கதையாசிரியர் தொகுப்பு: இரா.முருகன்

24 கதைகள் கிடைத்துள்ளன.

சிதைவு

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராத்திரிக்கு ஒரு வாசனையுண்டு. தாழம்பூ. அணைத்த காடா விளக்கு. ‘சரட் சரட்’ என்று வார்ச் செருப்பு ஒலிக்க, அரவம் ஒழிந்த தெருவில் யாரோ குடித்துக்கொண்டு போகிற சுருட்டு … தெரு விளக்கு மட்டும் எரிகிறது. வீட்டில் விளக்குப் போய் ஒரு மணி நேரமாகிறது. எல்லாச் சத்தத்தையும் பெருக்கி எடுத்துப் பூதம் காட்டுகிற ராத்திரி… சைக்கிள் ரிக்ஷா வந்து நிற்கிற சத்தம்…தடதடவென்று யாரோ இறங்குகிற


பொம்மை

 

 “கண்ட எடத்துலே எல்லாம் ஒண்ணுக்கு இருக்க ஒக்காரக்கூடாதுன்னு சொல்றாங்களே… அது சரிதான் சார்…” ரவிச்சந்திரன் நிமிர்ந்து ஆட்டோ டிரைவரைப் பார்த்தான். பெசலான உருவம். முதுகில் காக்கிச்சட்டை சின்னதாகக் கிழிந்திருக்கிறது. தெருவின் இரைச்சலையும் ஆட்டோ ஒடுகிற சத்தத்தையும் மீறி ஒலிக்கிற குரல். கொஞ்சம் தயங்கினார் போல. கொஞ்சம் தளர்த்தால் போல. பதிலை எதிர்பார்க்கிர விழிகள் செவ்வகக் கண்ணாடியில், பிரதிபலிக்கின்றன. அவையும் சோர்ந்தே இருக்கின்றன. “என்ன ஆச்சு….? போலீஸ் பிடிச்சுட்டுப் போய் மொபைல் கோர்ட்ட நிறுத்திட்டாங்களா…?” “இல்லே சார்… இது


கிடங்கு

 

 ‘எறங்குடா’ அண்ணாச்சி காரை நிறுத்தினார். இருட்டு. எந்த இடம் என்று புரியவில்லை. முன்னால் ஏதோ பெரிய கட்டடம். அங்கேயும் விளக்கு எதுவும் தெரியக் காணோம். ‘அண்ணாச்சி, இது என்ன இடம்? சோமு கண்ணைக் கசக்கியபடி கேட்டான். அவன் தூங்கப் போனதே நடு ராத்திரிக்கு அப்புறம் தான். தினமும் அதுதான் வாடிக்கை. நாயக்கரின் ராத்திரி மட்டன் ஸ்டாலில் மல்லிகைப் பூ இட்லி வியாபாரம் முடிகிற நேரம் அது. ‘ரொம்ப கெறங்குதாடா? எனக்காக ஒரு நாள் பொறுத்துக்க.. தனியா ஆசுபத்திரிக்குப்


வினைத்தொகை

 

 கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக் கொப்பளங்கள். நாலுநாள் கண்ணைக் கூடத் திறக்க முடியாமல் இமை மேலும் முத்துகள். உலகம் படுக்கையறையோடு சுருங்கி இன்றைக்குப் பத்து நாள். ரயில் பயணத்தையும் சேர்த்துப் பம்பாயிலிருந்து கிளம்பி பனிரெண்டு நாள். ‘ஊருக்குப் போகணும்.. ‘ ‘போய்க்கோ. ‘ ‘இல்லே ..எப்பத் திரும்ப வரணும்னு ..


ஸ்டவ்

 

 ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது. அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது கழுநீர் எடுக்கத் தகரக் குடத்தோடு பங்காரம்மா உள்ளே நுழைந்தாள். உங்க எருமைக் கன்னுக்குட்டி இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்திடும். வாத்தியார் வீட்டம்மா சொன்னாள். பங்காரம்மா மாடு வளர்க்கிறாள். நாலும் எருமை. ஒரு பசு கூட கிடையாது. எருமைப்பால் தான் வேண்டும் என்று டாக்கடைக்காரர்கள் கேட்கிறார்கள். டாக்கடைக்கு ஊற்றியதுபோக அவ்வப்போது ஆழாக்குப் பாலை தெருவில் முறை


ஆழ்வார்

 

 அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து


வாயு

 

 1 குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட் அணிந்த கனவான்கள். தலைக்கு பழுப்புச் சாயம் ஏற்றிக் கொண்ட, வயது மதிப்பிட முடியாத ஸ்தூல சரீரம் கொண்ட ஒரு பெண்ணும் உண்டு. அந்தப் பெண்ணின் கோல்ட் ப்ரேம் மூக்குக் கண்ணாடியும், கழுத்தில் வைரப்பதக்கம் தொங்கும் மாலையும் குளோரியா அம்மாளை யோசிக்க வைத்தன. சரியான இடத்துக்குத்தானா வந்திருக்கிறேன் ? என்ன வேண்டும் ? எதிர்பார்த்ததுபோல் அந்தப் பெண்தான்


பாருக்குட்டி

 

 நான் மலையாளம் மற்றும் கிரிப்டாலஜி படிக்கப் போயிருக்காவிட்டால், போன மாதம் ஊருக்குப் போயிருக்காவிட்டால், இதை எழுதியே ருக்க மாட்டேன். இந்த நரை பாய ஆரம்பித்த மீசை, கண்ணாடி, கிருதா எல்லாவற்றையும் எடுத்து விட்டு, வயதிலும் கிட்டத்தட்ட நாற்பதைக் கழித்துக் கடாசி விட்டு, ஐந்தாம் கிளாஸ் படிக்கிற சின்னப் பையனாக என்னைப் பாருங்கள். பைஜாமாவாகத் தைக்க எடுத்து பாதியில் நிறுத்திய மாதிரி ஒரு டிராயர், மிட்டாய்க் கலரில் சட்டை, சிலேட், குச்சி சகிதம் குண்டு குண்டாக சுழித்துத் சுழித்து


வாளி

 

 குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது. செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே இரைச்சலும், வியர்வையும் பக்கத்தில் நின்றவன் மூச்சில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த பூண்டு நெடியும் அவனைக் குழப்பமடைய வைத்திருந்தன. போதாக்குறைக்கு நடத்துனர். மீசை மழித்த அவர் முகம் கண்டிப்பையும், எந்த ஒழுங்கீனத்தையும் பொறுத்துக் கொள்ளத் தன்னால் முடியாது என்பதையும் காட்டியபடி இருந்தது. மீசைக்காரர்களிடம் தென்படும்


அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்

 

 ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான். மண்ணெண்ணெய் வாடை தூக்கலாக வ்ர, படைப்பைக் கல் மேடையில் ஸ்டவ் மூன்று தடவை ஒரு காலை உயர்த்தித் தட்டிவிட்டு ஓரமாக திரும்பிக் கொண்டது. அம்மா வந்திருக்கிறாள். ‘சீக்கிரம் வாளியை எடுத்துட்டுக் கீழே போ..வாிசை பொிசாயிடும்.. ‘ ஸ்டவ் காலில் அவள் பொறுமையில்லாமல் பேசினாள். ‘போய்ட்டுத்தானே இருக்கேன்.. ‘ சபேசன் சலித்துக் கொண்டபடி சமையல் மேடைக்குக் கீழே