கதையாசிரியர் தொகுப்பு: சீ.மணிவாசகன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஜென்மம்

 

 வழக்கம் போல் லீலா இறைவனிடம், என்னைய ஏன் மனுஷ பிறவியா படைச்சீங்க. அதுவும் பொண்ணா எதுக்கு படைச்சீங்க. இந்த வீட்ல என் தம்பிக்கு இருக்குற ஃபிரீடம் கூட எனக்கு இல்ல. ஐ ஹாவ் நோ ஃபிரீடம். அப்பாவோ, மொபைல் யூஸ் பண்றதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன், ஃப்ரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போறதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன், பைக்ல லாங் டிஸ்டன்ஸ் டிராவல் பண்றதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன்… இப்டி சொல்லிட்டே போகலாம். இதுல அம்மா வேற அப்பப்ப அத செய் இத செய், அத செய்யாத


முட்டாளின் அதிர்ஷ்டம்

 

 “ஏன்டி செல்லம்மா! சோத்துல உப்பு போடாத போடாதன்னு எத்தனை தடவடி சொல்றது உனக்கு, நீ கேக்கவே மாட்டியாடி…” என்று முதல் சோற்றுப் பருக்கையை எடுத்து வாயில் வைத்த உடனே ராமசாமி தன் மனைவி செல்லம்மாவை வசை பாடினான். பச்சை மிளகாயை வறுத்து கொண்டிருந்த செல்லம்மாவோ “ஹ்ம்ம், இருபது வருஷமா உப்பு வியாபாரம் செஞ்சு செஞ்சு இந்த மனுஷனுக்கு எத சாப்டாலும் உப்பு, எத பார்த்தாலும் உப்பு … என்று முணுமுணுத்தாள். “அங்க என்னடி பொலம்பிட்டு இருக்க? கேட்டதுக்கு


காதல் சேஸிங்…

 

 யமுனா ஃபோன் செய்ததில் இருந்து ராஜா சற்று பதட்டத்துடனும், மனக் குழப்பத்துடனுமே இருந்தான். அப்படி அவள் ராஜாவிடம் ஃபோனில் என்ன கூறினாள். அவர்களின் காதல் செய்தி யமுனாவின் தந்தைக்கு எப்படியோ தெரிந்துவிட்டது என்றும், சொல்லாமல் கொள்ளாமல் தன் தந்தை தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், யமுனா ராஜாவிடம் அழுதுகொண்டே கூறினாள். அதுமட்டுமல்ல, இன்று மாலையே தன் தந்தை தனக்கு அவசர அவசரமாக நிச்சயதார்த்த ஏற்பாடு செய்திருப்பதாகவும்,எப்படியாவது தன்னை வந்து அழைத்து போகும்படியும், அப்படி வரவில்லை என்றால் அவள் தற்கொலை


யாவரும் அடிமைகளே!

 

 மோகன் ! டேய் மோகன் ! அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது. மாடியில் இருந்து எட்டி பார்த்தபடி, என்னமா ! என்றேன் உரக்கமாக. கீழ இறங்கி வாடா! என்றாள் அம்மா. சென்றேன். ஏம்மா கூப்ட ? அம்மா, என் கையில் லிஸ்ட் ஒன்றை கொடுத்து, சாரதி அண்ணாச்சி கடைக்கு போயி இந்த லிஸ்ட்ல இருக்குற சாமான வாங்கிட்டு வா என்றாள் . ஹ்ம்ம்…என்று இழுத்தபடி, சரி போறேன், காசு குடு ! கையில காசு இல்லடா. ATM


ஆண்ட்ராய்டு போன்

 

 ஆன்ட்ராய்டு போனில் அலாரம் அடித்தது. முகத்தில் மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அலாரத்தை ஆஃப் செய்தான் அந்த வாலிபன். அப்போது அடுப்படியில் பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்த தாய் ‘சுமதி’ “காலையில எந்திக்கிறது எட்டு மணிக்கு” இதுல அலாரம் வேற இவனுக்கு ”டேய் கார்த்தி எழுந்திரிடா” என்று சுமதி தன் மகன் கார்த்திக்கு தாலாட்டு பாடினாள். தந்தை ‘சுந்தரம்’, “குட் மார்னிங் கார்த்தி“ என்றார். ஆனால் கார்த்தியோ சுந்தரம் சொன்னதை காதில் வாங்காமல் ஃபோனில் உள்ள பேட்டன் லாக்கை ரிமூவ்


ரோஸிக்கான தேடல்

 

 அன்று சனிக்கிழமை,எனக்கு நன்றாக நினைவுள்ளது. நானும் என் தங்கை விஜியும் வீட்டிற்குள் தாயம் விளையாடிக் கொண்டிருந்தோம். அம்மா மளிகை சாமான் வாங்குவதற்காக கடை வீதிக்குச் சென்றிருந்தார். செல்லும்போதே அவர் என்னிடம், ”டேய் ஜகன்,ரெண்டு பேரும் சண்ட போடாம விளையாடனும் சரியா”, அம்மா கடைக்குப் போயிட்டு சீக்கிரம் வந்துருவேன் என்று என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார். நானும் விஜியும் அம்மா சொன்னதை தட்டாமல் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வாசலில் ஒரு சத்தம், “டேய் ஜகன் எதோ சத்தம் கேக்குதுடா