப் பையை எடுத்து கொண்டு பயந்துக் கொண்டு குடிசைக்கு வந்தாள்.

குடிசைக்குள் செந்தாமரை நுழைந்ததும் அம்மாவும் ஆயாவும் ”என்ன செந்தாமு,உன் பள்ளிக் கூடம் நாலரை மணிக்கு விட்டதும் நீ தினமும் குடிசைக்கு ஐஞ்சு மணிகெல்லாம் வந்துக் கிட்டு இருப்பே.இன்னைக்கு மணி ஏழடிச்சிடிச்சியும் நீ குடிசைக்கு இன்னும் வரலே.நானும் ஆயாவும் ரொ ம்ப பயந்துப் போயிடோம் செந்தாமு.நீ ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு குடிசைக்கு வந்து இருக்கே” என்று மிரட்டிக் கேட்டார்கள்.செந்தாமரை மிகவும் பயந்துப் போய் விட்டாள்.செந்தாமரை தன் கண்க ளில் கண்ணீர் மல்க ”ஆமாம்மா,இன்னைக்கு நான் பள்ளிக் கூடம் விட்டு குடிசைக்கு வர ரொம்ப நேர மாயிடிடுச்சி.நான் அதுக்கு என்ன காரணம்ன்னு சொல்றேம்மா.நீயும் ஆயாவும் என்னை தயவு செஞ்சி கோவிச்சிக்காதீங்க” என்று கெஞ்சி விட்டு “அம்மா என் பக்கத்து பென்ச்சிலே சுமதி சுமதின்னு ஒரு பொண்ணு படிச்சு வறா.இன்னைக்கு எங்களுக்கு கால் வருஷ பரி¨க்ஷயிலே நாங்க வாங்கின மார்க் தாள்களைக் கொடுத்தார் எங்க வாத்தியார்.அவ கணக்கிலே முப்பது மார்க் வாங்கி ‘·பெயில்’ ஆகி இருந்தா.அவ என்னைப் பாத்து’ செந்தாமரை,நீ எங்க வீட்டுக்கு வந்து எனக்கு கொஞ்சம் சொல்லி தர முடியுமான்னு கேட்டாம்மா.நானும் ‘சரி’ ன்னு சொல்லி அவ காரிலே அவ பங்களாவுக்கு போய் அவ ளுக்கு ஒரு மணி நேர கணக்குகளை எல்லாம் சொல்லிக் கொடுத்தேன்ம்மா.அவங்க எனக்கு சாப்பிட மசால் தோசையும் கா·பியையும் கொடுத்தாங்கம்மா.அப்புறமா சுமதி என்னை அவங்க கார்லே நம்ம குடிசைக்கு பக்கத்திலே கொண்டு வந்து விட்டாம்மா.அதாம்மா எனக்கு குடிசைக்கு வர நேரமாச்சு” என்று சொல்லி விட்டு பயந்துக் கொண்டே நின்றுக் கொண்டு இருந்தாள் செந்தாமரை.“செந்தாமு,நீ பாக்க ரொம்ப அழகா இருக்கே.நீ ‘வயசுக்கு’ வந்த பொண்ணு வேறே.இப்படி எல்லாம் நீ அந்த பணக் காரங்க பங்களாவுக்கு எல்லாம் தனியா போவாதீம்மா.இப்படித் தான் கனக்கு சொல்லிக் குடுக்க கூப்பிடுவாங்க.அப்புறமா இந்த சினிமாவிலே வற மாதிரி உன்னை ‘ஆசை காட்டி’ உனக்கு சாப்பிட வாய்க்கு ருசியா நிறைய குடுத்து உன்னைக் ‘கெடுத்து’ விடுவாங்க.நல்ல வேளை.நீ உண்மையைச் சொல்லிட்டே.உனக்கு ஒன்னும் ஆவலையேம்மா.இனிமே அந்த பங்களாவுக்கு எல்லாம் போவாதே ம்ம்மா” என்று சொல்லி செந்தாமரையைக் கட்டி கொண்டாள் ரத்தினம்.‘சரி,இப்போதைக்கு நாம் சும்மா இருந்து வரலாம்.அம்மா என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.அப்புறமா நாம நம்ம ஆசையைச் சொல்ல லாம’ என்று நினைத்து சும்மா இருந்தாள் செந்தாமரை.