கதையாசிரியர் தொகுப்பு: குப்பிழான் ஐ.சண்முகன்

27 கதைகள் கிடைத்துள்ளன.

நான் சாகமாட்டேன்

 

 (1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேல் மாடியில் வலைக்கம்பி அடித்த ஜன்னல்களுக்கப் பால், மர உச்சிகளின் பரந்த பச்சைக் கம்பளங்கள் இருட்கோலம் பூண்டன. இருண்ட பச்சை, மஞ்சள் பரவிய பச்சை, புதிய தளிரான பச்சை என்ற அத்தனை பச்சைகளும் – பூவுலகின் அதிசயங்களாய் அப்பச்சைகளிடையே தலைகாட்டி, தென்றலில் சிலுசிலுத்த சின்ன சின்ன பூக்களும், அந்த இருட்போர்வையுடன் இரண்டறக் கலந்தன. பூமி இருண்டு வந்தது. மங்கி மறைகின்ற மாலை நேரத்துச்


சிறை

 

 (1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அவரை இன்று காணவில்லை. அவர்’ என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. வேறுவிதமாகச் சொல்ல என்னால் முடியவில்லை. வேறு எப்படிச் சொல்வதாம்? அவன்’ இல்லாவிட்டால் அவர்தானே! ஒரு சாதாரண இளம் வாலிபன். அந்த எளிமையையும் குறுகுறுக்கும் கண்களையும் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. கொஞ்ச கூச்ச ஸ்பாவமும் கூட. அவர் வருகின்ற நேரம் கடந்துவிட்டது. இனி அவரை எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும் மனதில்


சுயம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்வராசா அமைதியின்றித் தவித்தான். அவன் எதிர் பார்த்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. காலத்தின் மந்தகதியான சுழற்சியில் எல்லாமே மாறிவிடுமென அவன் எதிர்பார்த் தான். மனிதர்கள் நல்லவர்களாகி விடு வார்கள்; சுயநலத்தை மட்டுமல்லாமல் பரநலத்தைப் பற்றியும் சிந்திப்பவர்க ளாய் இருப்பார்கள்; பேராசை பிடித் தவர்களாய் இருக்க மாட்டார்கள். தாம் வாழும் காலத்தைப் பற்றி அடிக் கடி நினைப்பவர்களாய் – நல்லவற்றை மட்டுமே செய்பவர்களாய் –


திவ்ய திவலை

 

 விவாகமான நாலாம் நாள் படுக்கையறைக்குப் போனபோது எதுவிதசலனமும் முகவாட்டமும் இன்றி, அவள் என்னைப்பார்த்துக் கேட்டாள் ‘முன்பு உங்களுக்கும் விமலாவுக்கும் ஏதாவது தொடர்புகள் இருந்ததுண்டா?’ தீயை மிதித்தவன் போல நான் திடுக்கிட்டேன். எந்த இரகசியத்தை அவள் அறியக்கூடாது என்பதற்காக – கட்டிக்காத்து ஜாக்கிரதையாகப் பழகினேனோ அதை அவள் அறிந்துவிட்டாளா? அவள் கேள்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் திக்கித் திணறிச் சமாளித்து- மெதுவாக, பவ்வியமாக அவளைப் பார்த்துக் கேட்டேன். ‘என்ன சீலி அப்படிக் கேட்கிறாய்? என்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?’ அவள்


நிகழ்வுகள்

 

 (1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எதிர்பார்க்கப்பட்டது போலவே நண்பன் அறையில் இல்லை என்று தெரிந்தது. புதிய நாயும், பழைய டிட்டோவும்’ வாலைக் குழைத்து மகிழ்ச்சிக் குரலெழுப்பி அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஏற்கனவே கொழும்பில் வேலை பார்த்த இரண்டு மூன்று வருடங்களாக அவனுக்கு ‘டிட்டோ ‘வுடன் பழக்கம். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் கொழும்புக்கு வந்தபோதுதான் புதிய நாயுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனைக்


ஒரு ஒட்டாத உறவாய்

 

