கதையாசிரியர் தொகுப்பு: ஏ.ஆர்.முருகேசன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நிழலைத் தேடுபவன்

 

 அடர்த்தியான பனிக்காற்று நாசித் துவாரங்களில் நுழைந்து நெஞ்சுக் கூட்டை நிரப்பிக் குளிர வைத்தது. தலையோடு சேர்த்துக் காதுகள் இரண்டையும் மப்ளரால் மூடிக் கழுத்தில் கட்டியிருந்தாலும் உடல் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த மப்ளர், பல வண்ண நூல்களால் அன்புடனும் பாசத்துடனும் பின்னப்பட்டது. வண்ணக் கலவைகள் ஒழுங்கில்லாமல் பரவியிருந்தாலும் அதன் மீது எனக்குத் தனிப்பட்ட காதலே உண்டு. முக்கால் பாகத் தலையை மூடியிருக்கும் மப்ளர் ஒரு அஃறிணைப் பொருளாகக் கண்களுக்குப் புலப்பட்டாலும், அதன் உள்ளீடுகளில் உயிரோட்டமான உணர்வுகளே ஊடுருவி


யாசகர்கள்

 

 கலெக்சனை முடித்து ஹோட்டலில் சாப்பிட்டுப் பேருந்து நிலையத்தை அடைந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டது. மதுரை ரேக்கில் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்யாண வீட்டில் உணவருந்தி அப்படியே கிளம்பி வந்திருப்பார்கள் போலும். பெண்கள் மத்தியில் கல்யாணச் சாப்பாட்டைப் பற்றிய நிறை குறைகள் அலசப்பட்டன. இன்று முகூர்த்த நாளல்லவா… அது தான் பேருந்துக்கு மக்கள் அலைமோதுகிறார்கள். மதுரை செல்லும் பேருந்தில் அமர இடம் இல்லாமல் நிறைய பேர் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். பேருந்தினுள் அமர்ந்திருக்கும் அனைவரும் மதுரைக்குச்