கதையாசிரியர் தொகுப்பு: சொ.பிரபாகரன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

லிட்மஸ் நிறம் காட்டினால்….

 

 “லிட்மஸ் தெரியுமா? அமிலத்தில் ஒரு நிறம் காட்டும். அதுவே அல்கலினா வேற நிறம் காட்டும். அது மாதிரி மனுசாளோட நிறத்தையும் காட்ட ஏதாவதொரு நிறக்காட்டி ஒண்ணு வேணும்” ராகவன் சார் இப்படிதான் அடிக்கடி ஏதையாவது பிலாசபிக்கலாய் சொல்லி வைப்பார். ஆனால் கல்யாண் அதை வழக்கமாய் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் இன்று தலைக் கலைந்து, முகம் சோர்ந்து, பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாய் சார் தோற்றம் அளித்தார். “ராகவன் சார், மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க.. அமைதியாய் இருங்க.. எல்லாம் நாளா


சுமங்கிலி நோம்பு

 

 சீமா காலையில் விழிப்பதற்குத் தாமதம் ஆகிவிடும். வக்கீல் தொழில் பார்த்தால், இப்படி நேருவது சகஜம்தான். பகல் முழுசும், நேரம் நீதிமன்றத்தில் போய்விடும். அதற்குப் பின்னர், கட்சிகாரர்களுடன் வழக்குச் சம்பந்தமாய் பேச ஆரம்பித்தால், முடிப்பதற்கு நடுச்சாமம் கடந்துவிடும். பிறகு தூங்கி விழிப்பதற்கு, தாமதமாவது வாஸ்தவம்தான். படுக்கையில் ராகேஷ் இன்னும் இருக்கிறாரா எனக் கண்ணைத் திறக்காமல் தடவிப் பார்த்தாள். ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே எழுந்துப் போயிருந்திருப்பார் போலிருந்தது. படுக்கைக் கதகதப்பு இல்லாமல், குளிர்ந்துப் போயிருந்தது. எழுந்து, டிரஸ்சிங் டேபிளுக்கு ஓடினாள்.


ஒப்புதல் வாக்குமூலம

 

 ஆமாம், நான்தான் இதை செய்தேன். ராம்பூர் போயலியாவில் வசிப்பவனும் கோபேஷ் ரஞ்சன் பக்க்ஷியின் மகனுமான சாட்சாத் பாபேஷ் ரஞ்சன் பக்க்ஷி என்றழைக்கப்படும் நான்தான் இதைச் செய்தேன். அதுவும் மிகவும் தெளிவான மனநிலையில் செய்தேன். நான் எனது குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். இந்த மாபாதகத்தை செய்ததிற்கு தண்டனை என்ன என்பதுவும் எனக்குத் தெரியும். யாருடைய வற்புறுத்தலோ. தூண்டுதலோ இல்லாமல், நானாகவே முன்வந்துதான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை தருகிறேன். நான் பாவம் செய்துட்டேன். இன்ஸ்பெக்டர்!! சரி, இப்போ நீங்களே சொல்லுங்கோ.


மத்தியதர வர்க்கத்து அண்ணாச்சி

 

 ராமசாமி அண்ணாச்சியிடம் இருந்து, அவரது மகனுக்குக் கல்யாணம் என்று திருமண பத்திரிகை லக்னோ அலுவலகத்துக்கு வந்திருந்தது. உடனே அண்ணாச்சி எங்க அகக்கண்களில் அப்படியே சதையும் உயிருமாய் விரிந்தார். அவர் இங்கிருந்து போய் ஒரு பத்து வருசம் இருக்குமா? இருக்கும்.. இங்கிருந்து போவதற்கு முன்னாடி, அவர் அந்தக் கடைசி வாரம் செய்த ரகளை, ஒரு காவியத்தன்மைக் கொண்டது.. முதலில் ஒரு கடுதாசியுடன் ரீஜினல் மேனேஜர் அறைக்குள் போனார். இந்த நரக வேதனை வேண்டாமென, வாலண்டரி ரிடையர்மெண்டல் போக, அப்ளிகேசன்


சுரங்கப்பாதை

 

 லக்னோ வந்தப்பறம் எனக்கு அறிமுகமான கிராமியப் பாடகர் பூவன். “பாருங்க பிரபாகர்! என்னைப் பற்றி என்னிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு, அதைத் தீசிஸாக ‘பூவனின் கிராமியப் பாடல்கள்’னு எழுதி, பல்கலைக்கழகத்தில் கொடுத்து, முனைவர் பட்டம் வாங்கி, தங்களுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் அவங்களை விடவும் கிராமியப் பாடல்களைப் பற்றி நன்றாக தெரிந்த நான், இன்னும் நடுத் தெருவில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அல்லாடிகிட்டிருக்கேன்..” என்று ஆத்திரத்துடன் சொன்னார். வீட்டுமுற்றத்தில் உட்கார்ந்து, அவர் முறையிடுவதைக் கேட்பதே


