கதையாசிரியர் தொகுப்பு: கி.கல்யாணராமன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

நரியின் ஆசை!

 

 ஒண்டிபுதர் காட்டில் வசித்த நரிகளில் ஒன்று தந்திரம் மிக்கது; அதன் பெயர் நீலன். காட்டில், எல்லையை வகுத்து, சிறிய விலங்குகளை வேட்டையாடும் நரிகள். அது போன்று கிடைக்கும் உணவு, நீலனுக்குப் பிடிப்பதில்லை. அது, சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் வேட்டையாடும் மான், எருமை இறைச்சியையே சாப்பிட விரும்பியது. ஆனால் சிங்கம், புலியை நினைத்தாலே பயம்; அதனால், ஒரு தந்திரம் செய்தது. ஒரு நாள் – மரத்தின் மறைவில் நின்றுக் கொண்டது நீலன் நரி. மரத்தின் மறுபக்கம்,


முத்து வணிகரின் பேராசை

 

 முன்னொரு காலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வீரபுரி என்கிற ஊரில் கருப்பன் என்று ஒரு சிறிய செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு காத்தாயி என்ற மனைவியும், சூரன் என்ற மகனும் இருந்தனர். தினமும் பாடுபட்டு நிறய பணம் சம்பாதித்துவந்தான். ஆனால் அவன் அந்த பணத்தை செலவு செய்யாமல் மிகவும் சிக்கனமாக இருந்தான். சம்பாதித்த பணம் முழுவதும் அவன் வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் சேமித்து வைத்தான். அதனால் அவனை எல்லோரும் கருமி என்று அழைத்தனர். அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்ல


விபத்து, கொலை, விடுதலை

 

 23 ஜனவரி 2011: மனோ வேகமாக காரில் போய்க்கொண்டிருந்தான். காரின் வேகம் அதிகமானாலும், அவன் கவனம் முழுவதும் துல்லியமாக ரோட்டிலேயே இருந்தது. ஈ. சி.ஆர். ரோடு குறைந்த ட்ராபிக்கோடு அமைதியாக இருந்தது. காருக்குள் மெல்லிய இசையும் இதமான குளிர் காற்றும் கார் ஓட்டுவதை இன்பமாக்கிக்கொண்டிருந்தன. முத்துக்காடு தாண்டி கார் மேலும் வேகம் பிடித்தது.. வேகமாக கார் சென்றுகொண்டிருந்தாலும், சாலை ஓரம் இருந்த அது மனோகரின் கண்களில் பட்டது. அது ஒரு சிவப்பு நிற துப்பட்டா. உடனே காரின்


மகாசூரன்

 

 கட்டியங்காரன் உரத்த குரலில் “ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர ..சூராதி சூர சூப்பர் சுப்பராய, வீராதி வீர, வீரப்ரதாப கரி கை ராஜன் மகாசூரன் வருகிறார்.. பராக்..பராக்..” கேட்டுக்கொண்டே வந்த ராஜா மகாசூரன் தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த மகா மந்திரி சிங்கமுகனிடம் , “மகா மந்திரி, முதலில் இந்த கட்டியன்காரனுக்கு புத்தி சொல்லுங்கள். அவன் சொல்லும் உபசார வார்த்தைகள் என்னை வதைக்கின்றன..” என்றார். “ஏன் மன்னா?” மகா மந்திரி சிங்கமுகன் ஒன்றும்


பாலக்காடு ஜோசியர்

 

 “வங்கி மேலாளருக்கு வணக்கம். நான் நமது வங்கியின் பல நூறு வாடிக்கையாளர்களில் ஒருவன். உங்களுக்கு மிகவும் பழக்கமானவன். இந்தக் கடிதத்தில் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இப்பொழுது நமது வங்கியின் கிளை வங்கிக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருவது நம் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி! ஆனால் எனக்கு மனதில் ஒரு எண்ணம். நான் கடவுளுக்கு பயந்தவன்! தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் பூஜை செய்பவன்! சுதர்சன ஜபம் தினமும் 108 க்கு குறையாமல் செய்து