கதையாசிரியர் தொகுப்பு: சாரதா விஸ்வநாதன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பூபாள நேரத்து கனவுகள்!

 

 “பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை இது. கதாசிரியை கனகா, தனியார் நிறுவனத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்ப்பவர். வரதட்சணை பேயால் சீரழியும் பெண்களைப் பற்றி, உருக்கமாக எழுதியிருந்தாள் கனகா. அவளும், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்தான்.  மாமியார்களுக்கு எதிராக புறப்பட வேண்டிய  கட்டாயத்தையும் அக்கதையில் கோடிட்டு  காட்டியிருந்தாள். அந்த வாரப் பத்திரிகையிலிருந்து கனகாவின் ஆபிசிற்கே செய்தி வந்ததும், அவளைச் சுற்றிலும் ஏகப்பட்ட, “கங்கிராட்ஸ்’


நான்தான் தாரா பேசறேன்…

 

 நான் ஒரு ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். அரசியல்வாதிகள், அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று, பலதரப்பட்டவர்களைப் பற்றிய பேட்டிகளை மட்டுமே படித்து, அலுத்துவிட்ட என் மனதில், ஒரு திடீர் துள்ளல்… ஏன்… இப்படி செய்தால் என்ன என்ற ஒரு சிறு பொறி தட்டியவுடன், மனமெல்லாம் மந்தஹாசம் நிரம்பிவிட, சட்டென்று அந்த எண்ணைச் சுழற்றினேன்; மணி அடித்தது… ரிசீவரை எடுத்தவர், “”ஹலோ…” என்றார். அந்த, “ஹலோ’ யாருடையது என்று எனக்குப் புரிந்து விட்டது. “”நான் தான் தாரா ரவி பேசுகிறேன்,” என்றேன்.


அபிலாஷா

 

 அவன்… அஸ்வின். ஆணவத்தின், அகம்பாவத்தின் மொத்த உரு. நான் என்ற குட்டையில் மூழ்கி, ஜலக்கிரீடை செய்து கொண்டே இருப்பவன். அவ்வப்போது தன் அதீத மேதாவிலாசத்தை அபிலாஷாவிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவான். அந்த தடாலடி, “சைக்கோ’ தனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், அவள் சிறகொடிந்த சிட்டுக் குருவியாய் சுருண்டு விழுவதைப் பார்த்து, குரூர திருப்தியுடன் மகிழ்ந்து போவான். அவள்… அபிலாஷா. இந்த சைக்கோவின் மனைவி. பூஜை அறையில் தஞ்சம் அடைவாள். அங்கே மேடையில் சுடர்விட்டு எரியும் வெள்ளி விளக்கின்