கதையாசிரியர் தொகுப்பு: க.ஸ்ரீப்ரியா

6 கதைகள் கிடைத்துள்ளன.

நான் கணவன்!

 

 தட்டுத்தடுமாறி ஒருவழியா பி.ஏ., ஹிஸ்டரி முடிச்சு ‘எங்கூரு நாட்டரசன்பேட்டையில் முதன்முதலா டிகிரி முடிச்சது நாங்கதாம்லே!’னு மமதையில் திரிஞ்சிட்டு இருந்த காலம். 17 அரியர்ஸை முட்டி மோதி க்ளியர் பண்ணி, டிகிரியை முடிச்ச ஒரு வீரனுக்கு எவ்வளவு அசதியும் பெருமையும் இருக்கும். அதைஎல்லாம் அனுபவிக்கவிடாம, ‘நம்ம சினை மாட்டை மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப் போ ராசா!’ன்னு ஆரம்பிச்சாங்க வீட்ல. ஒரு பட்டதாரி மாடு மேய்ப்பதா? இல்லாத மீசை துடிக்கப் புறப்பட்டேன். வேற எங்கே… வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு! ஒண்ணாப்புல கூடப்


நல்லாத்தான் வாழ்ந்தார் முல்லா நஸிருத்தீன்!

 

 பீர்பால், தெனாலிராமன் மாதிரி தன்னைக் கோமாளி ஆக்கிக்கிட்டு மத்தவங்களைச் சிரிக்க வைக்கிற ஜீனியஸ் முல்லா நஸிருத்தீன். முல்லாங்கிறது அவரோட பெயர் இல்லை. அரபுச் சட்டங்களில் தேறியவருக்கு முல்லா என்பது சிறப்பு பதவிப் பெயர். நாளடைவில் அதுவே அவருக்குப் பெயராகி விட்டது. முல்லாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர். துருக்கியில் முல்லாவை நஸ்ரெட்டீன் ஹோகா என்பார்கள். மேற்கு ரஷ்யாவில் தாஜி நஸ்ரித்தீன், ஈரானில் முல்லா, துருக்கியில் ஹோஜா, அரபு நாடுகளில் கோஜா அல்லது முல்லா. கி.பி. 1480&ல் எழுதப்பட்ட


பூவா, தலையா?

 

 உங்களை மாதிரி பூபாலனும் சமத்துப் பையன்தான். அவனுக்கு கிரிக்கெட்னா ரொம்ப இஷ்டம். போகப் போக என்ன ஆச்சுன்னா கிரிக்கெட்ல டாஸ் போட்டு முடிவெடுக்கிற மாதிரி எல்லாத்துக்கும் டாஸ் போட ஆரம்பிச்சுட்டான். ஸ்கூல் விட்டு வந்ததும் வீட்டில் அறிவியல் படிக்கலாமா, ஆங்கிலத்தைப் படிக்கலாமா? என்று முடிவெடுக்கக்கூட டாஸ் போட்டுப் பார்ப்பான். சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்த இந்தப் பழக்கம், கடைசியில் எல்லாத்துக்கும் பூவா? தலையா? போட்டுத்தான் முடிவு எடுப்பது என்றாகிவிட்டது பூபாலனுக்கு. அம்மா, அப்பா எல்லோரும் சொல்லிப் பார்த்தாகிவிட்டது.


கதை படிங்க.. விடை சொல்லுங்க!

 

 ஒருநாள் ரோஜாத் தீவு இளவரசி ஃப்ரண்ட்ஸோட ஜாலியா தோட்டத்துக்குப் போனாங்க. அங்கே இருந்த ரோஜாப் பூக்களை பறிச்சு ஒருத்தர் மேல ஒருத்தர் எறிஞ்சு விளையாடிட்டு இருந்தாங்க. அப்போ இளவரசி எறிஞ்ச ரோஜாப்பூ அங்கே வந்த முனிவர் மேல தவறி விழுந்துடுச்சி. கோபப்பட்டட அவர், ‘‘என் மீது பூவை எறிந்ததால் நீ இந்த பூந்தோட்டத்தில் ரோஜாச் செடியாக இருப்பாய்’’&னு சாபமிட்டுட்டார். இளவரசி அவர்கிட்டே மன்னிப்புக் கேட்டாள். கோபம் குறைஞ்ச அவர், ‘‘நீ பகலில் மட்டும் ரோஜாச் செடியாகவும், இரவில்


விட்டாச்சு லீவு!

 

 விட்டாச்சு லீவு! ஒரு ராஜாவிடம் விலை உயர்ந்த வைரங்கள் இருந்தன. இதை அறிந்த ஏழு திருடர்கள் ஒருவருக்கொருவர் தெரியாமல் வைரம் திருடப் புறப்பட்டார்கள். கருவூலத்துக்கு ஏழு பேரும் ஒரே நேரத்தில் போய்ச்சேர்ந்தார்கள். அங்கே ஏழு அறைகள் இருந்தன. ஏழு பேரும் ஆளுக்கு ஓர் அறைக்குச் சென்றனர். யாருக்கு வைரம் கிடைத்தாலும் ஏழு பேரும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார்கள். ஒரு திருடன், வைரப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடினான். வெகுதூரம் போனபிறகு, பெட்டியைத் திறந்து வைரங்களை எண்ண


நண்பன்டா..!

 

 கதிருக்குக் குழப்பமாக இருந்தது. ‘ரகு, தன் பிறந்த நாள் பார்ட்டிக்கு என்னை ஏன் அழைக்கவில்லை..?’ ரகுவும் கதிரும் திக் ஃபிரண்ட்ஸ். ஒரே பெஞ்சில் உட்கார்ந்து ஒன்றாகப் படித்து ஒரே ரேங்க், அதுவும் முதல் ரேங்க் வாங்குபவர்கள். ஒரு பென்சில் வாங்கினால்கூட தன்னிடம் சொல்லிவிடும் ரகு, கிளாசையே விருந்துக்கு கூப்பிட்டு, தன்னைக் கூப்பிடாததை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அன்று சாயந்திரம் ரகு வீட்டுக்குப் போய் அவனையே கேட்டுவிடலாம் என்று புறப்பட்டான். யாரிடமோ சுவாரசியமாக டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தான் ரகு. கதிர்