கதையாசிரியர் தொகுப்பு: சுதாராஜ்

76 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்

 

 “மாப்பிளை வீட்டுக்காரர் வருகினம்!” எனக் குரல் கொடுத்தார் சபாபதி. அதைக் கேட்டுப் பெண்வீட்டுக்காரர் ஏதோ விசித்திரம் நடக்கப் போவதைப்போலப் பரபரப்படைந்தனர். “மாப்பிளை வீட்டுக்காரர் வருகினமாம்!” – செய்தி குசினிவரை ஓடியது. ஒழுங்கையின் செம்மண் புழுதியைக் கிளப்பிவிட்ட வாறு வளவினுள் புகுந்து புளியமரத்து நிழலில் நின்றது அந் தக் கார். அங்கு விளையாடிக் கொண்டு நின்ற ‘குஞ்சுகுருமானு களெல்லாம்’ அதைக் கண்டு குதூகலத்துடன் அண்மையில் ஓடி னார்கள். வண்டியிலிருந்து இறங்குபவர்களைச் சுற்றி நின்று வினோதமாகப் பார்த்தார்கள். ஒருவன், காருக்கு


மாற்றான் தோட்டத்து மலர்

 

 காலை பத்து மணிப் பொழுது – திருவாட்டி தில்லைக்கூத்தனுக்குப் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எட்டு மணிக்கு முதலே அவர் அலுவலகத்திற்குப் போய் விடுவார். அவர் நின்றால் பொழுது போவதே தெரியாது – காலை ஆறுமணிக்கே கட்டிலுக்குக் கோப்பி கொண்டு போக வேண்டும். “இஞ்சருங்கோ …. எழும்புங்கோ ….. நேரம் போட்டுது, கிடக்கிறியள்”. அவர் எழுந்து, படுத்தபடியே கைகளை உயர்த்தி சோம் பல் முறித்துக்கொண்டு, எழும்புவதற்கு விரும்பாதவர் போல மீண்டும் குப்புறப் படுத்து விடுவார். “எழும்புங்கோ!…இதென்ன குழந்தைப் பிள்ளையள்


உள்ளங்களும் உணர்ச்சிகளும்

 

 ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை பாடிக்கொண்டு செல்வது வழக்கம். அதன் கூவலில் சத்தியன் சுய உணர்வுக்கு வந்தான். ஏதோ அவலத்தைக் கண்டு குரல் கொடுப்பது போல அப்பறவை அலறிக் கொண்டு சென்றாலும்…. அதிலும் ஓர் இனிமை இருந்தது. இரவு உறங்கிக் கொண்டிருக்கிறது – சத்தியன் கட்டிலிற் புரண்டு படுத்தான். நேரத்தைப் பார்த்துவிட்டு, இனி உறங்க வேண்டும் என நினைத்தான். உறக்கம் வரமறுத்ததால்


புதுச்சட்டை

 

 நாளைக்குப் புதுவருடம். அவனுக்கு அழுகைதான் வருகிறது! அதோ …… குமார் தனது தந்தையுடன் காரிலே செல்கிறான். அவன் பெரிய கடைக் குச் செல்வான். புதுச்சட்டை , சப்பாத்து எல்லாம் வாங்குவான். பள்ளிக்கூடத்துக்கும் அதைப் போட்டுக் கொண்டு வருவான். ‘ஐயா வேண்டித்தந்த புதுச்சட்டை’ என்று புளுகுவான். அவனுக்கு அழுகைதான் வருகிறது. அவனுக்கும் ஐயா வீட்டில் இருந்தால் எவ்வளவு நல்ல தாய் இருக்கும். அவர் சைக்கிளிலே சென்று புதுச்சட்டை வேண்டிவருவார். அவன் போடுவான்; “ஆனால் ஐயாதான் பொலீஸ் ஸ்டேசனில் இருக்கிறாரே…..


நாணயக்கயிறு

 

 “மாடா! டேய் …. எழும்படா!” “நான் கத்துறான் கத்துறன் அவன் விரும கட்டை மாதிரிக் கிடக்கிறான்…எழும்பன்ரா எருமை!” “மூதேவியாருக்கு நித்திரையெண்டால் போதும்!…மாடுமாதிரிக் கிடக்குது…” “ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…பொறும் வாறன்!” அம்மாவினுடைய அதட்டலில் ‘மாடு’ இன்னும் எழும்பவில்லை; நான் எழும்பிவிட்டேன். மேற்கொண்டு நிலவிய மௌனம் ‘அம்மா’ அடுத்த நடவடிக்கையில் இறங்கப் போகின்றா என்பதை உணர்த்தியது. வெளியே கடுமையான பனி பெய்கிறது. இன்னும் இருள் அகலாத அதிகாலை. போர்வையை இழுத்து உடலை மூடிக்கொண்டு சொகுசைத் தேடுகிறேன். வெளியே, சீமெந்துத்


