கதையாசிரியர் தொகுப்பு: ஏ.தேவராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாவின் தண்டனைகள்

 

 அப்பாவின் தண்டனைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறான். நிர்ப்பந்தங்களும் அத்துமீறல்களும் தலைதூக்கி அவனைப் பார்க்கிறபோதெல்லாம் அப்பாவின் தண்டனைகளைத்தான் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கிறது. நாகரிகம் அமைத்துக் கொடுக்கின்ற வேறு வகையான தண்டனைகள் மீது அவனுக்கு அத்துணைப் பிடிப்பில்லை.வீட்டில்,பணியிடத்தில், நண்பர்களோடு கலாய்த்திருக்கும்போது இப்படியான சந்தர்ப்பங்கள் சூழ்ந்துவரும்போதெல்லாம் அப்பாவின் முகம் மாறி மாறித் தோன்றுகிறது. போதைக்கு முன், சாந்த சொரூபியாகத் தோன்றுகிற அப்பாவின் பிம்பம் அதற்குப் பின் அப்படியே உடைந்து பல இராட்சஸர்களைத் தம்முள் இறக்குமதி செய்திருக்கும். இப்படியொரு பிசாசைப் பார்த்திருக்கவே முடியாது என்பது போல