தேவி செந்தாமரை சொன்னதைக் கேட்டதும் அவள் உடனே செந்தாமரையைப் பார்த்து “ஏன் செந்தாமு,நீ போன அந்த பங்களாவிலே ஏதாச்சும் வயசு ஆம்பளை பசங்க இருந்தாங்களா” என்று கேட்டாள்.உடனே செந்தாமரை “இல்லே, ம்மா.நான் சுமதிக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க போன போது அந்த பங்களவிலே வயசு ஆம்பளை பசங்க யாரும் இல்லே.தவிர சுமதி என் கிட்டே பேசி கிட்டு இருக்கும் போது அவ அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணுதான்னு சொன்னாம்மா” என்று சொன்னாள்.”சரி,உனக்கு அந்தப் பொண்னு சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடுக்க பிடிச்சி இருக்கா” என்று கேட்டாள் தேவி.உடனே “அம்மா,எனக்கு மத்த வங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுக்கிறது ரொம்ப பிடிச்சி இருக்கும்மா.நான் நல்லா படிச்சி ‘பாஸ்’ பண்ணின பிறகு ஒரு நல்ல பள்ளிக் கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியாரா வேலைக்கு சேந்து, நிறைய ஏழை குழந்தைகளுக்கு எல்லாம் கணக்கு சொல்லிக் குடுக்க வேணும்ன்னு தாம்மா என் ஆசை.இப்போ நான் சுமதிக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும் போது என் மனசு ரொம்ப சந்தோஷப் படுதும்மா” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டே சொன்னாள் செந்தாமரை.”அப்படியா செந்தாமு. உனக்கு இந்த சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடுத்து வறது ரொம்ப பிடிச்சி இருந்தா,நீ அந்த சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடு.ஒன்னும் தப்பு இல்லே.ஆனா ஆயா சொன்னது போல நீ ரொம்ப அழகா இருக்கே.நீ ‘வயசுக்கு’ வந்த பொண்ணு வேறே.நீ எங்கே இருந்தாலும் நீ ரொம்ப ஜாக்கிறதையா இருந்து வா உனக்கு நீ இருக்கிற இடம் ஆபத்துப் போல இருந்தா அங்கே போகவே போவாதே” என்று சொன்னாள் தேவி. ”சரிம்மா,நான் எப்போதும் ரொம்ப கவனமா இருந்து வறேன்” என்று சதோஷமாக பதில் சொன்னாள் செந்தாமரை.தன் மனதுக்குள்ளே சந்தோஷப் பட்டாள் செந்தாமரை.“அது என்ன தேவி,நான் ‘அங்கெல்லாம் போவாதே’ ன்னு’ சொல்லி கிட்டு இருக்கேன்,நீ என்னடான்னா அவளைப் பாத்து ‘நீ போய் வா’ ன்னு சொல்றே.உனக்கு மூளை ஏதாச்சும் கெட்டு போச்சா” என்று கத்தினாள் ரத்தினம்.உடனே தேவி “நான் தொ¢ஞ்சு தான் அவ ரொம்ப ஆசைப் படறாதலே ‘போய் வா’ ன்னு சொன்னேன்.அதிலெ எனக்கு ஒன்னும் தப்பு இருக்கிறதா தெரியலே”என்று ஒரு எதிர் கத்தல் போட்டாள்.அதற்கு பிறகு ரத்தினம் ஒன்னும் பேசாமல் இருந்து விட்டாள்.

