கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஏ.ஷாஹுல் ஷமீது ஜலாலீ

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஊர்வலம்!

 

 தேசிய நெடுஞ்சாலை. வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம். கிராமங்களின் இலக்கணம் அத்தனையும் அங்கே இருந்தது. மோசமான புழுதி பறக்கும் சாலை, காரை பெயர்ந்த வீடுகள், கொஞ்சம் கால்நடைகள், கோவில், மசூதி, சர்ச், வழிபட கொஞ்சம் மனிதர்கள், ஒழுங்கற்ற ஐந்து தெருக்கள், ஊர்க்கோடியில் மரபெஞ்சுடன ஒரு டீக்கடை என எல்லாம் இருந்தன. இருள் விலகும் அதிகாலையில், கிராமத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, இரண்டு காவலர் வேன்கள்


ரீமா

 

 கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத். ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க அறிஞர்கள், இமாம் என, எல்லாரும் கூடியிருந்தனர். பள்ளிவாசல் கணக்குப் பிள்ளை மைதீன், வழக்கின் சாராம்சத்தைப் பார்த்தார். வடக்கு ஜமாஅத்தைச் சார்ந்த பொறியாளர் ஷம்சுதீன்; வயது 30. பனவிளையைச் சேர்ந்த ஆசிரியை ரீமா; வயது 25. இருவருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன், இரு ஜமாஅத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, நசீரா என்ற, இரண்டு வயது பெண்


ஆணென்ன? பெண்ணென்ன?

 

 “”வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!” – எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார். “”இது என் மகள் வீடு… நான் வர்றத எந்த நாயும் தடுக்க முடியாது…” – ஐம்பது வயது, இரட்டை நாடி கொண்ட ரைஹானா, பதிலுக்கு இரைந்தாள். அகராதியில் தேட முடியாத அளவுக்கு, வசவு வார்த்தைகளை பயன்படுத்தி, இருவரும் தூற்றிக் கொண்டனர். சப்தம் கேட்டு, மக்கள் கூடினர்; அந்தத் தெருவே இரண்டானது. கண்ணியமான காதர் மஸ்தான் வீடு, நாறிப் போனது.


எல்லாப் புகழும் இறைவனுக்கே!

 

 அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே இருந்தது. நான்கு தெருக்களில் முஸ்லிம்களும், இரண்டு தெருக்களில் இந்துப் பெருமக்களும், மீதி இரண்டு தெருக்களில் சமத்துவபுரம் போல் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களும் கலந்திருந்தனர். எட்டு தெருவிலும் சேர்த்து 300 முஸ்லிம் குடும்பங்கள் வசித்தன. அந்த 300 குடும்பங்களுக்கும் ஒரேயொரு தொழுகைப் பள்ளி வேம்படிப் பள்ளி. மூன்று வருடத்திற்கொரு முறை நிர்வாகத்திற்கான தேர்தல் நடக்கும். இப்போது,


பக்ரீத் விருந்து

 

 “”வாப்பா எங்கே?” கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர். “”வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே… பின்னால தோப்பிலே நிக்கிறாக…” என்று சொல்லிவிட்டு, வேலையில் மூழ்கினாள் ஸாலிஹா. அன்வர் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன். வீட்டின் ஒரே பிள்ளை; வாப்பாவிற்கு செல்லப்பிள்ளை. அவன் என்ன கேட்டாலும், உடனே வாங்கித் தருவார். அவன் விருப்பப்படி தான் உணவு, உடை, வீடு, தோட்டம், அலங்காரம் எல்லாம். அன்வர் தோட்டத்தை எட்டினான். “”வாப்பா…” “”என்னப்பா…” “”ஆமா… உங்கிட்ட ஒண்ணு கேட்கணுமே!” “”என்னப்பா…” “”பக்ரீத்துக்கு


முதல் அழைப்பு

 

 இமாம் ஸலா ஹுத்தீன், ஈசிசேரில் சாய்ந்தார்; மனைவி ராஹிலா, பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தாள். என்ன என்பது போல் இமாம் பார்த்தார். “”நம்ம பையனுக்கு நிறைய வரன்கள் வருது. ஏதாவது ஒண்ணு பார்த்துட்டா நல்லது.” “”எங்கேயிருந்து?” “”உங்க தங்கச்சி மகள், என்னோட அண்ணன் மகள், உங்க பிரண்ட் முஸ்தபாவோட மகள், நம்ம முத்தவல்லியோட சம்பந்தி மகள், நம்ம சாச்சா வீட்டுப் பொண்ணு…” “”இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?” “”நாம பொண்ணு தேட ஆரம்பிச்சா, இன்னும் நெறைய இடம்