கதையாசிரியர் தொகுப்பு: சு.ரா

2 கதைகள் கிடைத்துள்ளன.

பக்கவாத்தியம்!

 

 இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிய மௌலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருந்ததை கௌரி கவனித்தாள். ஆபீஸில் ஏதோ நடந்திருக்க வேண்டும்! என்ன ஏது என்று விசாரிப்பதற்குள், மௌலியின் பெண் ராதா ஓடி வந்தாள்.‘‘எஃப்.எம்-ல தாத்தாவோட ‘தனி’ வந்திட்டிருக்குப்பா! கேக்கலையா?’’ என்றாள். ‘‘அடடா, ஆறரை மணிக்குப் பிச்சுமணி கச்சேரி& அப்பா மிருதங்கம்! ஆபீஸ் ரகளைல எல்லாமே மறந்தே போச்சு!’’ என்றபடி, ரேடியோ இருந்த படுக்கை அறைக்கு ஓடினான்மௌலி. ‘இதுவரை பிச்சுமணி பாட்டு கேட்டீர்கள். அனுராதா வயலின்,


கல்யாண வயசில் ஒரு பிள்ளை!

 

 மல்லேஸ்வரம் எட்டாவது குறுக்குச் சந்தில் நடைப் பயிற்சியாகப் போய்க்கொண்டு இருந்தேன். கன்னிகாபரமேஸ்வரி கோயிலை நெருங்கிய போது, யாரோ என் முதுகைத்தொட்டதை உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரியவர், ‘‘நீங்கள் தமிழர்தானே?’’ என்று கேட்டார். ‘‘ஆமாம். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’ என்று புன்னகைத்தேன். ‘‘உங்களை மூணு நாலு தடவையா கவனிச்சிட்டு வரேன். உங்க முகத்தைப் பார்த்து, நீங்க தமிழராகத்தான் இருக்கணும்னு யூகிச்சேன். உங்க சொந்த ஊர் எது?’’ என்று கேட்டார். ‘‘வட ஆற்காடு ஜில்லா வேலூர் எனக்குப் பூர்விகம். ஆனா,