சேகர் கமலாவை தவறாமல் அருகில் இருந்த கார்பரேஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் ‘செக் அப்’ பண்ணிக் கொண்டு வந்து கொண்டு இருந்தான்.கமலாவுக்கு ரொம்ப மாசம் ஆகி விடவே ரத்தினம் கமலா குடிசைக்குப் போய் அவளுக்கு உதவிகள் செய்து வந்தாள்.ஒரு நாள் அதி காலையில் கமலாவுக்கு பிரசவ வலி எடுத்ததால் சேகர் உடனே கமலாவை கார்பரேஷன் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, கமலாவின் அப்பா அம்மாவுக்கு சமாசாரத்தை வந்து சொன்னான்.உடனே ராஜ்ஜும் தேவியும் வேலைக்குப் போகாமல் சேகருடன் கிளம்பி கார்பரேஷன் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தார்கள். செந்தாம ரைக்கும் ரத்தினத்துக்கும் ‘கமலாவுக்கு சுகப் பிரசம் ஆகி அவ சௌக்கியமா இருந்து வரணுமே’ என்று கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.நேரம் ஆகி விடவே செந்தாமரை ஆயா கிட்டே சொல்லி விட்டு பள்ளிக் கூடம் போனாள்.அவள் பள்ளிக் கூடம் கிளம்பிப் போனாளே,ஒழிய அவள் மனசு பூராவும் கமலாவைப் பத்தியே நினைத்துக் கொண்டு இருந்தது.

சாயங்காலம் தன் குடிசைக்கு வேகமாக வந்ததும் ஆயா சமைத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்த செந்தாமரை “ஆயா,கமலாவுக்கு குழந்தை பொறந்திடுச்சா”என்று ஆவலோடு கேட்டாள். உடனே ரத்தினம் ”ஆமா செந்தாமரை, பதினோறு மணிக்கு கமலாவுக்கு சுகப் பிரசவம் ஆயி, அவளுக்கு ஒரு பொண்ணு பொறந்து இருக்குன்னு சொல்லிட்டு உன் அப்பா அரை நாள் வேலை க்குப் போனாரு.உன் அம்மா கமலா கூடவே ஆஸ்பத்திரியிலே இருக்காங்க.கமலாவுக்கு உடம்பு கொஞ்சம் சரி ஆனதும் ராத்திரிக்குள்ளே உங்க அம்மா குடிசைக்கு வந்து விடுவாங்கன்னு நினைக் கிறேன்” என்று சொல்லி கொண்டே சாதத்தை வடிய போட்டாள்.”அப்பாடா,ஒரு வழியா அக்காவுக்கு ஒரு குழந்தை பொறந்திடுச்சின்னு கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆயா.நான் ஆஸ்பத்திரிக்கு போய் அக்காவை பார்த்து விட்டு வரட்டுமா ஆயா” என்று சொல்லி விட்டு ஆஸ்பத்திரிக்குப் போக கிளம்பினாள் செந்தாமரை. உடனே ரத்தினம் ”வேணாம்,செந்தாமு.கமலாவை பாக்க நீ போனா உன்னை அந்த ஆஸ்பத்திரியிலே உள்ளே விட மாட்டாங்க.நீ ஆஸ்பத்திரிக்கு போக வேணாம்”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது தேவி குடிசைக்குள் வந்தாள்.செந்தாமரை ஓடிப் போய் “அம்மா, அக்காவுக்கு குழந்தை பொறந்து இருக்குதுன்னு ஆயா சொன்னாங்கம்மா.குழந்தை எப்படி இருக்கு ம்மா.அக்கா எப்படி இருக்காம்மா.குழந்தை யார் ஜாடைம்மா.அக்கா ஜாடையா இல்லை,மாமா ஜாடையா” என்று கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டாள் செந்தாமரை.தேவி நிதானமா “செந்தாமு, கமலா குழந்தை ரொம்ப நல்லா இருக்கு.இப்ப குழந்தை யார் ஜாடைன்னு சொல்ல முடியாது. போவப்,போவத்,தான் தொ¢ய வரும்.ஆனா கமலா தான் ரொம்ப வீக்கா இருக்கா.