கதையாசிரியர் தொகுப்பு: க.நவம்

8 கதைகள் கிடைத்துள்ளன.

பசிக்கு நிறமில்லை!

 

 தில்லை எனது பால்ய நண்பன், பள்ளித் தோழன். சின்ன வயதுச் சில்மிசங்களுடனும், வளரிளம் பருவத்து வம்பு தும்புகளுடனும் வாழ்ந்துவந்த எங்களிருவரையும் பிரித்து வைத்த பாவம், போர்ச் சூழலுக்கே போய்ச் சேரும்! துப்பாக்கிகள் எங்களூர்க் குச்சொழுங்கைகளில் எப்போது கால் முளைத்து நடக்கக் கண்டேனோ, அப்போதே நாட்டை விட்டு வெளியேறிய துணிச்சல் கட்டை, நான்! ஆனால் தில்லை, அப்படிச் சொல்லிவிட முடியாத ஒரு தீரன்! எட்டுப் பிள்ளை பெறும்வரை, ஓர்மத்துடன் குடியும் குடித்தனமுமாய் ஊரிலேயே வாழ்ந்துவந்த குட்டிக் குசேலனவன்! மூன்று


ஆசாரசீலம்

 

 இரவு பத்து மணி கடந்தும் மின்விளக்குகள் அணைக்கப்படவில்லை! சேவையர் சிற்றம்பலத்தாரின் வீட்டில் பத்து மணிக்குப் பிறகு, ஒளிபரப்ப எந்த மின்விளக்குக்கும் அனுமதி இல்லை. இந்த மின்சாரத்தடையை மீறிச் சமையலறையில் போய்நின்று பாத்திரம் கழுவி வைக்கவோ, சாமான் சக்கட்டுகளை அடுக்கி வைக்கவோ கூடாது. இது மனையாள் கனகேசுவரிக்கு அவர் இட்டு வைத்திருக்கும் கடுமையான கட்டளை. தண்ணீர்ப் பாவனையிலும் இதேபோன்று அவர் மிகுந்த கட்டுப்பாடுடையவர். ‘கஞ்சன்’ என்று யாராவது அவரைக் கணக்கிட்டால், அது அவரவர் பார்வைக் கோளாறு என்றே பொருள்கொள்ள


விருந்தாளி

 

 சமையல் மணத்தையும் புகையையும் உறிஞ்சி வெளியேற்றும் கடமையில் தோற்றுப் போன கிச்சின் எக்ஸோஸ்ற் ஃபான், நாதஸ்வரக் கச்சேரியின் நட்டநடுவே முக்கி முனகும் ஊமைக் குழலாட்டம் இரைந்துகொண்டிருக்கிறது. அந்த இரச்சலையும் மீறி – ‘காத்து கொஞ்சம் வரட்டுமே…… அந்த யன்னலை முழுசாத் திறந்து விடுங்கோவனப்பா…’ அவசரம் அவசரமாகச் சமையல் பாத்திரங்களைத் தண்ணீரில் நனைத்து, டிஷ் வொஷ்ஷருக்குள் தள்ளிக்கொண்டிருந்த சாரதா சத்தம் போடுகிறாள். வரவேற்பறைக்கு அருகிலிருக்கும் வொஷ் றூமைத் துப்புரவு செய்யப்போன சசிதரன், அடுப்படி யன்னலை வந்து திறக்கிறான். ஓ……


காற்றைப் போன்றதடி என் காதல்!

