கதையாசிரியர் தொகுப்பு: கே.ரவிஷங்கர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

கிரவுண்ட் ப்ளோரில் கேண்டிட் பேய்

 

 அது ஒரு பெரிய மால்.மேற்குப் பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. ஒவ்வொரு தளத்திலும் அந்த லிப்ட் நின்று நின்று இறங்கிக் கொண்டிருந்தது.அதில் புதிதான திருமணமான இளம் தம்பதியர் மட்டும் கொஞ்சி குலாவியபடி. ………..9 ………..8 ………..7 ………..6 ………..5 ………..4 ………..3 ………..2 ………..1 ………..G கதவு திறந்ததும் யாரோ ஒரு இளைஞன் கொடூரமான கருப்புக் கலர் பேய் மாஸ்க் அணிந்து “பே…பே….பே..பே….ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா…. ஹிஹிஹிஹிஹி பே பே பே


பேய் வீட்டில் விழுந்த செல்போன்

 

 இந்த ஏரியாவுக்கு வந்தது மகா மடத்தனம் என்று குடித்தனம் வந்த அடுத்த நாளே மனம் புழுங்கினார் உதயச்சந்திரன்.சொந்த வீட்டுக்காரர்கள்தான் இங்கு நெடுநாள் தாக்குப்பிடிப்பார்கள். அங்கும் இங்குமாக சில வீடுகள்.கட்டிமுடிக்காத பாதியில் நிற்கும் வீடுகள் சில.குறுகலானத் தெருக்கள்.மழை பெய்தால் ஏரியா ரொம்ப மோசமாகிவிடும்.அடுத்து இரவு 8 மணிக்கு ஏரியா அடங்கிவிடுகிறது. அந்த பெரிய வீட்டைப் பார்த்தார். 12A,சோலைமலை நிவாஸ்.அதற்கு பிறகு ரோடு கிடையாது. Dead end. தெருவின் முனையில் தனியாக இருந்தது.தன் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளித்தான் இருந்தது. ஆட்கள்


பிளாக் அண்ட் ஒயிட் அம்மா

 

 அம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை. ஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின் குரல்தான் கேட்டது.வந்த நாளிலிருந்து அம்மாவின் அருகாமை தேவைப்படுகிறது.இந்த அருகாமை ஏக்கம் திருமணம் நிச்சயம் ஆன பின்புதான்.ஏன் இது?அவளுக்கே புரியவில்லை.திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இத்தனைக்கும் அம்மாவைப் பிரிந்து டெல்லியில்தான் கை நிறைய சம்பளத்தில் வேலை.பத்து நாள் லீவில் வந்திருக்கிறாள். ”ஏய் அம்மா..!அம்மா…!”என்று கூப்பிட்டவாறே சமயலறைக்குப் போனாள். ஸ்டவ்வின் மேல் ”உஸ்ஸ்ஸ்ஸ்” என்று குக்கரின் சத்தம்.வெயிட்டை