அதனால் அந்த ஆஸ்பத்தியிலே இருந்த டாக்டர் கமலாவை இன்னைக்கு ஒரு நாள் வச்சுக் கிட்டு நாளைக்கு கமலாவை குழந்தையோடு வூட்டுக்கு அனுப்பி விடுவாங்க” என்று சொல்லி விட்டு தன் கை கால் களை கழுவ போனாள்.அடுத்த நாள் சாயங்காலம் செந்தாமரை சுமதிக்கு கணக்கு சொல்லிக் கொடுத்து விட்டு தன் குடிசைக்கு வந்ததும் புஸ்தகப் பையை வைத்து விட்டு கமலா குடிசைக்குப் போய் கமலாவையும் குழந்தையையும் பார்க்கப் போனாள்.கமலா குடிசைக்குப் போய் செந்தாமரை கமலாவையும் அவளுக்குப் பொறந்த குழந்தையை பார்த்தாள்.செந்தாமரை கமலாவைப் பார்த்து “அக்கா,உங்க குழந்தை பார்க்க ரொம்ப நல்லா இருக்குது.குழந்தை மாமா ஜாடை போல இருக்கு இல் லேக்கா”என்று கேட்டு குழந்தையின் கை விரல்களைத் தடவிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கமலாவின் மாமியார் செந்தாமரையைப் பார்த்து ”செந்தாமரை,நீ நாளுக்கு நாள் ரொம்ப அழகாயிட்டு வறே.எப்ப உனக்குக் கல்யாணம் பண்ணப் போறாங்க உங்க அம்மா அப்பா” என்று கேட்டு செந்தா மரையைப் பார்த்தாள்.செந்தாமரை ”என் படிப்பு இன்னும் முடியலீங்க” என்று மொட்டையாக சொல்லி விட்டு சும்மா இருந்தாள்.“அப்ப உன் படிப்பு முடிஞ்சப்புறம் தான் உன் கல்யாணமா.உன் படிப்பு முடியறதுகுள்ளாற உன் அழகு எல்லாம் உன்னே விட்டுப் போய் விடப் போவுது.நீ உன்னை போல நல்லா,அழகா,படிச்சு இருக்கிற ஒருத்தரை பாத்து சீக்கிரமா கல்லாணம் கட்டிக்க செந்தாமரை” என்று விடாமல் சொல்லி கொண்டு இருந்தாள் செங்கமலம்.செந்தாமரை வெறுமனே சிரித்து கொண்டு ஒன்னு சொலாமல் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.அந்த நேரம் பார்த்து வெளியே போய் இருந்த சேகர் குடிசைக்கு வரவே,கமலா கிட்டேயும்,செங்கமலத்துக்கு கிட்டேயும், மாமா கிட்டே யும்,சொல்லி கொண்டு தன் குடிசைக்கு வந்து விட்டாள் செந்தாமரை.குடிசைக்கு வந்த செந் தாமரை தன் அம்மா கீட்டேயும் ஆயா கிட்டேயும் கமலாவின் மாமியார் தன்னிடம் பேசினதை எல்லாம் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாள்.செந்தாமரை வருத்த படுவதை பார்த்த தேவி ”நீ வருத்தப் படாதே செந்தாமு.உலகம் பல விதமா சொல்லும்.நீ கவலையே படாதே.நீ எவ்வளவு படிப்பு படிக்க ஆசை படறயோ அவ்வளவு படிப்பு நீ நல்லா படிச்சு வா.நீ எப்ப கல்யாணம் பண்ணி கொள்ள ஆசை படற யோ அப்ப சொல்லு.நாங்க உனக்கு கல்லாணம் பண்ணி வக்கிறேன்.இப்ப நீ நிம்மதியா உன் பாடங் களை படிச்சு வா” என்று சொல்லி செந்தாமரைக்கு ¨தா¢யம் கொடுத்தாள் தேவி.அம்மா சொன்னதை கேட்டு சந்தோஷப் பட்டாள் செந்தாமரை.கமலாவும்,சேகரும்,பிறந்த பெண் குழந்தைக்கு ராணீ என்று பெயர் வைக்கத் தீர்மானித்தார்கள்.பதினோராம் நாள் குழந்தைக்கு பேர் வைக்கும் விழாவுக்கு எல்லா உறவுக்காரர்க¨ளையும்,குடிசைக்கு வரச் சொல்லி விட்டு குழந்தைக்கு ராணி என்கிற பேரை வைத்து விட்டு, எல்லோருக்கும் பலகாரமும் ‘டீயும் கொடுத்தார்கள் சேகரும் கமலாவும்.

