கதையாசிரியர் தொகுப்பு: செந்தமிழ் செல்வன்

1 கதை கிடைத்துள்ளன.

உட்டேஞ் சவாரி!

 

 “அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே… ஆறு லச்சமாச்சே… உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி சேத்து வச்ச பணமாச்சே…’ என்று, வழி நெடுக வாய் விட்டு, அரற்றியபடியே வேலந்தாவளம் மண்டியிலிருந்து காடு திரும்பிக் கொண்டிருந்தார் கஞ்சலிங்கக் கவுண்டர். வாழைக்கறை படிந்த பழைய அங்கராக்கு; மண்ணும், சாணமும் ஒட்டிய அழுக்கு லுங்கி, பீத்தைப் பச்சைத் துண்டிலான உருமாக்கட்டு. இந்த அலங்காரத்தோடு, பொக்கை வாய் பிளந்த ஹெட்லைட் டூம், குறுக்கு வசமாக பாதி உடைந்த