கதையாசிரியர் தொகுப்பு: சுதா ரவி

2 கதைகள் கிடைத்துள்ளன.

வீட்டுப்புழுவல்ல கூட்டுப்புழுவல்ல…!

 

 காலையில் எழும்போதே நல்ல தலைவலி. ‘இன்று வேலைகள் அதிகம். எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என்ற அயர்ச்சி வந்தது. “என்ன ராதா… எழுந்திரிக்கலையா?” என்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கேட்டான் விக்ரம். “இல்ல! இன்னைக்கு என்னவோ ஒரே தலைவலியா இருக்கு. ஆனா, ஆபீஸ்ல இன்னைக்கு ஒரு ‘பிளானை’ முடிச்சாகμம். நேத்தே சொல்லிட்டாங்க.” விக்ரம் ஒரு ‘எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்’. ஒரு பெரிய ‘கம்பெனி’யில் வேலை செல்கிறான். இரண்டு தங்கைகளுடன் பிறந்தவன். ராதா அவன் மனைவி. அவள் ஒரு ‘ஆர்க்கிடெக்ட்’. கட்டுமான


நெருப்பு நாக்குகள்

 

 வெகுநாட்களுக்குப் பிறகு… அதிகாலையில் மெதுவாக எழுந்து விடியலின் அழகை ரசிக்க நேரம் கிடைத்திருக்கிறது ராதாவுக்கு. மெல்ல உடலை நெளித்து சோம்பல் முறித்தபடி வந்து ‘பால்கனி’ கதவைத் திறந்தாள். மறுகணம் முகத்தில் பட்ட அந்தக் குளிர்ந்த காற்று ‘ஏ.சி.’ வைத்தாலும் ஈடாகாது என்பதை உணர்த்தியது. அரை இருளில் லேசாக வெளிச்சம் வரத் தொடங்கும் தருணத்தில் பறவைகள் இரைத் தேட கிளம்பின. அவற்றின் குரலும், ஒன்றிரண்டு நாய்கள்… நடந்து போவோர் வருவோரைப் பார்த்து குரைத்த வண்ணம் அங்கும் இங்கும் ஓடியதை