கதையாசிரியர் தொகுப்பு: கு.அழகர்சாமி

3 கதைகள் கிடைத்துள்ளன.

எஞ்சினியரும் சித்தனும்

 

 (1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய் “ போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்” என்பேன். போன மாதமானாலென்ன’; போன தினமாலென்ன; மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்கு தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து


ஈக்கள் மொய்க்கும்

 

 ”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை நகரையே மலைப்பாம்பாய் உள் விழுங்கிக் கொண்டு மூச்சிரைப்பது போல கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும். வித விதமாய் எத்தனை எத்தனை மனிதர்களையோ மாறி மாறி வரைந்து கொண்டிருக்கும் மாபெரும் உயிர்த் திரைச்சீலை போல பேருந்து நிலையம்


மானம்

 

 இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு விருப்பமாகி விட்டது. ஒரு ஆரம்பித்திலிருந்து ஒரு முடிவுக்குச் செல்லும் வாழ்க்கையைப் போல இரயில் ஊடறுத்துக் கொண்டு போகிறது என்று பல சமயங்களில் அவன் நினைப்பதுண்டு. இரயில் விரைந்து செல்லும் வழியெல்லாம் நில்லாக் காட்சிகளில் மனந் தோய்ந்து நிற்கும் புதிரை அவன் இரயில் பயணம் முழுவதும் விடுவித்துக் கொண்டே இருப்பதுண்டு. இரயில் நிற்கும் இரயிலடிகளை விட தான்