அவளுக்கு அரை ஆண்டு பரிக்ஷகள் ஆரம்பித்து விட்டது.வழக்கம் போல செந்தாமரை எல்லா பரிக்ஷகளையும் மிக நன்றாக எழுதி வந்தாள்.சாயங்காலம் அம்மா குடிசைக்கு வந்தவுடன் செந்தாமரை அவ அம்மா கிட்டே “அம்மா,இப்ப பள்ளிக் கூடம் லீவு விட்டு இருக்காங்களேன்னு நினைச்சு,நான் மத்தியானம் அக்கா குடிசைக்குப் போய் அக்காவுக்கு நம்மால் முடிஞ்ச உதவியைப் பண்ணி வரலாம்ன்னு போனேம்மா.அப்போ அக்கா மாமியர் என்னைப் பாத்து ‘என் அக்காப் பையன் ஒருத்தன் கல்யாண வயசிலே இருக்கான்.அவ பாக்க ரொம்ப நல்லா அழகா இருப்பான்.அவன் கொ ஞ்சம் வசதி ஆனவன் கூட.நீ மட்டும் ‘சரி’ ன்னு சொன்னா போதும் அவ உங்க அம்மா அப்பா கிட்டே பணம் எதுவும் கேக்காம,அவன் செலவிலே உன்னை கல்லாணம் கட்டிப்பான்.உனக்கு சம்மதாமா சொல்லு.நான் இன்னைக்கே அவனுக்கு போன்லே பேசி உங்க வூட்டுக்கு வந்து உங்க அம்மா அப்பா கிட்டே’பொண்ணு’ கேக்க சொல்றேன்’ ன்னு கேட்டாங்கம்மா.அதுக்கு நான் பதில் சொல்லாமம ’நான் போய் வறேங்க’ன்னு சொல்லிட்டு வந்தேம்மா”என்று சொன்னாள் செந்தாமரை.கொஞ்ச நேரம் ஆன தும்“ செந்தாமு,இனிமே நீ கமலா வூட்டுக்கே போக வேணாம்.அந்த அம்மாவை பாக்க வர எவனாவது உன்னேப் பாத்து விட்டு, ‘ஜொள்ளு’ விட்டுகிட்டு, இங்கே வந்து ‘நான் இப்படி’,’நான் அப்படி’ன்னு பெருமை பீத்திக் கிட்டு,உன்னை பொண்ணு கேக்க வருவான். இங்கே இருக்கிறவங்களும் அவன் சொல்றதை நம்பி, உன்னை கல்லாணம் ‘கட்டிக்க’ ‘கட்டிக்க’ ன்னு தொந்தரவு செய்வாங்க”என்று கடு மையாக சொன்ணாள்.செந்தமரைக்கு ‘தன் அம்மா இப்படி கடுமையாகப் பேசி வருவதால் தான் ஆயாவும் அப்பாவும் நம்மை அவங்களுக்கு தொ¢ஞ்ச எவனுக்காவது நம்மைக் கல்யாணம் கட்டி வை க்க பயப்படுவாங்க.இதனால் நாமும் நிம்மதியாக படிச்சு வர முடியும்’ என்று நினைத்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டு வந்தாள்.

அரை ஆண்டு லீவு முடிந்து செந்தாமரை பள்ளி கூடம் போனாள்.அவள் ‘க்லாஸ்’ வாத்தியார் எல்லா ‘ஸ்டூடண்ட்ஸ¥ம்’ என்ன,என்ன,மார்க் வாங்கி இருக்கிறார்கள் என்று அவர்கள் விடைத்தாள் களை எடுத்து வைத்துக் கொண்டு படித்தார்.இந்த பரிக்ஷயிலும் செந்தாமரை எல்லா ‘சப்ஜெக்டிலும்’ முதல் மார்க் வாங்கி இருந்தாள்.கணக்கில் வழக்கம் போல இந்த பரி¨க்ஷயிலும் அவள் நூத்துக்கு நூறு மார்க் வாங்கி இருந்தாள்.