கதையாசிரியர் தொகுப்பு: கோவி.கண்ணன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வேட்டை

 

 தன் முன் கைகளை இறுக்கமாக கட்டியபடி பவ்யமாக நின்ற மக்கள் நல அமைச்சர் பெரியமுத்துவை பார்த்து, “யோவ்! பெரியமுத்து, உன் தொகுதிதான் ரொம்ப மோசமா, வீக்கா இருக்குன்னு… நாம அனுபிச்ச, தனியார் சர்வேயில தெரிய வருது …” என்று ஒரு ரிப்போட்டை மேசையின் மீது தூக்கிப் போட்டு, கோபமாக சொன்னார் கட்சித்தலைவர். “தெரியுதுங்க தலைவா… அதான்… ஏதாவது பண்ணலாம்னு …” மெதுவாக தலையை சொரிந்தபடி இழுத்தார் அமைச்சர் பெரியமுத்து. “இப்படியே தலைய சொரிஞ்சின்னா, எலக்சனுக்கு அப்புறம் கம்பிக்கு


பட்ட மரம்

 

 அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர் பெரியசாமி, வசிப்பறையின் சுவற்றில் காய்ந்த பூவுடன் கூடிய புகைப்படத்தில் தன் மனைவியை பார்த்துக்கொண்டு ஒறுக்களித்து பாயில் படுத்தபடி, பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்களும், மூக்கும் சிதறிகிடக்கும் குப்பை கூளங்களையும், அணைத்து எறியப்பட்ட சிகிரெட் துண்டுகளின் நாற்றத்தையும் கண்டுகொள்ளவில்லை. சற்று திறந்திருந்த வெளிக்கதவு வழியாக காற்று, வீட்டின் உள்ளே அடிக்கும் வீச்சத்தை குறைக்க முயன்றுகொண்டிருந்தது. அந்த


பூவினும் மெல்லியது…

 

 கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு வேதனையான உணர்வு, மின்சாரம் தீரப்போகும் டார்ச் லைட் மிக மங்கிய ஒளியை காட்டுவது போல் லேசாக திறந்த கண்களின் வழியாக பிம்பங்கள் தெரிந்தன. இரைச்சல் மாதிரி கேட்கப்பட்ட ஒலி தெளிவின்றி காதில் கேட்டது, மெது மெதுவாக அதிகரித்த இரைச்சலில், அப்பா அம்மாவின் அழுகைச் சத்தமும், அண்ணா அண்ணா – என்ற தங்கையின் குரலும் கிணற்றுக்குள் இருந்து