கதையாசிரியர் தொகுப்பு: கிறிஸ்டஸ் செல்வகுமார்

5 கதைகள் கிடைத்துள்ளன.

சோற்றுத் திருடர்கள்

 

 ஒரு மனிதன் ஓடுகிறான்… அவனைத் துரத்திக்கொண்டு ஒரு பத்துப் பதினைந்து பேர் ஓடுகிறார்கள் – ‘விடாதே! பிடி!’ என்று கத்தியபடி. ஓட்டப் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக வெற்றிபெற்ற அந்தப் பத்துப் பதினைந்து பேர், ஓடத்தெரியாத அந்த ஒற்றை மனிதனை ஓடிவிடாமல் கால்கள் பின்னிக்கொண்ட நிலையில் பிடித்துப் பந்தாடி முடித்ததும் – மூச்சுத் திணறும் வாய் குழறலோடு அவன் ஒப்புக் கொள்கிறான், தான் திருடியது உண்மை என்று. அந்த உண்மையை விடப் பெரிய உண்மை – அவனுக்குப் பசி எடுத்ததுதான்!


ஏனோக்கு

 

 ஏனோக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை அறிந்தபோது என் உள்ளம் துன்பத்தில் நிறைந்த அதே நேரம், வேதத்தில் உள்ள வசனம் என் நினைவுக்கு வந்தது. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருகையில் காணப்ப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்’. (ஆதியாகமம் 5:24) எழுபது வயது முதியவர் ஒருவர் தன் கையைப் பின்னால் கோத்துக்கொண்டு தலை குனிந்து மிகுந்த யோசனையோடு மெதுவாக நடந்து வருவதையும், எதிரே வரும் யாராவது ‘வணக்கம் தாத்தா’, என்றால் பதிலுக்கு இரு கைகளையும் குவித்து


குணமாக்கும் அன்பு

 

 பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன், “யாரப்பா அது இந்த நேரத்தில் வந்து இப்படி கதவைத் தட்டுவது?” என்று கோபமாகக் கேட்டான். மலாக்கி ஒரு திராட்சைத் தோட்டக் காரன். அவன் குத்தகை நிலத்திலே திராட்சைத் தொட்டாதை உண்டாக்கி அதனைப் பராமரித்து வந்தான். விளைச்சலில் நிலச் சொந்தக்காரனுக்கு உண்டான பாகத்தைச் சரியாகச் செலுத்தி விடுவான். இராயனுக்குச் செலுத்த வேண்டிய வரியையும் சரியாகச் செலுதிவிடுவான். இவ்வளவு


இழப்பினும் பிற்பயக்கும்

 

 மாலை ஆறரை மணியிருக்கலாம் விடுதி அறையில் விளக்கினைப் போட்டு விட்டு எழுத உட்கார்ந்தேன். ‘கொங்கு தேர் அஞ்சிறைத் தும்பியாக’ அன்று பகல் பொழுதில் நூலகங்களில் குறிப்புகளைச் சேகரித்திருந்தேன். இப்போது அவற்றை வகை தொகை படுத்த ஆரம்பித்தேன். பிறகு குறிப்புகள் கோவையாக இருக்கின்றனவா என்று படித்துப் பார்த்துத் திருப்தி அடைந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள் கருத்தரங்குகள் வாய்மொழித் தேர்வுகள் என்று தொடர்ச்சியாக இருப்பதால் சனிக்கிழமைகளில் மட்டுமே நூலகங்களுக்குச் சென்று


காணாமற்போன மணி பர்ஸ்

 

 கடற்கரைச் சாலையைக் கடப்பதற்குக் கையில் சூட்கேசுடன் காத்திருந்தான் கிளெமென்ட். சாலையில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வந்த வண்ணமிருந்தன. சாலையில் சற்றே இடைவெளி கிடைத்த வேளையில் அவசரமாகச் சாலையைக் கடந்த கிளெமென்ட், மறுபுறம் சேர்ந்தவுடன் எதேச்சையாகப் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தான். திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது அவனுக்கு. காரணம் பாக்கெட்டில் இருந்த மணி பர்ஸ் காணவில்லை. பர்ஸ் பறி போய் விட்டது. அத்துடன் அதில் வைத்திருந்த ஹாஸ்டல் மெஸ் பீஸ் நானூற்றைம்பது ரூபாயும் போய்விட்டிருதது.