‘க்லாஸ்’ வாத்தியார் செந்தாமரைக் கூப்பிட்டு “செந்தாமரை,வழக்கம் போல இந்த பரி¨க்ஷயிலும் நீ தான் எல்லா செக்ஷனிலும் முதல் மாணவியா மார்க் வாங்கி இருக்கே.நீ இதே போல நல்லா படிச்சு பத்தாவது ‘போர்ட்’ பரி¨க்ஷயிலும் முதல் மார்க் வாங்கி சென்னை மாநிலத்திலே யே முதல் மாணவியா வந்து,இந்த பள்ளீக்கூடத்திற்கும்,உனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த எல்லா வாத்தியார்களுக்கும் பெருமையையும்,புகழையும்,தேடி தரணும்”என்று கேட்டதும் செந்தாமரை உடனே “நீங்க கவலையே படாதீங்க சார்.நான் நல்லா படிச்சு சென்னை மாநிலத்தி லேயே முதல் மாணவியா நிச்சியமா வந்து காட்டறேன்” என்று சொன்னாள்.சுமதி செந்தாமரை கைகளைப் பிடித்துக் கொண்டு “செந்தாமரை,நீ எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்ததால் தான் நான் இந்த பரி¨க்ஷயிலே கணக்கிலே நாப்பத்தஞ்சு மார்க் வாங்கி ‘பாஸாயி’ இருக்கேன்.ரொம்ப ‘தாங்ஸ்’ செந்தாமரை”என்று சொல்லி செந்தாமரையை ‘தாங்க்’ பண்ணீனாள்.குடிசைக்கு வந்ததும் தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு வந்து செந்தாமரை ஆயாவிடம் ”ஆயா,நான் தான் இந்த பரிஷையிலும் எல்லரையும் விட நிறைய மார்க் வாங்கி முதல் மாணவியா வந்து இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது தேவியும் ராஜ்ஜும் குடிசைக்கு உள்ளே வந்தார்கள்.அவர்களை பாத்து செந்தாமரை “அம்மா, அப்பா,நான் தான் இந்த அரை வருஷ பரிஷையிலும் எல்லரையும் விட நிறைய மார்க் வாங்கி முதல் மாணவியா வந்து இருக்கேன்” என்று சந்தோஷத்தில் சொன்னாள்.உடனே தேவி “அப்படியா செந்தாமு.எனக்கு கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீ இதே போல நல்லா படிச்சு வந்து பத்தாவது கடைசி பரி¨க்ஷயிலும் முதலாவதா வரணும்” என்று சொல்லி செந்தாமரையின் முதுகில் தட்டி சொன்னாள்.ராஜ்ஜும் தன் பங்குக்கு ”செந்தாமு,அம்மா சொல்றா மாதிரி நீ ரொம்ப நல்லாப் படிச்சு பத்தாவதிலே முதல் மாணவியா வந்து, நீ ஒரு நல்ல வேலையிலே சேர்ந்து சம்பாதிச்சு வரணு ம்ம்மா” என்று சொன்னான்.

பத்தாவது முழு ஆண்டு பரி¨க்ஷகள் ஆரம்பித்து விட்டு இருந்தது.செந்தாமரை தினமும் பள்ளிக் கூடத்திற்குப் போகும் வழியில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய் நன்றாக கடவுளை வேண்டிக் கொண்டு போய் தன் பரி¨க்ஷகளை எல்லாம் எழுதி வந்தாள்.செந்தாமரை எல்லா பரி¨க்ஷ களையும் மிகவும் நன்றாக எழுதி இருந்தாள்.

