கதையாசிரியர் தொகுப்பு: சுபா

9 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள்

 

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சின்னக் கோயில் தான். இரும்புக் கிராதிக் கதவுக்குப் பின்னால் பிள்ளையார் சிறைப்பட்டிருந்தார். கதவில் நா தாங்கி போடப்பட்டுப் பெரிய பூட்டுத் தொங்கிற்று. ராதுவைச் சட்டென்று ஏமாற்றம் தாக்கிற்று. ஒன்பது மணிக்கே கோயில் கதவு சதுரம் சதுரமாய்ப் பிள்ளையாரைக் கூறு போடுகிறதே… பத்தரை மணி வரை திறந்திருக்கும் என்று நந்தினி சொன்னதை நம்பி வெட்டுகிற வெய்யிலில் வந்தது வீண் தானா? ஒருவேளை சன்னிதிக்குப்பின் பக்கம்,


நண்பன் ஐ.பி.எஸ்.

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேசி முடித்து ரிசீவரை தொலைபேசியில் பொருத்தினேன். என் விரல்களில் மெலிதான அதிர்வுகள் இருப்பதைக் கவனித்தேன். பார்த்துக் கொண்டிருந்த கோப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். தொப்பியை அணிந்தேன், அறையை விட்டு வெளி வந்தேன். எதிர்ப்பட்ட இளம் அதிகாரிகளின் சல்யூட்களை மென்மையாகத் திருப்பியவாறு காருக்கு நடந்தேன். டிரைவர் கதவை விறைப்பாகத் திறந்து பிடித்தான், “திருவல்லிக்கேணி” என்றேன். அரசாங்க வாகனம் உறுமி விட்டுப் புறப்பட்டது. என் நண்பனைச்


என்னைப் பிடிச்சிருக்கா?

 

 ”எனக்குப் பிடிக்கலை, ரசிகா…’ ‘எதும்மா… என் டிரெஸ்ஸா?’ ‘ஒரு எடத்துல உக்காந்து பேச வேண்டியதுதான..? அது என்ன, கார்ல ரவுண்டு அடிச்சுக்கிட்டே பேட்டி எடுக்கிறது?’ ‘ஏம்மா, செங்குட்டுவன் என்னை அப்படியே அவரோட கெஸ்ட் ஹவுஸுக்கு நைஸா கூட்டிட்டுப் போயிடுவார்னு பயப்படுறியா? அப்படியே போனாலும், ஐ டோன்ட் மைண்ட். எத்தனை பொண்ணுங்க ஏங்கிக்கிட்டு இருக்காங்க தெரியுமா?’ ‘ச்சீ… அம்மாகிட்ட பேசுற பேச்சாடி இது?’ அப்போது ஹார்ன் சத்தம் கேட்டது. ரசிகா பால்கனிக்கு ஓடிவந்து வெளியே எட்டிப் பார்த்தாள். ‘வந்தாச்சு!’


உயிர் வியூகம்!

 

 கேப்டன் ராம்குமாரின் கால்கள் இரண்டும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. கைகளை விலங்குகள் கோத்திருந்தன. அவன் மீது செம்மண் தூசு அடர்ந்து இருந்தது. திறந்த ஜீப்பின் வெளியே வானில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தன. யுக காலத்துக்குக் குலுங்கி, பயணம் செய்து முடிவாக ஜீப், ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. அது ஒரு மாபெரும் இரும்புக் கூடாரம்போல் தெரிந்தது. வாசலில் சொற்பமான காவலர்கள் எதையோ தின்றுகொண்டு அசுவாரஸ்யமாக, இரும்பு கேட்களைத் திறந்துவிட்டார்கள். எல்லாவற்றையும் ராம்குமார் சிதையாத ஒற்றைக் கண்ணால்தான் பார்க்க முடிந்தது. தொய்ந்திருந்த


தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி

 

