கதையாசிரியர் தொகுப்பு: கனகா பாலன்

1 கதை கிடைத்துள்ளன.

லட்சுமி பொறந்தாச்சு

 

 பெரிய ஈயச் சட்டியில மொச்சைப் பயறு ஒரு அடுப்புலயும் சீனிக் கிழங்கு ஒரு அடுப்புலயும் ஏத்தி வச்சிட்டு வேலிமுள்ளையும் விறகுக் கட்டையையும் ஒவ்வொன்னா திணிச்சி கொஞ்சம் சீமெண்ணெயை ஊத்தி அடுப்பு பத்த வச்ச பொன்னம்மா தான் அந்த வீட்டுக்கு வந்த முதல் மருமக.. ஒன்பது மாச பிள்ளைத்தாச்சியா இருந்தாலும் மாமியாருக்குப் பயந்து பயந்து வேலை செய்வா.. “என்னத்தா ,நான் கடைக்குப் போயிட்டு வாரேனு சொல்லிக்கிட்டே தோள்ல கிடந்த அந்த பச்சைத் துண்ட சுருட்டி சும்மாடு செஞ்சி, “வா,