கதையாசிரியர் தொகுப்பு: குருநாதன் ரமணி

10 கதைகள் கிடைத்துள்ளன.

பூவே சுமையாகும் போது…

 

 “பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?” என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை அமைந்த திறந்தவெளியில் மாலையில் காலார நடந்துகொண்டே புத்தகம் படிப்பவர் சுற்றிலும் நடப்பதை முற்றிலும் மறந்துவிடுவார்! நுழைவாயில் இரும்புக் கதவின் ஈட்டிக் கம்பியில் மாட்டியுள்ள மஞ்சள் பையினுள் பார்த்தேன். இரண்டு முழம் மல்லிகையும் ஒரு முழம் ஜாதி மல்லிகையும் இருந்தது. பூச்சரங்களை எடுத்துக் கணவரிடம் காட்டினேன். “பாருங்கோ, மூணாவது நாளா இன்னைக்கும் மல்லி மலர்ந்தே இருக்கு.” “மலர்ந்தே


திருட்டுப் பட்டம்!

 

 சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது. நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும்


ஏட்டுச் சுரைக்காய்!

 

 அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. ’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். “யாரு?” பதிலாக மீண்டும் கதவைத் தட்டும் ஒலிதான் கேட்டது. திறந்து பார்த்தால் வாசலில் தாணாக்காரர் ஒருவர். “நீங்கதானே எழுத்தாளர் ஏகலைவன்?” “ஆமாம், ஏன்?” “இன்ஸ்பெக்டர் ஐயா உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னார்.” “என்ன விஷயம்?” “தெரியாது.” “ஏங்க, ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கு வந்து உடனே வான்னா எப்படி வரமுடியும்? இப்பதான் எழுந்து பல்விளக்கினேன். இன்னும்


கைக்கு எட்டியது!

 

 வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும் போன வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! முன்னொரு காலம் நாங்கள் லாயிட்ஸ் சாலையில் ஒரு வாடகை வீட்டில் மாடியில் குடியிருந்தோம். பக்கத்து வீட்டில் ஒரு பெரிய மாமரம். மாம்பழ சீசனில் அந்த மரத்தில் எண்ணி மாளாத பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கும். மரமே பொன்னால் வேய்ந்ததுபோல் மிளிரும்!


பாட்டியும் பேரனும்

 

 யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம் ’ப்ராஹ்மண-பந்து’ ['யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்' என்பது அந்தணர்கள் தம் குலதர்மமாகப்பட்ட, வள்ளுவர் குறிக்கும் அறுதொழில்களையும், இந்த நாளிலும் தம்மால் இயன்ற அளவு செய்து வருவது அவர்களுக்கு உத்தமாக அமையும் என்பதாகும்.] “பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்”, என்றான் ஆறு வயதுப் பேரன். “நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!” பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஹாலில் உயரே மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த பாட்டியின் மடிப்புடவையை லாவகமாக ஒரு நீண்ட மூங்கில் கழியால் மேலே


முகம் தெரியாப் பகைவர்கள்

 

 முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத் தட்டிவிட்டான். வலது கையில் கட்டியிருந்த டிஜிடல் கடிகாரத்தில் அவன் எப்போதோ அமைத்திருந்த அலாரம் ’கீங்க்கி…கீங்க்கி…’ என்று சிணுங்கியது. “எழுந்திரு மோகனா! மணி ஆறே-காலாச்சு, போலாம். அப்பா வேற ஊர்லேர்ந்து வந்திருக்கார்.” கைகளைத் தலைக்கடியில் முட்டுக்கொடுத்து புல்தரையில் மல்லாக்கப் படுத்தபடி செக்கர் வானத்து விந்தைகளை ரசித்துக்கொண்டிருந்த மோகனா அவனை நோக்கிக் கைகளை நீட்டினாள். அவன் அவள் கைகளை


மானுடம் போற்றுதும்

 

 பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு நிரப்பிய வாசுதேவன், “கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்” என்றான். “சும்மா இரய்யா, அவன் ஏதோ விளையாட்டுக்குச் சொல்றான்” என்றான் ஸ்டீபன், தன் பாட்டிலைத் திறந்தபடி. “இல்லை ஸ்டீபன். ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன்னு நான் ஆணித்தரமாக நம்பறேன். இதை என்னால் நிரூபிக்க முடியும்.” “அதுக்காக உன் குழந்தையைப் பணயம் வைக்க முடியுமா?” “என் குழந்தையைப்பற்றி


பெண்மையின் அவலங்கள்

 

 “மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!” ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள். “…உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ பொழுதுபோக்கு சாஃப்ட்வேர் வகைகளில் ஓர் அறுதியான சாதனையாகும். ஒரு சிறிய, பன்னிரண்டு அங்குல கம்ப்யூட்டர் திரையில் நீங்கள் இயக்கியுள்ள முபபரிமாண கார்ட்டூன் பாத்திரங்களும், அவற்றின் வடிவமைப்பும், பின்னணி சூழல்களும் இசையும் வியக்கவைக்கின்றன.


புதிய கோணங்கி

 

 ராமானுஜம் அலுவலகம் கிளம்ப சைக்கிளை சாய்த்து வலதுகாலால் பெடலைத் திருப்பி வசதியாக ஏறி அமர்ந்தபோது அவர் மனம் ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ என்றது. இது மட்டுந்தானா இன்னும் இருக்குது சாமி… கமலா, டேப் ரிகார்டரை சின்னதா வெச்சுக்கச் சொல்லு ரமாவை! தெரு முழுக்க அலர்றது.” “சரின்னா. நீங்க சகுனம் பார்த்து ஜாக்ரதையா கிளம்புங்கோ. அமாவாசை. மத்யானம் சாப்பாட்டுக்கு வழக்கம்போல வந்துருவேள்ல? இல்ல ஏதாவது லோன் இன்ஸ்பெக்*ஷன் அதுஇதுன்னு–” “இன்னிக்கு அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது. ரெண்டு மணிக்கு பாங்க்


அவன் அவள்…

 

 [ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை--ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.] (’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்…’ என்ற தலைப்பில், கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு சி.க. இதழில் பிரசுரமாகியது; அட்டைப்படக்கதையாக என்று ஞாபகம். இங்கு நான் பதிவது எடிட் செய்யப்படாத முழுக்கதை.–ரமணி) ஹைதராபாத் நாம்பள்ளி ஸ்டேஷனில் அவளை நிம்மதியாக வழியனுப்பிவிட்டு அவன் வெளியில் வந்தபோது மழை மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது… என்ன கீத், என்ன தேடறே? துணியெல்லாம் இறைஞ்சு கிடக்கு? ஒண்ணும் தேடல. நான் ஊருக்குக்