மர்ம தீவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 5,684 
 

தீவின் மலையில் இருந்து ஒரு வழியாக இறங்கிய ஷாம், தொண்டை காய்ந்து தண்ணீர் தாகமெடுக்க சுற்றுவட்டம் தேடி பார்த்துவிட்டான்… கடலைத் தவிர அவன் கண்களில் எதுவும் தென்படவில்லை.

முயற்சியை கைவிடாது அடர்ந்த தீவில் எல்லா பக்கமும் தண்ணீர்க்காக தேடி ஓடியவனுக்கு அதிர்ஷ்டவசமாகா ஒரு நீர் குட்டையை பார்க்க கிடைத்தது. ஓடோடி சென்றவன் இரு கைகளாலும் வாறி வாறி தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு அவ்விடத்திலே அசதியில் சாய்ந்துகொண்டான்…

சூரியன் அஸ்த்தமித்துக் கொண்டிருந்தது. அது மனித சஞ்சலமே அற்ற அந்த தீவின் காட்டில் தனிமையில் அகபற்றுக்கொண்ட ஷாம் ‘இந்த இரவை நான் எப்படி கழிப்பேன்!’ என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் ‘மிருக நடமாட்டம் இருக்குமோ?’ என்ற அச்சமும் அவன் மனதை ஆட்கொண்டுவிட்டது.

“யாராவது இருக்கீங்களா!?”” என பதட்டத்துடன் சத்தமா கூக்குரலிட்டுப்பார்த்தான் ஷாம். அவனது சத்தத்தின் எதிரொலியோடு அங்கு நிலவிய மயான அமைதி அவன் பயத்தை மேலும் மேலும் உக்கிரமாக்கியது .

‘இனி வேறு வழியில்லை’ என ஓடிச்சென்று அடர்த்தியான மரமொன்றில் ஏறிக்கொண்டான் ஷாம். தடிப்பமான அந்த மரத்தின் கிளையில் சாய்வு நாற்காலி போன்ற பகுதியில் சாய்ந்துகொண்ட அவன் , கடும் குளிரில் நடுக்கத்துடன் தூக்கம் கண்ணைக் கட்ட பயத்தில் உறக்கமும் தடுமாற வானத்தையே அடிக்கடி பார்த்தபடி, கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் சந்திரனின் மெல்லிய வெளிச்சம் மட்டுமே அந்த அடர்ந்த தீவின் காட்டில் அவனோடு துனையிருந்தது .

‘எப்படியாவது இந்த இரவை கடத்திவிட்டோம்னா போதும்!’ என்ற படபடப்பு வினாடிக்கு ஒருமுறை மனதை உறைய வைத்தது.

திடிரென மின்னலும் இடியுமாக முழங்க திடுக்கிட்டு நிமிர்ந்து உற்கார்ந்துகொண்ட ஷாம் மின்னல் ஒலியில் ஒரு பயங்கரமான காட்சியை காணக்கிடைத்தது.

மனித மண்டை ஓட்டின் முன் பகுதியை தலைக்கவசமாக அனிந்தபடி போர் வாள்களை உயர்த்திக்கொண்டு ஆடையின் பின் துணிகள் காற்றில் பறக்க, குதிரை படையொன்று தீவின் கரையோரமாக வேகமாக அவனை கடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன் பயத்தில், தான் பற்றிக்கொண்டிருந்த கிளையின் சிறு தடி அவனை அறியாமல் உடைந்துவிட மெதுவாக குனிந்து இலைகளுக்குள் மறையும் முன் அந்தப் படையின் கடைசியாக சென்ற உருவம் அவனை திரும்பி பார்த்துவிட்டது.

வேகமாக சென்றுகொண்டிருந்த அவர்கள் திடிரென குதிரைகளை சரமாரியாக திருப்பிக்கொண்டு அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். இதை கவனித்த ஷாம் சுய நினைவற்றுப்போனவனாக மயங்கி மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டான் .

அவன் விழுந்தவுடன் லேசாக மழையும் பெய்யத் தொடங்கியது. அவன் அருகில் வந்த அவர்களில் ஒருவன் பெண் குரலில் “ஷாம்… ஷாம்…” என எழுப்புவதுபோல் அவனது காதில் ஒளிக்க, கண்விழித்து பார்க்க பயந்துபோய் அப்படியே மயக்கத்துடன் இருப்பதுபோல் நடித்துக்கொண்டான். மழையின் தூரலின் சிறு துளிகள் அவன் முகத்தில் விழ அவனால் நடிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கண்களை விழித்துப் பார்ததான்!.

முகத்தில் தண்ணீரை தெளித்துவிட்டு, “ராசா எழும்புடா தங்கம்… நேர்சரிக்கு நேரமாச்சுல” என்றால் தனது ஐந்து வயது செல்ல மகனான ஷாமை பார்த்து சிரித்தபடி அவனது அன்பு அம்மா…!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *