கதையாசிரியர் தொகுப்பு: எம்.வி.வெங்கட்ராம்

4 கதைகள் கிடைத்துள்ளன.

பூமத்திய ரேகை

 

 ஒரு சிலரே ஆயினும், அறிவாளிகளே நிறைந்த அந்தக் கூட்டத்தில் அவன் மிகவும் அழகாகத்தான் பேசிவிட்டான். கவிதா வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு வந்த உவமைகள் சபையினரின் பிரமை பூண்ட கரகோஷத்துக்குக் காரணமாயின. அவைகளிலும் அவனுக்கே வியப்பு அளித்த உவமை ஒன்று. அதைப் பற்றி அவன் முன்னதாக நினைக்கவில்லை; மேலும் மேலும் விரியும் அவனுடைய பிரசங்கத்தில் அது தானாகவே முளைத்தது. அவன் பேசினான்; ‘பூகோளம் படித்த நீங்கள் அறிவீர்கள். பூமத்திய ரேகையைப் பற்றி, பூமிக்கு இடையில் உள்ளதாகக்


தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை

 

 கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும். என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், ‘கலியாணம் ஆகாத பையன்; குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கலாம். ‘காக்காயின் பொன் குஞ்சு’ என்று பரிகாசம் செய்கிறவர்களும் இருப்பார்கள். என் மகனை நான் இகழ்ந்தால்


அடுத்த வீடு

 

 சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில் MVV இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, “என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?” என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது


பைத்தியக்காரப் பிள்ளை

 

 விழிப்பு வந்ததும் ராஜம் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கக் கலக்கம் இல்லாவிட்டாலும் எதையோ எதிர் பார்த்தவன் போல் கொஞ்ச நேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பக்கத்து வீட்டுச் சேவல் ‘கொக்…. கொக் கொக்கோகோ’ என்று கூவியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. ‘நான் கண் திறக்க வேண்டும் என்று இந்தச் சேவல் காத்திருக்கும் போல இருக்கு! இப்போ மணி MVV என்ன தெரியுமா? சரியாக நாலரை!’ என்று தனக்குள் சொல்லிச் சிரித்தவாறு, இடுப்பு வேட்டியை இறுக்கிக்