கதையாசிரியர் தொகுப்பு: கே.சுரேந்தர்

1 கதை கிடைத்துள்ளன.

தொடாமல் வீழ்ந்தேன்

 

 இருள். எங்கும் இருள். கண் திறந்தாலும், மூடினாலும் எந்த ஒரு வித்தியாசமும் அறிய முடியாத பேரிருள் இது. மண் வாசனையும் மலர் வாசனையை மட்டுமே உணர முடிகிறது. சற்று நேரத்திற்கு முன்பே மனித குரல்கள் யாவும் தேய்ந்து ஒரு புள்ளியில் மறைந்துவிட்டது. இவ்வுலகின் எந்த சக்தியாலும் தீண்ட முடியாத ஓரிடத்தில் அடைக்கப்பட்டுவிட்டேன். நாற்பது வயதான நான் சில மணி நேரம் முன்பு இறந்துவிட்டதாக எண்ணி, உறவுகள் என்னை பார்த்து அழுதுவிட்டு, பேசிவிட்டு, சிரித்துவிட்டு, புதைத்துவிட்டு கலைந்து விட்டார்கள்.