அன்று பத்தாவது ‘ரிஸல்ட்’ வரும் நாள்.செந்தாமரை பள்ளிக் கூடத்திற்கு போகும் போது வழியில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரை நன்றாக வேண்டிக் கொண்டு பள்ளிக் கூடம் போனாள்.எல்லா மாணவர்களும்,மாணவிகளும் ஹாலில் ‘நமக்கு என்ன மார்க் வரு மோ,‘நாம் பாஸ் ஆகி இருப்போமோ’ என்று மனம் பதை பதைத்துக் கொண்டு நின்றுக் கொண்டு இரு ந்தார்கள்.மணி சரியாக பத்து அடித்ததும் பள்ளிக்கூட பிரின்சிபால் தன் ரூமை விட்டு வெளியே வந்து தன் கண்ணாடியை கழட்டி விட்டு “இந்த தடவை செந்தாமரை சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்து நம்முடைய பள்ளிக் கூடத்திற்கு பெருமையையும் புகழையும் கொடுத்து இருக்கி றாள்.எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு.’கங்கிராஜுலேஷன்ஸ்’ செந்தாமரை”என்று சொல்லிக் கொண்டு ஹால் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கி வந்து செந்தமரையின் கைகளைப் பிடித்து குலுக்கினார்.உடனே எல்லா வாத்தியார்களும் செந்தமரையின் கைகளை பிடித்துக் கொண்டு “‘கங்கிராஜுலேஷன்ஸ்’ செந்தாமரை. எங்களுக்கு எல்லாம் பெருமையையும் புகழையும் கொடுத்து இருக்கே”என்று சொல்லி விட்டு செந்தாமரையின் கைகளை பிடித்து குலுக்கினார்கள். செந்தாமரைக்கு ‘பிரின்ஸிபால்’ சொன்னதை ரெண்டு நிமிஷம் நம்பவே முடியவில்லை.செந்தாமரையின் மனம் ஆகா யத்தில் பறந்தது.கொஞ்ச நேரம் ஆனதும் மெதுவாக கீழே இறங்கி இந்த உலகத்திற்கு அவள் மனம் வந்தது.’நாம் நினைத்த காரியத்தை பண்ணி முடிக்க அருள் புரிந்த பிள்ளையாருக்கு மனதார தன் நன்றியை தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.அப்போது அங்கு வந்த சுமதி ”நான் உனக்கு என் மனமார்ந்த நன்றியே சொல்றேன் செந்தாமரை.நானும் அறுபது மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக் கேன்”என்று தன் கண்களில் கண்ணீர் மல்க சொல்லி விட்டு, ”என் அம்மாவும் அப்பாவும் உன்னை இன்னைக்கு பகல் சாப்பாட்டுக்கு எங்க பங்களாவுக்கு வரச் சொல்லி இருக்காங்க.நீ எனக்கு கணக்கு சொல்லிக் குடுத்ததுக்கு அவங்க இந்த ஒரு கைமாறையாது உனக்கு செய்யணும் ரொம்ப ஆசைப் பட்டு என் கிட்டே காலையிலே நான் பள்ளிக் கூடம் கிளம்பும் போது சொல்லி அனுப்பினாங்க.அத னால்லே நீ மறுப்பு ஒன்னும் சொல்லாம என் கூட எங்க பங்களாவுக்கு வந்தே ஆகணும்” என்று செந் தாமரையின் கைகளைப் பிடித்து கண்களில் கண்ணீர் தளும்ப கேட்டாள் சுமதி. உடனே செந்தாமரை ”சரி,சுமதி.நான் உங்க பங்களாவுக்கு மதியம் சாப்பிட நிச்சியமா வறேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது பியூன் செந்தாமரையை பார்த்து “உன்னை,நம்ம மூர்த்தி வாத்தியார் உடனே அவர் ரூமுக்கு வரச் சொன்னார்” என்று சொன்னதும் செந்தாமரை சுமதியைப் பார்த்து “சுமதி, நீ இங் கேயே இரு.மூர்த்தி வாத்தியார் என்னைக் கூப்பிடுகிறார்.நான் அவர் ரூமுக்குப் போய் அவர் எதுக்கு என்னை கூப்பிட்டார் என்று தொ¢ஞ்சுக்கிட்டு வறேன்”என்று சொல்லி விட்டு வேகமாக மூர்த்தி வாத்தியார் ரூமுக்கு போனாள்.செந்தாமரைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.மூர்த்தி வாத்தியார் ரூமில் சுந்தரம் பிள்ளை உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.அவர் உடனே செந்தாமரையை பார்த்து “செந்தாமரை,என் ஆசை வீண் போகலே.‘கங்கிராஜுலேஷன்ஸ்’.நீ சென்னை மாநிலத்திலே பத்தாவது வகுப்பிலே முதல் மாணவியாக வந்து எனக்கு பெருமையையும் புகழையும் வாங்கிக் குடுத்து இருக்கேம்மா.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.மூர்த்தி வாத்தியார் எனக்கு போன் பண்ணி இந்த சந்தோஷ சமாராத்தைச் சொன்னவுடனே நான் என் பள்ளிக் கூடத்தை விட்டு உடனே இங்கே ஓடி வந்து இருக்கேம்மா” என்று சொல்லி செந்தாமரையின் கைகளைப் பிடித்து குலுக்கினார்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *