கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கமலா இந்திரஜித்

6 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாப் பல்லி

 

 ஒற்றைப்பனை மரத்தடி நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு, பேருந்து நகர்ந்து விரைந்தது. மனைவி, குழந்தை மற்றும் பைகளுடன் நின்று சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டேன். பனைமரங்கள் வரிசையாய் நின்றிருந்தன. இந்தப் பக்கம் நெடுங்கரை; அந்தப் பக்கம் ஊட்டியாணி; பின்னால் சுபத்திரியம்; எங்கு பார்த்தாலும் வரப்புகளில் பனைமரச் செரிவுதான். இதில் எந்தப் பனை அந்த ஒற்றைப்பனை? அது இருக்கிறதோ, இல்லையோ அந்தப் பெயர் நிலைத்து நின்றுவிட்டது. ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் வயலெல்லாம் பொட்டல் வெளிகளாய்க் கிடந்தன. இதே நேரத்திற்குத் தண்ணீர்


பிராயச்சித்தம்

 

 எனது மூன்றாவது அக்காவும் திருமணமான ஒரே வருடத்தில் விதவையானபோது எனது மொத்தக் குடும்பமும் மீள முடியாத பெருந்துக்கத்தில் மூழ்கியது. அதிலும் எனது தந்தை சித்த சுவாதீனம் இல்லாதவர் போல், திரும்பத்திரும்ப ஒரே வாக்கியத்தைச் சொல்லிப் புலம்ப ஆரம்பித்தார். எங்க அக்காவுக்கு நான் செஞ்ச பாவம், என் பொண்ணுங்க தலைல விழுந்திடுச்சே! சாபத்துக்கு ஆளாயிட்டேனே! எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது அப்பாவிற்கு விசாலம் என்று ஓர் அக்கா இருந்திருக்கிறார். அவரது கணவர் அம்மை கண்டு குளிர்ந்து போக, அக்கால


சுமை

 

 கையில் ஏந்திய குழந்தையை மார்போடு அணைத்தவாறே தேசிகர் நடந்தார். அவர் மனைவி, பழைய துணிகளும், தண்ணீர் பாட்டிலும் வைத்திருந்த ஒயர் கூடையைத் தூக்கியவாறு, சோர்வாய்ப் பின் தொடர்ந்தார். அழுக்கு உடையும், பரட்டைத் தலையுமாய், கணவன் – மனைவி இருவரும் அகதிகள் போல் இருந்தனர். மார்கழி மாதப் பனி, அந்த முன்னிரவிலேயே இறங்க ஆரம்பித்தது. அதைப் பொருட்படுத்தாமல், குழந்தையை இறுக அணைத்தவாறே வேகமாய் நடந்தார் தேசிகர். சீக்கிரம் நடந்தால்தான் கடைசிப் பேருந்தைப் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் காலை வரை,


பழுப்பு மட்டைகள்

 

 ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள். ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள். வாங்கி தன் இடுப்பில் செருகி இருந்த சுருக்குப் பையில் போட்டு முடிந்து கொண்டே புறப்பட்டாள். “”பணம் பத்தரம், பத்தரம்; ஆமாம் சொல்லிட்டேன்; சொல்லிட்டேன்” என்றாள் மருமகள் வேலிப்படலை திறந்துவிட்டுக்கொண்டே. ராமாயிக்கு அவள் எந்தப் பணத்தைச் சொல்கிறாள் என்பது புரிந்தது. ஆனாலும் புரியாதவள் போல் தன் சுருக்குப்


யுத்த காண்டம்

 

 வேலாயி ஒரு மணி நேரமாக வீட்டை சல்லடை போட்டு சலித்துவிட்டாள். ரேஷன் கார்டைக் காணோம்; வீடென்றால் சிறிய குடிசைதான். அரிசிபானை, ட்ரங்க் பெட்டி, எரவானம், துணி மடித்து வைத்துள்ள அட்டைப்பெட்டி, விறகு பரண், தவிட்டு வாளி வரை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துவிட்டாள். ஓர் இடத்திலும் காணவில்லை. கை மறதியாய் வைக்கக் கூடியவளும் இல்லை; எப்பொழுதும் அரிசி, மண்ணெண்ணெய் வாங்கி வந்தவுடன் முதல் காரியமாக கார்டை மஞ்சள் பையில் போட்டு, சாமி படத்துக்குக் கீழுள்ள ஆணியில் மாட்டி விட்டுத்தான்


மயிலாம்பு!

 

 “”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். அறுப்பரிவாளும், டீ கூஜாவுமாய் அபூர்வம் வாசலில் நின்றிருந்தாள். “”ஊரெல்லாம் அறுப்பு அறுக்குது, நீங்க வரலை?” என்றாள். “”காலம்பற சீக்கிரமா எந்திருக்கணும்னு நெனச்சுத்தான் படுத்தேன். என்னமோ ரோசனை; பாதி ராத்திரிவரைக்கும் தூக்கமே வரலை. எப்ப கண்ணசந்தேனோ தெரியலை, நல்லா தூங்கிட்டேன். ஓங்கொரல் கேட்டோனோ பாயக்கூட சுருட்டலை. இரு இதோ வந்துட்டேன்” என்று உள்ளே ஓடி பாயை