பயணம்

 

 கொழும்பு கோட்டையிலிருந்து, காங்கேசன் துறை நோக்கிச் செல்லும் புகையிரதம்; தபால்வண்டி, இன்னும் சில நிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும் என சிங்களத்திற் சொல்லப்பட்டது. அநுராதபுர புகையிரத நிலையம். வடபகுதிக்குச் செல்ல இருந்த பிரயாணிகளிற் சிலர் ஓரளவாவது சிங்களம் தெரிந்தவர்களாயிருந்தபடியால் (அரசாங்க அலுவலர்) இந்த அறிவிப்பில் ஆயத்தமடைகின்றனர். “தமிழ் தெரிஞ்சவங்கள் ஆரேன் இல்லையோ…என்னவோ சிங்களத்திலை மாத்திரம் தான் சொல்லுறாங்கள்.” – இதை இன்னொருவர் எரிச்சலுடன் ஆமோதிக்கிறார். “ஓமெண்டுறன்!” புகையிரதம் அட்டகாசத்துடன் வந்து நிற்கிறது. “என்ன சனமப்பா!…ஒரு நாளும் இந்த


அந்த நிலவை நான் பார்த்தால்…

 

 சாப்பிடுவதற்கென்று அமர்ந்துவிட்டால், இந்தச் சனியன் பிடித்த நாய் வந்து முன்னே இருந்து விடுகிறது. நான் வளர்த்த நாய்தான் – இப்பொழுது ஒரே குட்டையும் சொறி யும். அது முன்னால் இருக்கும் பொழுது சாப்பிடுவதற்கே அருவருப்பாயிருந்தது. அடித்தேன். அடியின் வலி தாங்க முடியாமற் குளறிவிட்டு மீண்டும் என் காலடியிலேயே வாலை ஆட்டிக்கொண்டு சுற்றி வந்தது. எனக்கு, எரிச்சலாயிருந்தது. மீண்டும் அந்த விறகுக் கட்டையால் ஓங்கினேன். அது தலையைக் குனிந்து பயத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர்கூட


சோதனை

 

 வாழ்வில் முன்னேற வேண்டுமென்று யாருக்குத்தான் விருப்பமிருக்காது? மூன்று வருடங்களாக அதற்கென (பதவி உயர்விற்காக) படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். பலன்? இன்று சிங்களத் தராதரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. நீங்கள் நம்பமாட்டீர்கள்; எங்கள் அலுவலகத்தில் ஆறாவது முறையாகவும் முதலாம் தரப் பரீட்சையிற் தோல்வி யடைந்து மீண்டும் ஒரு சாதனையை நிலைநாட்டிவிட்டேன்! என்ன செய்வது? நாலு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும், ‘படியடா’ என்று மனுசனைச் சொன்னால், யாராற்தான் முடியும்? – கண்மண் தெரியாமல் இன்கிறீமென்ட்டைக் கட் பண்ணிவிட்டார்கள். நான் நான்கு


பலாத்காரம்

 

 உடனடியாக வருமாறு அம்மா கடிதம் எழுதியிருந் தமையாற் தான் இப்பொழுது ஊருக்குப் போகிறேன். யாழ்ப்பாணம் போய் சரியாக ஏழு மாதம் இருக்கும். அடிக்கடி போக ஆசைதான். ஆனால் பணப்பிரச்சனை அந்த ஆசையைத் தடை செய்துவிடும். அரசாங்க லிகிதர் சேவையில் புதிதாக நியமனம் பெற்ற – அதாவது. ஒரு வருடம் இருக்கும் – உத்தியோகத்தன் என்ற முறையில் எனது சம்பளத்தை நீங்கள் ஊகிக்க முடியும். மாதா மாதம் வீட்டிற்கு ஏதாவது அனுப்புவதற்கே பெரியபாடு படுவதுண்டு. இந்நிலையில் கொழும்புச் சீவியம்


தேவைகள்

 

 நேரம் பதினொரு மணிக்கு மேலிருக்கும் ‘ என அவன் நினைத்துக் கொண்டான். இரவு . காலி வீதியில் கொள்ளுப் பிட்டியை அண்மிய இடங்களில் இன்னும் சன நடமாட்டம் குறையவில்லை. இரத்மலானைவரை இப்படித்தான் இருக்கும். ஓரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களாவது செல்ல வேண்டும். அவன் அதற் காகக் காத்திருந்தான். அமைதி என்றாலும் அதைப் பூரண அமைதி என்று சொல்ல முடியாது. அடிக்கடி ஏதாவது வாகனங் கள் விரைந்து கொண்டிருக்கும். இரவின் அமைதியில் அவற்றின்