கதையாசிரியர் தொகுப்பு: சா.கந்தசாமி

10 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல்

 

 (1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆற்றில் தண்ணீர் வற்றி மணல் நிறைந்திருந்தது. இருபக்கங்களிலும் சற்றே உயர்ந்த மணல் பரப்பு நடுவில் குறுகி பொடி மணல் நிறைந்திருந்தது. வண்டிகள் குறுக் காகச் சென்றதன் தடம் மணல் வெளியில் அழுந்தித் தெரிந்தது. அந்தத் தடத்திலேயே ராமு சென்று கொண்டிருந்தான், மணலில் காலை அழுத்தி அழுத்தி வைத்துச் சென்று கொண்டிருந்தான். அவன் தலையில் ஒரு வாழைச் சருகுக் கட்டு. நீட்டு வாக்கில் உலர்ந்த


இரணிய வதம்

 

 சின்ன கருப்பு ராஜவாய்க்கால் மதகின் மேலே உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தார். கால்களுக்குக் கீழே பழைய செருப்பு. காது அறுந்த பழைய செருப்பைச் சற்றே முன்னே சாய்ந்து வலக்காலால் நகர்த்திப் போட்டுவிட்டு – பெல்ட்டில் இருந்து பொடி டப்பாவை எடுத்து இரண்டு மூக்கிலும் பொடியை ஏற்றிக் கொண்டு கையை உதறியபடி தலை நிமிர்ந்தார். ஒரு சாரைப்பாம்பு தண்ணீர் பக்கம் ஊர்ந்து சென்றது. சின்னகருப்பு மதகின் மேலே இருந்து இறங்கி இடுப்பு பெல்ட்டைத் தூக்கிவிட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.


ஆறுமுகசாமியின் ஆடுகள்

 

  ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான். ஆனால் கிளை முறியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கிளையை திருகி முறுக்கினான். முறுக்க முறுக்க கிளை மெதுவாக முறிந்து கையோடு வந்தது இடது கையால் தழைகளை உருவி போட்டுக்கொண்டு அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆடுகள் வாய்க்கால் மேட்டிலிருந்து இறங்கி சின்னபண்ணையை நோக்கிச் சென்றன. “தோ…தோ…” ஆறுமுகசாமி ஆடுகளைப் பார்த்துக் கத்தினான். அவன் குரல் சின்னபண்ணை தோட்டத்தை நோக்கிச்சென்ற ஆடுகளுக்குக் கேட்டதுபோலும்.


வாள்

 

 மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது நன்றாகத் தெரிந்தது. மறுபடியும் ஒருமுறை பெரும் காற்று வீசப் போகிறது என்று தனக்குத் தானே தீர்மானம் பண்ணிக் கொண்டார். விட்டு வீசும் காற்று வேலைக்கு ஓர் அறைகூவல் போல் அவருக்குத் தோன்றியது. இடதுகாலை நன்றாக மரத்தில் அழுத்திக் கொண்டு கையிலிருந்த வாளைக் கீழே விட்டார். வாள் மரத்தில் கரகரவென்று இழைந்து கொண்டு சென்றது. அறுபட்ட மரத்தின்


தக்கையின் மீது நான்கு கண்கள்

 

 மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது. நான்காம் தடவையாக, “எலே ராமு” என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, “இப்பத்தான்வெளியே போனான்” என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள். ராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை. ஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக்


அவள்

 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. ‘வா, கல்யாணி. ‘ ‘செளக்கியமா, அக்கா ? ‘ ‘செளக்கியந்தான்… ‘ கல்யாணிக்குப் பேச ஆசை. ஆனால், என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘என்ன, கல்யாணி– ‘ ‘உங்களைத்தான் பாக்க வந்தேங்க்கா. ‘ அவள் சிரித்துக்கொண்டே, ‘என்னையா ? ‘ என்று கேட்டாள். அப்புறம், ‘சொல்லு, ‘ என்றாள். ‘அவுங்க படுற பாட்டைப் பாத்தா, ரொம்பக் கஷ்டமா இருக்கு, அக்கா. அதுனால ஊரோட போகலான்னு பாக்கறேன். ‘ சாரதா தலையசைத்தாள். ‘ஆஸ்பத்திரியில் என்ன சொல்றாங்க


ஒரு வருடம் சென்றது

 

 ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான் ராஜா. நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற்போல எழுதிக்கொண்டு வந்துவிட்டான். மணியடித்து, பிரேயர் முடிந்த பின்வகுப்புத் தொடங்கும்; அதற்கு இன்னும் நேரமிருந்தது. ராஜா வகுப்பின் நடுவில் நின்று அப்படியும் இப்படியும் பார்த்தான். பிறகு சற்றே குனிந்து சிலேட்டைப்


காவல்

 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில் வேகமாக அக்கரையை நோக்கி ஓடினார். ஆனால் முடியவில்லை. மணல் நெருப்பாகத் தகதகத்தது. வரும்போது செருப்பை மாட்டிக் கொண்டு வந்திருக்கலாம் என்று நினைத்தார். அவசரத்திலும் பரபரப்பிலும் மறந்து போய் விட்டது. முன்னே வைத்த காலைத் தூக்கி கொண்டார். பின் கால் சுட்டது. ‘ஓ ‘ என்று சப்தம் போட்டுக் கொண்டு முன்னங்காலை மணலில்


மலையூர்

 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. வீடுகள் குன்றின் மேலும் குன்றிலும் அதன் சரிவிலும் இருந்தன. மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே போகும் சாலைகளில் ஏறித்தான் வீடுகளை அடைய வேண்டும். அவனுக்கு அப்படி ஏறுவது பழக்கமின்மையால் சிரமமாக இருந்தது. வாயால் மூச்சு விட்டுக் கொண்டான். அவன் பிறந்து வளர்ந்து வேலையும் பார்த்த ஊரில் கடலோ மலையோ கிடையாது. எங்கும் வயல். நடவு காலத்தில் பசுமையாக இருக்கும். அப்புறம் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நிறம் மாறும். வயல் வரப்புக்களில் எட்ட எட்ட ஒற்றை


தேவை

 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான். எப்போதும் அவன் அப்படித்தான். பொடி போட மட்டும் தான் தலை நிமிருவான். அப்புறம் சுகுமாரி. அவள் கண்களை மூடித் திறந்து– தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள். இவன் ஒன்றையும் கவனிக்கவில்லை. கண்கள் ரங்கதுரையைத் தேடின. ஆனால் அவன் காலையிலிருந்து தென்படவேயில்லை. அவன் வரவில்லையோ என்று நினைத்தான். அந்த நினைப்பே பயத்தைத் தந்தது.