கதையாசிரியர் தொகுப்பு: கார்த்திக் பாலசுப்ரமணியன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

யயகிரகணம்

 

 செம்மண் தரையில் சிந்திய நீரைப்போல பசி வயிரெங்கும் மெல்லப் பரவிப் படர்ந்தது. வயிறை நிரப்பிவிட்டால் மனதுக்குச் சிறகு முளைத்துவிடுகிறது. சிறகு முளைத்து மட்டுமென்ன பயன்? கூண்டை விட்டு வெளியேறி உயரப் பறந்து வானைத் தொட்டாலாவது பரவாயில்லை. முட்டி முட்டி மோதி கூண்டுக்குள்ளேயே சிறைப்பட்டு ரணமாகிறது. அதற்காகவே வயிறைக் காயப்போட்டேன். காலியான வயிறு எப்போதும் கனவுகளை அனுமதிப்பதில்லை. கைகள் நிறையப் பைகளையும், கண்கள் நிறையத் தூக்கத்தையும் எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ஏந்தி வந்தனர். ஆட்களை இறக்கிவிட்டும், ஏற்றிக் கொண்டும் பேருந்துகள்


திற

 

 அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணிகளில் பலர் வழியிலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இன்னும் சிலர் தொலைந்து போயினர். மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த பொழுது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தார். அவரைச் சுற்றி, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடங்கிய ஒரு கூட்டம் குமுறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டு பதற்றமடைந்த அவர் தூசு நிரம்பிய


உங்களுக்குக் கேட்டதா?

 

 என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார். மீண்டும் ஒரு முறை அவரிடம் அழுத்திக் கேட்டேன். “அதாங்க டி.வி, ஜன்னல் இல்லாத ஒரு ரூம் வேணும். மூணு நாளைக்கு. இருக்குதா? ” என்றேன். வழுக்கைத் தலை. ஒடிசலான தேகம். நெற்றியை நிறைத்த பட்டை. அவரைப் பார்த்தால் அந்த லாட்ஜில் வேலை செய்பவர் போன்றுதான் தெரிந்தது. “கொஞ்சம் இருங்க.. பாத்துதான் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஒரு


வினோதினியின் பூந்தொட்டி

 

 மிகவும் நிதானமாக பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதன் தலையில் படிந்திருந்த தூசியை அதற்காகவே முன்புறம் வைக்கப் பட்டிருந்த துணியால் துடைத்து விட்டு வினோதினியைப் பார்த்து உள்ளே போலாமா என்றான் ஹரி. அவளும் சரி என்று தலையை ஆட்டினாள் தான் வைத்திருந்த மல்லிகைப் பூவிற்கு கூட வலிக்காமல். ” புன்னகை, டாக்டர்.கைலாஷ் ” என்ற பெயர் தாங்கிய போர்டைக் கடந்து இருவரும் உள்ளே சென்றனர். அங்கே இருந்த ரிசப்ஷனிஸ்ட்டிம் சென்று ஐ யம் ஹரி. இன்னைக்கு டாக்டரிடம் 11


ஒரு காதல், மூன்று கடிதங்கள்

 

 கடிதம் – 1: அன்பின் ஷிவ், நலம். நலமறிய அவா என்றெல்லாம் தொடங்குவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிகாலையில் உன்னுடன் அவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்போது கடித இலக்கணம் கருதி ‘நலமா’ என்று ஆரம்பித்தால் அது நகைப்புக்குரியதாகத் தான் இருக்கும். உன்னைப் போலவோ உனக்குப் பிடித்த வண்ணதாசன் போலவோ கடிதத்தைக் கூட கவிதையாய் எழுதும் கலை எனக்கு அவ்வளவாக கைவராது. அது உனக்கும் தெரியும். தமிழைப் பொருத்தமட்டில் என்னுடைய வாசிப்புப் பழக்கமெல்லாம் வார இதழ்களின் வண்ணப் பக்கங்களோடு


லிண்டா தாமஸ்

 

 ” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” – இதுதான் லிண்டா என்று அழைக்கப்படும் லிண்டா தாமஸ் அலுவலக விஷயம் தாண்டி என்னிடம் கேட்ட முதல் கேள்வி. பேசிய முதல் விஷயம். பெரும்பான்மையான நாட்கள் அவர் வீட்டிலிருந்தே வேலை செய்வார். 17 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனம் அவருக்கு இந்தச் சலுகை கூட தராமல் போனால்தான் ஆச்சர்யம். அந்த நிறுவனத்தில் தனது 25 ஆம் வயதில் ஒரு கால் அட்டண்டராக சேர்ந்தவர். படிப்படியாக முன்னேறி, இன்று அவர்தம்


வழிப்போக்கன்

 

 துளித்துளியாய் வியர்வை கோர்த்து, நெற்றிப் பாறையில் ஒரு குட்டி அருவியாய் ஓடி என் காதுப் பள்ளத்தில் பாய திடுக்கிட்டு எழுந்தேன். தலைக்குப் பின்புறம் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த ஏர் கூலர், மின்சாரம் தடைப்பட்டு நின்றிருக்கிறது. காரை பெயர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த விட்டத்தை சில நிமிடங்கள் வெறித்து கொண்டிருந்தேன். வியர்வையில் நனைந்தபடி பக்கத்தில் சோனி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இன்றோடு இந்த நொய்டாவிற்கு வந்து ஆறு நாட்களாகி விட்டது. நான் புதிதாய்ச் சேர்ந்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டது.


மழை

 

 மழை அப்போது தான் பெய்யத் தொடங்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசை போல மென்மையாக ஆரம்பித்து அட்டகாசமாய் அதிரத் தொடங்கியது. எனக்கு எப்போதுமே மழையை ரசிக்க மட்டுமே பிடிக்கும், நனையப் பிடிப்பதில்லை. மழைக்கு முந்திய குளிர்ந்த தென்றலும், மழை பெய்யும் பொழுது எழும் மண்வாசமும், மழை பெய்து முடித்த பின் மரங்கள் கொண்டாடும் பசுமையும் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா என்ன?. வீட்டின் ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அம்மா போட்டுத் தரும் காப்பியைக் குடித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்ப்பது


நொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை

 

 அது ஒரு ஞாயிற்றுக் கிழமை சாயும் காலப்பொழுது. பள்ளி காலங்களில் இருந்தே ஞாயிற்றுக் கிழமை மாலைப் பொழுதுகள் பிடிப்பதே இல்லை. படிக்கும் காலத்திலாவது முடிக்க வேண்டிய வீட்டுப் பாடங்கள் எரிச்சலூட்டின. ஆனால் அது வேலைக்குப் போகும் இன்றைய நாட்களிலும் தொடர்வது ஆச்சர்யமே. அதிலும் நொய்டா போன்ற வட இந்திய நகரத்தில், டிசம்பர் மாத மாலை ஒருவித இனம்புரியா பயத்தையே என்னுள் நிரப்பிச் செல்கின்றது. அன்றும் அப்படித்தான் மாலை 5 மணி ஆகியிருக்கும். ஆனால் வெளியில் ஆறரை மணி


உதயசூரியன்

 

 மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும் போது. ” ஹே… சொல்லுமா.. ” ” ……………… ” ” இல்ல இல்லடா.. கொஞ்சம் ஒரு சின்ன வேலையா இருந்தேன். அதான்.. அத கையோடு முடிச்சுட்டு உனக்குக் கால் பண்ணலாம்னு இருந்தேன்” ” ……………… ” ” அதுவும் முக்கியம் தான் மா.. இப்போ என்ன செய்யணும் நான் ?” ” ………………. ”