கதையாசிரியர் தொகுப்பு: செங்கை ஆழியான்

8 கதைகள் கிடைத்துள்ளன.

தெருவிளக்கு

 

 (1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடைத் தெருவுக்கு வந்த செல்வராசன் சந்தியில் அப்படியே நிலை குத்தி நின்றுவிட்டான். அவன் விழிகள் இரண்டும் வியப்பால் விரிய, தாங்கமுடியாத அதிசயத்தால் அவன் வாயும் சற்று அகலத் திறந்துகொண்டது. “சந்தியில் நிண்டு கொண்டு என்ன விடுப்பே பாக்கிறாய்? பாரத்தோட சயிக்கிலில வாறன், விலகாமல் மாடுமாதிரி நடுச் சந்தியில. அங்கால போடா” என்று சத்தமிட்டு ஏசியவாறு ஒரு சயிக்கில்காரன் விறகுச் சுமையோடு வேனைக் கடந்து


ஏதோ ஒன்று

 

 இருள் வானைக் கீறிக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது. எவ்வளவு உண்மை, மறுக்கவே முடியாத பிரத்தியட்சமான உண்மை. அடிவானில் ஒளி ஓடுங்கி, அவியத்தான் வேண்டுமா? தூரத்தே பெரும் கட்டிடங்களின் மங்கற் கோடுகள். இருளுடே தெரிகின்றன. அவற்றிற்கும் அப்பால், சிவனொளிபாத மலையின் சிகரத்து மின் விளக்கு, நம்பிக்கை தரும் ஒளியாக மின்னுகின்றது. நம்பிக்கை தரும் அச்சிறு ஒளியின் பின்னால், அதனோடு இணைந்து, மாபெரும் மலை, உண்மைப் பொருள் இருக்கிறது. எரி வெள்ளி…? முழுவதும்


குந்தியிருக்க ஒரு குடிநிலம்

 

 வானம் கருமை பெறத் தொடங்கியதும் இராசதுரை துடித்துப் போனான். நிச்சயமாக இன்று வானத்தில் பரவிய கருமுகில் நேற்றுப் போல வாடைக்காற்றுடன் அள்ளுண்டு செல்ல வாய்ப்பில்லை. மூன்று நான்கு நாட்களாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த வானம் இன்று அவன் பிரார்த்தனைக்கு இரங்கும் என்ற நம்பிக்கையைச் சீர்குலைத்தபடி குளிர்காற்றுடன் இறங்கிய துமிகள் மழைத்துளிகளாகி வானத்திலிருந்து கோடானுகோடி நீர்விழுதுகளை மண்ணில் அழுத்தின. “ஐயோ… பிள்ளைகள் என்ன பாடோ?” மழைத்துளிகள் பெருந்தாரைகளாகி முகத்தில் ஊசிகளாகக் குத்தின. இராசதுரை கரத்தில் காவிய பாண் சரையுடன் தன்


ஓ, வெள்ளவத்தை

 

 2028, ஜுலை-11, அதிகாலை 5.00 மணி. அந்தப் பெரிய இயற்கை அனர்த்தம் நிகழ்வதற்கு இன்னமும் இருபத்தினான்கு மணி நேரங்கள் உள்ளன. அதனை அறியாது உறங்கிக் கொண்டிருக்கும் வெள்ளவத்தை வாசிகளைப்போல, சுகந்தன் அதிகாலை உறக்கத்தினை நன்கு அனுபவிப்பான் போல் போர்வையால் உடல் முழுவதையும் இழுத்து மூடிக் கொண்டு ஆழ்ந்த நித்திரை வசப்பட்டிருந்தான். அச்சிறிய மிதவைக் கட்டிடத்தைச் சுற்றி விரிந்து பரந்திருந்த இந்து சமுத்திரம் ஆர்ப்பரிக்காது என்றுமில்லாத அமைதிப் பிடியில் சுகந்தன் போல உறங்கிக் கொண்டிருந்தது. அலைகள் வரப் போகின்ற