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இல்லை; இது தொடங்கித்தான் எத்தனையோ காலமாயிற்று. இப்போதும் – அவ் அவ்போதுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு ஒட்டாத உறவாய் இயைபில்லாத ஒட்டுறவாய்… அந்தக் காலங்களில் அவன் மிகவும் குதூகலமான வனாய் இருந்தான். சிட்டுக் குருவியைப்போல உற்சாகமாய் சுற்றிச்சுற்றி வந்தான். தனக்குள்ளேயும் நண்பர்களிடையேயும் ஓயாது தர்க்கித்துக் கொண்டே இருந்தான். முகத்தில் வசீகரமும் கண்களில் தீட்சணியமுமாய் உலகமே எனக்காக


கனவு

 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் அலுவலகத்திற்கு வந்ததும் அந்தச் செய்தி கிடைத்தது. அவளின் தந்தை கடந்த இரவில் செத்துப் போனாராம். பரபரப்பு மேலோங்கவில்லை. எப்படி..எப்படி..என்ற செய்தி அறியும் உணர்வே கிளர்ந்தது. துண்டு துண்டாக, அங்குமிங்குமாக, பொய்யும் மெய்யு மாக, ஒன்றுக்கொன்று முரணான தகவல்கள் கிடைத்தன. அப்படிப் பிரமாதப்படுத்தப்பட வேண்டியதாகவோ பெரிதாக அலட்டிக் கொள்ளத்தக்கதாகவோ ஏதுமில்லை. அவர் வயது போனவர்தானாம்; இரண்டு மூன்று நாட்களாக சிறிய சுகவீனமாகப் படுத்திருந்தவர்,


உடைவுகள்

 

 (1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த முறையும் பொருந்துவது போல வந்து பொருந் தாமல் அது நழுவிவிட்டது. அவன் மீண்டும் பழைய படி முயலத் தொடங்கினான். பழைய துணியைக் கிழித்து, இயந்திரத்தில் நீர் வரும் குழாயைப் பொருத்து மிடத்தில் சுற்றிவிட்டு, மிக மிக மெதுவாக மீண்டும் குழாயை இயந்திரத்தோடு பொருத்தத் தொடங்கினான். பொருந்து வதுபோல் அது இறுகி வந்தது. அசட்டுத் துணிச்சலில் அசைத்துப் பார்த்தான். இறுகியதாகவே பட்டது. மேலும்


பிரிவதற்குத்தானே உறவு

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஏதோவொரு விரக்தியான மனப்போக்கில், தண்டவாளக் கட்டைகளில் கால்களைப் பதியப் பதிய வைத்து நடந்து கொண்டிருந்தான் கருணாகரன். வானத்தில் கவிந்திருந்த மேகக்கூட்டங்கள் மத்தியில், மேற்குத் திசையில் மாலைச் சூரியன் கருமஞ்சள் நிறத்தில், கவலையால் கலங்கியிருப்பது போல மினுங்கிக் கொண்டிருந்தான். கடற்கரையில் சாய்ந்து வளர்ந்திருந்த ஒற்றைத் தென்னை மரம் மேல் காற்றில் மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தது. நீலத் திரைகள் மெதுவாக கரையை வருடிக் கொண்டிருந்தன. தண்டவாளக்


விடிவு வரும்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலையைச் சொறிந்து கொண்டாள் ஈஸ்வரி. எவ்வளவு நேரந்தான் இப்படியே இருந்து, இருந்து யோசிக்க முடியும். எவ்வளவு நேரந்தான் மனத்தில் நினைந்து நினைந்து ஏங்கி, ஏங்கி அழமுடியும். எவ்வளவு நேரந்தான் வாசற்படிக்கட்டில் ஒற்றைக்காலை நிமிர்த்தி ஊன்றி, ஒரு கையை அதன் மேல் நீட்டி, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கமுடியும். எவ்வளவு நேரந்தான் அந்த மங்கல் மாலைப் பொழுது தொடர்ந்து நீடிக்க முடியும். உயிர்துடிக்கும் மாலை