கதையாசிரியர் தொகுப்பு: இரா.கோவர்தனன்

1 கதை கிடைத்துள்ளன.

வேப்பம்பூப் பச்சடி

 

 ‘திருவாக்கும் செய்கருமம் கைகூடும் – செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலாற் கூப்புவர் தம்கை, ‘ என்று அப்பா உள்ளே பூசையறையில் பாடிக்கொண்டிருக்க, இளங்கோவனுக்கு வயிற்றுப் பசி பொறுக்க முடியவில்லை. சமையலறைக்குள் சென்று எட்டிப் பார்த்தவன் மகேஸ்வரி வாணலியிலிருந்து சுடச்சுட எடுத்துப்போட்டுக் கொண்டிருந்த மெதுவடைகள் இவனைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டான். ‘மகி, ‘ என்றான் இளங்கோ. ‘ம் … ‘ என்றாள் அவள் திரும்பாமலே. ‘ஒரு வடை எடுத்துக்கவா ?