கதையாசிரியர் தொகுப்பு: எம்.கோபாலகிருஷ்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தருணம்

 

 பாண்டியின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கிடத்தினார்கள். தலையிலிருந்து பாதம் வரையிலும் வெண்ணிற பாப்லின் துணி மொடமொடப்புடன் சுற்றி கட்டப்பட்டிருக்க பாண்டியின் முகம் வீக்கம் கண்டிருந்தது. பத்துக்கு பத்து அளவில் இருந்த அந்த இடத்தில் ஆளாளுக்கு இடித்துக் கொண்டே எட்டி எட்டி பார்த்தார்கள். வேஸ்ட் குடோன் மாணிக்கம் ஒரு ரோஜா மாலையை அவன் நெஞ்சில் சாத்திவிட்டு நகர்ந்தார். இன்னும் இரண்டு மாலைகள் கால்மாட்டில் போடப்பட்டன. சடலத்தின் மீது இருந்த மருத்துவமனைக்கான வாடையோடு ரோஜாவின் மணம் அபத்தமாய் கலந்தது.


இரவு

 

 படுக்கையில் நெருப்பள்ளிப் போட்டதுபோலத் திருமலையின் உடல் கொதித்தது. அவனால் படுத்திருக்கவே முடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவும் பற்றி எரிந்தது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். உடலை முறுக்க எத்தனித்தான். கைகளும் கால்களும் அவன் விருப்பத்திற்கு இணங்காத மெத்தனத்தோடு அப்படியே கிடந்தன. வலது கை எப்போதும் மார்பின் மீதுதான் கிடக்கும். அம்மாக்கிழவி அவனைப் படுக்கப்போடும் போது, வலது கையை மார்பின் மீது கிடத்திய பிறகுதான் போர்வையைப் போர்த்தியிருந்தாள். இடது கை நீட்டிய வாக்கில் அப்படியே கிடந்தது. கால்கள் வெறும்