கதையாசிரியர் தொகுப்பு: ஏக்நாத்

4 கதைகள் கிடைத்துள்ளன.

செவலைகள் தொலைந்த இடம்

 

 மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’


கொடலு

 

 ”நீ கேட்டா கேளு , கேக்கலைன்னா போடா பேராண்டி. ஆனா, சொல்லாம இருக்கமாட்டேன். இப்ப எழுவத்தஞ்சுன்னு வச்சுக்கோ, ஒங்க தாத்தன், மேல போயி என்னா, பதினைஞ்சு வருஷம் இருக்குமா? அப்பன்னா எனக்கு அறுவது வயசு. மில்லு வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்தேன். ஷிப்டுக்கு எந்திரிக்கணும், மயிரு, மம்பட்டிங்கதையெல்லாம் போயி, நிம்மதியா இருந்த நேரம். அப்பதாண்டா, என் கடைகுட்டி மவன் பெறந்தான். மூத்த மவன் பொண்டாட்டிக்கும் அப்பதான் பேர்காலம். ‘பேரனை கொஞ்ச வேண்டிய வயசுல, பிள்ளைய பெத்திருக்கான் பாரு’ன்னு


மூணு பொட்டு செவளை

 

 மழை விட்டபாடில்லை பாத்துக்கிடுங்க. வீட்டை விட்டு அங்க இங்க நகரமுடியலை. ஜிலுஜிலுன்னு ஊதக்காத்து. சும்மாவே வெறயல்னா தாங்க முடியாது. இப்ப மழை வேறயா. ரெண்டு சாக்கை இழுத்து மூடிட்டு, இருக்க வேண்டியாதா போச்சு. குடிச வேற டொப்பு டொப்புனு ஒழுவிட்டு இருக்கு. கூரையிலயிருந்து தண்ணி விழுத எடத்துல எல்லாம் தம்ளரு. தூக்குச்சட்டி, கொடம், குத்துப்போணின்னு வரிசையா வச்சிட்டேன். இன்னும் ரெண்டு எடத்துல தண்ணி விழத்தான் செய்யுது. வைக்கதுக்கு பாத்திரம் இல்ல. துணி மணியயெல்லாம் கட்டுல மேல தூக்கி


தோழர்

 

 சின்ன வாய்க்கால், கல்பாலம் தாண்டி இருக்கும் அரசமரத்தடியிலும் அதற்கு மேற்கு பக்கம் இருக்கும் கொண்டை ஐயர் தோப்பிலும் சித்தப்பாவை காணவில்லை. வெயில் சுள்ளென்று வாட்டி எடுத்தது. காலில் செருப்புப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம். நடுபாதத்தில் சூடு ஏறி மூளைக்குள் சுட்டது. செருப்பையும் எப்படி போடுவது? அதுதான் வார் அறுந்து கிடக்கிறதே. வேறு வார் வாங்கவோ, அல்லது புது செருப்பு வாங்கவோ இப்போதைக்கு முடியாது. இன்னும் இரண்டு மாதங்கள் அப்பாவின் மணியார்டருக்காக காத்திருக்க வேண்டும். அதுவரைக்கும் சூட்டோடு நடைதான். செருப்பு