கதையாசிரியர் தொகுப்பு: செந்தூரன் ஈஸ்வரநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

பழுப்பு நகரம்

 

 1 சில பருவங்களில் மட்டுமே எங்கள் நகரத்தில் மழை பொழியும். மற்றபடி நகரம் காய்ந்துபோய், மனிதர்களின் மண்டைகளும் காய்ந்திருக்கும். சரியாக இங்கு நான் எங்கள் நகரம் என்பதை எப்படிப் பயன்படுத்திக்கொண்டேன் அல்லது சுவீகரித்துக் கொண்டேன் என்பது மிகுந்த குழப்பகரமான ஒன்று. வங்கக் கடற்கரையில் நடந்து கடல் நகரம் ஒன்றை அடைந்துவிடுவது அல்லது வறண்ட காடுகளில் புகுந்து செழிப்பான பாலைமரக் காடுகளுக்குள் புகுவதைப்போன்ற முட்டாள்தனமான யோசனை என்னிடம் இருக்கிறது. நகரத்துக்கூடாய்க் கடந்துபோய் வேறொரு நகரத்தை அடைந்துவிடுதல்தான் என் முழுமையான