 

 சித்தப்பிரமை பிடித்தவனாகவே அவன் எனக்கு அறிமுகமானான்! ஸ்காபரோ நகரில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான வீதிகள் குறுக்கறுக்கும் இந்தச் சந்திப்பிலுள்ள, இதே பஸ் தரிப்பு நிலையத்துச் சீமெந்து வாங்கில், அவன் அடிக்கடி உட்கார்ந்திருப்பான். சந்திப்பின் வடமேற்கு மூலையில் பேர்பெற்ற வர்த்தக வளாகம் ஒன்று அமைந்திருக்கிறது. ஏராளமான அலுவலகங்கள் அடங்கிய, பல அடுக்கு மாடிகள் கொண்ட ‘ப’ வடிவ வர்த்தக வளாகம். இதே கட்டடத்தின் தரைத் தளத்தில்தான் நான் பணியாற்றிவரும் அலுவலகமும் இருக்கிறது. மடியில் வெடி கட்டி


கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும்

 

 நான் கனடாவுக்கு வந்த புதுசு. அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம். அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரைதட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில் – அவரது பரிபாஷையில் – அவர் ஒரு பழைய காய். கனடா பற்றிய கற்கைநெறியில் அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒருவகையில் குருகுல வாசந்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுக்குள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் –


ஜீவித சங்கல்பம்

 

 நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு அசதியும் களைப்பும் மேலிட, முதுகுப் பையைக் கையிலேந்திக்கொண்டு, ரொறொன்ரோ மவுண் சினாய் மருத்துவ மனையிலிருந்து, யூனிவேர்சிற்றி அவெனியூ வாசல் வழியாக வெளியே வருகிறேன். இலையுதிர் காலத்து இளங்காலைக் கதிரொளியில் கண்கள் கூசின. இதமான காற்றும், மிதமான வெப்பமும் உடலுக்குப் புத்துயிரூட்டின. யூனிவேர்சிற்றி அவெனியூ வழக்கம் போல, வாகனச் சன சந்தடியுடன் அல்லாடியபடி! டாக்ஸி ஒன்றைக் கையசைத்துக் கூப்பிட்டு, பின்னிருக்கையிலேறி மெதுவாக அமர்கிறேன். ‘எங்கே போகவேண்டும்?’ எனக் கேட்பதற்கு, சாரதி பயன்படுத்திய எத்தியோப்பிய


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!

 

 இது ஒருவகை இயற்கையின் அவஸ்த்தை! இந்த உபாதையை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. சிறுநீர்ப்பை வீங்கிப் புடைத்து வெடித்துவிடுமாப்போன்ற வேதனை! ராத்திரி பூராவும் வருந்தியழைத்தும் வாராதிருந்த தூக்கத்தை வரவழைத்துதவிய ‘மோல்ஸன் பியர்’ மூத்திரக் குடலினுள் முட்டி நிரம்பிக் கொடுமைப்படுத்துகின்றது. கட்டிலை விட்டு அவசரமாக எழும்புகிறேன். யுத்த வலயம் ஒன்றிலிருந்து திக்குத் திக்காகச் சிதறிப்போன குடும்பத்தினராய், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூக்கி வீசப்பட்டுக் கிடந்த செருப்புக்களைக் கால்களால் தடவித் தேடிக் கண்டுபிடித்து, பாதங்களில் சொருகிக்கொண்டு ‘வொஷ் றூம்’ நோக்கி ஓடுகிறேன். ‘………………’


வெள்ளைப்புறா ஒன்று……!

 

 மனசு குதூகலித்தது! ‘யுரேக்கா’ எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது. இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் – அதிலிருந்து திருட்டுத் தனமாக என்னையே ஆலிங்கனம் செய்யத் துருதுருக்கும் இரண்டு கண்கள் என்ற பொன்வண்டுகள் – பொன்னை உருக்கி உச்சந்தலையில் வழிந்தோட வார்த்தாற் போன்று, பாளம் பாளமாகப் பளபளக்கும் கழுத்தளவோடிய காந்தக் கூந்தல் – இவையாவும் சேர்ந்து என் நிஷ்டையைக் குழப்பிவிட்டன. ‘வாழ்நாள் பூராவும் அந்த அழகு தேவதையின் கடைக்கண் கடாட்ஷத்திற்காக, அவளது காலடியில் ஆயுட் கைதியாகவே கட்டுண்டு