ஆறுகால்மடம்

 

 என்னுரை யாழ் இந்துக்கல்லூரியின் , நூற்றாண்டு நிறைவு ஆண்டில், அக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதர மாணவனாக இருந்த 1957 ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் என்னால் எழுதப்பட்ட ‘ஆறுகால் மடம்’ என்ற சிறுவர் நாவல் இன்று எதுவிதமாற்றமுமின்றி வருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அக்காலத்தின் சிறுவர் பத்திரிகையாகத் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த ‘கண்ணன்’ என்ற பத்திரிகை நடத்திய தொடர்கதைப் போட்டிக்காக எழுதப்பட்டு, அனுப்பப்பட்டு, கண்ணன் ஆசிரியரால் பாராட்டப்பட்டது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த


ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்

 

 கூடிக் குறைந்தால் பன்னிரண்டு வயது இருக்கும். முகத்தில் இனந்தெரியாத சோகம், தேமலாக அப்பிக் கவிந்திருக்க, வயதுக்கு மீறிய பெருந்தன்மையும், பொறுப்பும் விழிகளில் தெறிக்கும். புலரா ஓர் அதிகாலை வேளையில், வீட்டு வாசலில் அவனை நான் கண்டேன். மதிலுக்கு மேல் பூத்துச் சிலிர்த்திருக்கும் மல்லிகைப் பூக்களை மொட்டுக்களோடு. வீட்டார் விழித்து எழுவதற்கு முன்னரே, ஒடித்துச் சென்று, மாலை கட்டுபவர்களுக்கு விற்கும் சிறுவர்களில் ஒருவனாக எனக்கு அவன் தென்படவில்லை. அரைக் காற்சட்டையும், கிழிந்த பெனியனுமாக, பரட்டையாகப் பறக்கும், தலைமயிர் சிலும்பிக்


அவன் சமாதியில்

 

 “எழுத்தாளனுக்கு இரண்டாவது பிரம்மா என்று ஒரு பெயர்; உண்மைதான். முதற் பிரம்மா எழுத்தாள னைப் படைத்தான்; படைக்கப்பட்டவன் தனது ‘படைப் பு’களிற் பலரைச் சிருட்டித்தான். வாழத் துடிப்பவர்களை அநியாயமாகக் கொன்றும், சும்மா போகிறவனைக் காத லிக்கச் செய்து கலங்க வைத்தும், கிழவனைக் குமரனாக்கிக் குமரனைக் கிழவனாக்கி, நல்லவனைக் கெட்டவனாக்கிக் கெட்டவனை நல்லவனாக்கி……. இப்படியெல்லாம் செப் பிடு வித்தையை மனம்போனபடி செய்து, அதனாற் கிடைக்கும் அற்ப மனநிம்மதியில் திருப்தியடைந்து ……. அதெல்லாம் சரி, இவற்றையெல்லாம் நானிங்கு ஏன் எழுத


கருப்பியைக் காணவில்லை!

 

 விடிந்ததும் விடியாததுமான வேளை. மாணிக்கப் பெத்தாச்சி சுருட்டைப் புகைத்தபடி கறுப்பியைக் கூப்பிட்டுப் பார்த்தாள. பெத்தாச்சியின் ஒரு குரலிற்கே ஓடி வந்துவிடும் கறுப்பியைக் காணவில்லை. ‘எங்கோ போயிட்டுது’ என்று முதலில் தனக்குச் சமாதானம் கூறிக் கொண்ட பெத்தாச்சியால், நேரம் செல்லச் செல்லப் பொறுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தாள். கறுப்பியைக் காணவில்லை. சுருக்கம் விழுந்த பெத்தாச்சியின் முகத்தில் கவலை குடிகொண்டது. வளவ முழுவதும் கறுப்பியைத் தேடிப் பார்த்தாள். கிணற்றுக்குள்ளும் எட்டிப் பார்த்தாள். வேலிகளின் பொட்டுகள் ஊடாசப் பக்கத்து