கதையாசிரியர் தொகுப்பு: கொ.மா.கோதண்டம்

1 கதை கிடைத்துள்ளன.

பளிச்சி

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கல கல வென்ற அவர்களது சிரிப்பொலி அந்த அருவியின் ஒலியோடு கலந்து அந்தக் கானகமெங்கும் வியாபித்தன. அருவி விழும் இடத்தில் தண்ணீர் தேங்கி நிறைந்து வழிந்து ஆற்றில் மெல்லப் பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றது. அந்த நீர்த்தேக்கத்தில் அவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். தோழிகள் பூங்கூவின் மீது கைகளால் நீரை வீசியடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். நீர்த்துளிகள் அவளது உடம்போடு ஒட்டாமல் முத்துக்களாய் உருண்டு சரிந்து நீரில் கலந்தன.