கதையாசிரியர் தொகுப்பு: கிரிஜா ஜின்னா

2 கதைகள் கிடைத்துள்ளன.

வெந்து தணிந்த மழலைகள்

 

 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் சக்திவேலின் மேசை மேல் இருந்த அனைத்துத் தொலைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலித்தன. அவருடைய நேரடி தொலைபேசியும் அந்தரங்க காரியதரிசி மூலம் வரும் தொலைபேசிகளும் ஒலித்தன. இது காணாது என்று சக்திவேலின் கைப்பேசிகள் வேறு அலறின. கடந்த பதி னைந்து நிமிடங்கள் வரை மிக மிக அமைதியாக இருந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் தீடிரென்று ஒரு பெரிய நிகழ்வு நடக்கும் இடமாக மாறிவிட்டது. அதுவும் இப்போது எண்ணிக்கையில் அடங்காத செய்தி தொலைக்காட்சிகள் வந்து விட்டதால்


வரம்

 

 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம…… ஒரே சீராகக் கோவிலிலிருந்து குரல் வந்தது. சீதா மெல்லக் கண் விழித்தாள். நிமிர்ந்து, இருந்த ஒரே ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரே இருட்டு தான். மணியைப் பார்க்கத் தேவையே இல்லை. கோவிலிலிருந்து குரல் வந்து விட்டதென்றால் மணி சரியாக ஐந்து, தனுர் மாசம் என்பதால் இவ்வளவு அதிகாலையிலேயே கோவில் நடையைத் திறந்து விடுவார்கள். குளிருக்கு கைகளையும் கால்களையும் ஒடுக்கிக் கொண்டு படுத்திருந்ததில், உடம்பெல்லாம் வலி, தலயணை இல்லாமல் படுத்ததில் மண்டை