கதையாசிரியர் தொகுப்பு: சுமங்கலா

1 கதை கிடைத்துள்ளன.

ஆலங்கட்டி

 

 கன்னட மூலம்: சுமங்கலா தமிழில்: நஞ்சுண்டன் லத்யா மாமு கருப்புக் கண்ணாடிக்கு அப்பால் பார்த்தவாறு மனசை வேறெங்கோ பறிகொடுத்து உட்கார்ந்திருந்தான். அவனது எஸ்டிடி பூத்துக்கு நேர் எதிர்ச் சாலைக்கு அந்தப் பக்கம் காய்கறி மார்க்கெட். அங்கே இரண்டு மூன்று வரிசைகளில் கூடைகளுடன் உட்கார்ந்து காய்கறி விற்பவர்களில் கமலம்மாவும் ஒருத்தி. இரண்டு மூன்று தினங்களாக அவள் மாமுவின் கண்ணில்படவே இல்லை. அது மாமுவுக்கு விசித்திரமான ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாருடைய கல்யாணத்துக்கோ சீமந்தத்துக்கோ அல்லது என்ன காரணத்தாலோ அவள் தன்