அற்புதம் புரிதல்

 

 நான் என்னைப் பெரிய பராக்கிரமசாலி, தொழிற்சங்கவாதி என நினைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மேலே போய், இயேசுவைப் போல அற்புதங்கள் புரியும் வல்லமை கூட எனக்கு உண்டு என நம்பினேன். எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் வரும் வரைக்கும், நாம் நம்மை இப்படிதான் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் என் மனைவியோ, இந்தப் பம்மாத்து நினைப்புகளை எல்லாம் நம்புவது இல்லை. சும்மா வேலையில்லாது உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை, தொழிற்சங்க வேலைகளை நான் பார்க்கக்கூடாது என்பது எனது நிர்வாகத்தின் சித்தம். ஆகவே லக்னோ


பைத்தியக்காரத்தனமான காரியங்களை, பைத்தியங்கள் செய்வதில்லை….

 

 தேரிக்காடு… செம்மண் குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.. அங்குமிங்கும் குட்டையாய் வளர்ந்து கிடக்கும் கொல்லாம் மரங்களும், நெட்டையாய் வளர்ந்திருக்கும் பனை மரங்களும்.. இது தவிர்த்து, கருவேலமும், ஒடைகளும்.. ஒடைநெற்றைத் தட்டி, ஆட்டுக்கு மேய்ப்புக் காட்டிக் கொண்டிருக்கும் கோவணம் பாய்த்த சிறுவர்கள்.. அந்தச் சிறுவர்களில் ஒருவன்தான் இந்தச் சிலுவை. “இப்ப நாம்ப நிக்றோம்லே, இதுதான் உச்சித்தேரி…” என்றார் நயினாத் தாத்தா. “இதுதான் தேரியிலேயே உசரமான எடம்.. இங்கின நின்னுப் பாத்தா, நம்ப செந்தூர் கோபுரம் தெரியும்.. நாசரேத் சோடாபாட்டில்


வைத்தியம்

 

 பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை, தற்கொலை செய்வதற்குக் கீழே பாய்கிறேன் என்று அவர் தவறுதலாக எடுத்துக் கொண்டார். அவரது புருவங்கள் உயர்ந்து, நெற்றி சுருங்கியது. அவர் என் மேல் கோபப் பட்டார் என்று சொல்ல முடியாது; ஆனால் வருத்தப் பட்டிருந்திருப்பார். கண்டிப்பாக பதைத்துப் போயிருந்தார். பஸ்ஸிருந்து இறங்கியதும், சபர்பன் ரயிலைப் பிடிக்க, ஸ்டேசனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நான் வேளச்சேரி ரூட்டில்,


கண்ணாமூச்சிப் பிரார்த்தனை

 

 காலையில் எழுந்ததும் கோயிலுக்குச் சென்று செüடேஸ்வரர் முன்னின்று பிரார்த்தனைச் செய்ய வேண்டுமென சரண் முடிவெடுத்திருந்தான். மனசு சஞ்சலமாய் இருக்கையில் கடவுள்தானே வழி காட்டணும்? கோயிலுக்குள் நுழையும்போது, கருவறை வரைக்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூஜை துவங்கியது. ஒருவர் சங்கு ஊத, சிலர் கோயில் மணிகளைக் கணீரென ஒலித்தனர். தீபம் காட்டும் போது பரவசம் உச்சக்கட்டம் அடைந்திருந்தது. கடவுளிடம் விண்ணப்பிக்க இதுதான் சரியான தருணம். “செüடேஸ்வரா! நான் வேண்டுவது மட்டும் சித்தி பெற்றால், பத்து செவ்வாய் விடாது வந்து உன்னைத் தொழுது,


ஒட்டுண்ணிகள்

 

 வணிகவரி அலுவலகத்தில் இருந்து அமீனா வந்திருந்தான். “உங்க கம்பெனி ரெண்டு லட்சம் சொச்சம் வரிபாக்கி கட்ட வேண்டியிருக்குது,” என்று சொன்னான். அலட்சியமாக சொன்னவன், பவுச்சை உடைச்சுப் “பாக்குத்தூளை” இடது கைப் பாதத்தில் போட்டு, வலது பெருவிரலை வைத்து நன்றாக நசியம் பண்ணி, தட்டி வாயில் போட்டுக் கொண்டான். பின்னர் ஒட்டியிருந்த பாக்குத்துகள்கள் முற்றிலும் அகலும் வண்ணம், இரண்டு கைகளையும் நன்றாகத் தட்டி விட்டுக் கொண்டான். “அப்படியா? எந்த வருசத்து வரி?” நான் ஆர்வமின்றி கேட்க, அமீனா ஆபிஸை