 ஒரு காதல் கதையைக் கேட்கிறீர்களா? வருண்குமார் என்னும் நான் இன்றைய நவீனங்களுக்குப் பழக்கமானவன். பீட்ஸா. கே.எஃப்.சி.யின் சிக்கன் லாலிபாப். சப்வே. டீஸல் ஜீன்ஸ். அடிடாஸ் ஷூஸ், ஆப்பிள் லாப்டாப். பிளாக்பெர்ரி. எக்ùஸட்ரா. எக்ùஸட்ரா. வயது இருபத்தாறு. அந்தக் கால மோகன், ராமராஜன்களை நினைவுபடுத்துவேன். ஐந்து அடி ஆறு அங்குலம். மார்பளவு முப்பத்தெட்டு. இடுப்பு குறுகி இருக்கும். கல்லூரிக் கல்வியின்போது காதல் கவரவில்லை. படிப்பு முடிந்த பின்பும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே வெறிதான் இருந்தது. கிடைத்த


மல்லிகா அக்கா

 

 “டீச்சர்… நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க இதுவரைக்கும் பொய்யே பேசலைன்னாதான் நான் சொல்றத நம்புவீங்க. அய்யம்பேட்டைதான் எங்க ஊரு. குடமுருட்டி ஆத்துல சுழிச்சுக்கிட்டு ஓடுற தண்ணி, படித்துறை அரச மரத்தடிப் பிள்ளையாரு, அவரு தலைல எப்பவுமே இருக்குற மஞ்ச கலர் ஊதாங்குழல் பூ, சுடுகாட்டுக்குப் போற பாதை ஓரத்துல வேலிக் கொடியில தொங்கற கோவக்கா, செவப்பா தாமரையும் வெள்ளையா அல்லியும் பூத்திருக்குற


அந்த ஒரு நாள்

 

 ரயிலில் அவளைப் பார்த்தபோது, அவன் வாழ்வில் அவ்வளவு பெரிய மாற்றங் களை அவள் ஏற்படுத்துவாள் என்று கருணா எதிர்பார்க்கவில்லை. ஜன்னல் ஓரத்தில் ஒரு கொக்கிபோல் முடங்கி உட்கார்ந்திருந்தவள் டிக்கெட் பரிசோதகர் வந்தபோதுதான் முகத்தை முழுசாகக் காட்டினாள். பதின்வயதின் பளபளப் புடன் செழுமையான கன்னங்கள், அவள் கை அழுத்திய இடங்களில் சிவந்திருந்தன. அழுது சிவந்திருந்த பெரிய கண்கள் அவரைப் பார்த்ததும் சற்று அச்சம்கொண்டு விரிந்தன. கால்களை இருக்கையில் இருந்து இறக்கினாள். அவள் உயர் ரக உடைகள் அணிந்திருந்தது புலப்பட்டது.


கூட்டத்தில் ஒருவன்!

 

 அந்த புதன்கிழமை வந்திருக்காவிட்டால், ரங்கா மற்றபடி ஒரு சாதாரணன். திருச்சியில் வேதியியல் படித்து, நேஷனல் கெமிக்கல் கம்பெனியின் ஆர் அண்ட் டி பிரிவில், டெல்லியிலும் மும்பையிலும் 25 வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கொல்கத்தா வந்து சேர்ந்திருந்தான். காவிரிக் கரையில் வளர்ந்த மனைவி வேதவல்லி ‘ஆவோ… ஜாவோ’ என்று ஹிந்தியில் நான்கு வார்த்தைகளாவது கற்றுக்கொண்டாள். தொண்டைக் காற்று அதிகம் புரளும் பெங்காலி அவளை நான்கு சுவர்களைவிட்டு வெளியே கொண்டுவருவது இல்லை. மூத்தவன், கண்ணன். சாஃப்ட்வேர்


சுபா நிமிடக் கதைகள்!

 

 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரொம்ப வருடங்கள் கழித்து நாக்பூர் சித்தப்பா வரப்போவதாக போன் செய்தார். அம்மாவிடம் சொன்னதும்,,, “அவரோட கொள்ளிக் கண் பட்டா துளசிச் செடியே பட்டுப்போயிடுமேடா! இதப் பாரு… குரோம்பேட்டையில வீடு கட்டியிருக்கேன்… பிரமோஷனுக்கப்புறம் 40,000 சம்பளம்னு எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதே!” என்று எச்சரித்தாள். ரயில்வே ஸ்டேஷனில்… ரயிலிலிருந்து எல்லாரும் இறங்கி விட்டிருந்தார்கள். சித்தப்பா மட்டும் இறங்காமல் உட்கார்ந்திருந்தார். என் குரல் கேட்டதும், என் கைகளை ஆசையுடன் பற்றினார். உடலெங்கும் தடவினார். “நல்லா இருக்கியா