கதையாசிரியர் தொகுப்பு: இ.வில்சன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

அதுதான் பரிசு!

 

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்திற்குப் பின்னே மறைந்து நின்று பார்த்தாள் தமயந்தி. பிரசிடெண்ட் தமயந்தி. ஆம்; அவள்தான் அந்தக் கிராம ஊராட்சி மன்றத்தின் தலைவி. “பொதுத்திட்ட வேலை’ நடக்கும் “அழகு’ அங்கிருந்து நன்றாகத் தெரிந்தது. பெண்கள் ஒருவருக்கொருவர் பேன் பார்த்து விட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு குழு முதல் நாள் நெடுந்தொடர் கதையை ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்தது. வயதான


துக்கஞ் சொல்லி!

 

 “ஏலே ரெங்கசாமி, எந்திருச்சி வெளியவாடா!” அந்த ஐப்பசி மாத மழைநாளில், விடியற்காலை மூன்று மணிக்கு பண்ணை காரியஸ்தர் சின்னையா பிள்ளையின் குரல் இடிமுழக்கமாய் ஒலித்தது. ஊரே மழைச் சாரலுக்குப் பயந்து வீட்டினுள் கதகதப்பாய் உறங்கிக் கொண்டிருந்தது. “ஏ ரெங்கா, எந்திருச்சு வாடா?” மீண்டும் காட்டமாய்க் கத்தினார் காரியஸ்தர். அவர் பிடித்திருந்த குடையில் பட்டு தூரல் துளிகள் தெரித்து விழுந்தன. மீண்டும் பதிலில்லை. “சீச்சீ! இது லாயக்கு படாது!” என்று குடையை மடித்தார். கழுத்துத் துண்டால் தலை நனையாமல்


பத்து நிமிட அடமானம்!

 

 டிபன் சாப்பிட்டுக் கை கழுவி, காபி-யும் குடித்து முடித்து, சர்வர் பில் கொண்டுவரச் சென்றபோதுதான் தூக்கிவாரிப் போட்டது பாஸ்கருக்கு. பேன்ட் பாக்கெட்டில், சட்டைப் பையில் எங்கும் பர்ஸ் இல்லை. “வித்யா! பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன். நீ உடனே ஒரு ஆட்டோ பிடிச்சுக்க. நேரே வீட்டுக்குப் போ. பணம் எடுத்துக்கோ. போன ஆட்டோவிலேயே திரும்பிடு. போக வர முப்பது ரூபாதான் ஆகும். நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றான் தன் மனைவியிடம். “ஏங்க, அதுக்கு நீங்க பைக்கிலேயே


எப்படி…? எப்படி?

 

 “நம்ம சின்னான் மவன் சங்கரைக் கவனிச்சியா… நாலு வருஷத்துக்கு முன்னே ஒரு வேளை சோத்துக்கே சிங்கியடிச்சவன். இன்னிக்கு சொந்த வீடு, புது பைக்கு, அவன் சம்சாரத்து காதுலயும் கழுத்துலயும் தங்கமா மின்னுது… அடேங்கப்பா!” “அட, ஒனக்கு விஷயம் தெரியாதா… எல்லாம் மாமனார் வூட்டுப் பணம்ப்பா!” “ஒனக்கு அவ்ளதான் தெரியுமா? அவன் மச்சான் கடத்தல் பிஸினஸ் பண்றவன். எல்லாம் தப்பு வழியில வந்த பணம்.” “சங்கரு மட்டும் யோக்கியம்னு நெனப்பா உனக்கு! அப்பப்போ பட்டணம் போய் வரானே, எதுக்கு?