கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 11,021 
 

தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் இருந்த ஒரு வீடு. அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில் இருந்த கட்டிலில் குந்தியிருந்து வெளியே பார்த்துக்கொண்டு சுலோச்சனா இருந்தாள். அவள் ஒரளவு அழகிதான். இருந்தாலும் என்ன பிரயோசனம்? மனிதப் பிரச்சனைகளில் பெண் எப்படியானவள் என்பது அடிபட்டுப்போய் விடுகிறது. முன்றில். மாமரம். அதில் விளையாடு ற கவலையற்ற இரு அணில்கள். ஆணும் பெண்ணுமாக டுயட் பாடினாலும். அவற்றின் வாழ்க்கையில் அவ்வளவு அணியாய இழைகள் இராதுபோல பட்டது. அவளுக்கு சற்று தள்ளி துணி ஒன்று வளையில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. ‘அம்மாட பழஞ்சீலை அதனுள் ஆறுமாச பெண் குழந்தை அவள் குழந்தை இண்டைக்கு என்னமோ அழாமல் இருக்கிறது. அங்கே தவழ்கிற குளிர்ந்த காற்றிலே தூங்கிப்போய் விட்டதோ? அவள் மனதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை. பொதுவாக பிள்ளையைப் பெற்றால் மகிழ்ச்சி நிலவும். புருசனின் உபச்சாரம் இருபடியாகும். அவள் வாழ்விலே.? அவளைப் போலவே. வாசற்படியிலே சாஞ்சு சிந்தனையில் மூழ்கிக்கிடக்கும் தங்கச்சியைத் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அழுகை வந்தது. சிட்டுக் குருவியாட்டம் பறந்தவள்தலையில் பனங்காயைப் போட்டது

மாதிரி. ஒ. எல். படிச்சுக்கொண்டிருந்தவள். நிச்சயம் பாஸ் பண்ணக்கூடியவள். இப்ப கண்ணில் கருவளையம் விழ.சிந்தனையில் மூழ்கிப்போனவளாய். என்ன வாழ்க்கை, ஏன்தான் கடவுள் இப்படி சோதிக்கிறாரோ? ஜமுனா குழந்தை மனம் மாறாதவள். திடீரென மனிசியாக்கப்பட்டிருக்கிறாள். அவள் வயிறு சிறிது உப்பியிருந்தது. மூன்று மாசம். பெண்களுக்கு என்னமோ சந்தோசமான விசயம். எங்களுக்கு? சங்கரன் காதல் மன்னன்போல. மன்னன் ஆசைப்பட்டதை அடைகிறவன். இங்க இவன்! அவளுக்கு மனசு வெறுத்துப்போய்விட்டது! அவன் அவளை ஏற்கிறேன் எனக்கட்டியபோது எவ்வளவு தூரம் மகிழ்ந்தாள். ஆனால் இப்ப பெற்றோல். ஊத்தியது போலல்லவா இருக்கிறது, அவனை சந்தித்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லைதான். அவள் ஏற்கனவே.சிட்டுக்குருவியின் கனவுகளைத் தொலைத்துவிட்டு நின்றவள். வசந்தம் வருகிறது என..தெரிந்த இந்த நம்பிக்கை. இவ்வளவு குறுகிய காலத்தில் கருகிப்போய்விடும் என்று அவள் நினைக்கவில்லை. அவளுக்கு எல்லாமே அலுத்துப்போனது. கண்ணில் தூசி விழுந்தது. கசக்கினாள்.

தங்கச்சியை திரும்ப.இன்னொரு தடவை பார்த்தாள். இன்னமும் அதே சாஞ்சநிலை. இப்ப என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் படிப்பில் சோடையானவளில்லை. அம்மாவை நச்சரித்தவாறு டியூசன் வகுப்புக்குப் போய்வந்து கொண்டிருந்தாள். “இந்த தடவையே ஈசியாக பாஸ்பண்ணி விடுவேனக்கா பிறகு, ஏ.எல். அதிலும் இதே மாதிரி பாஸ்பண்ணி டீச்சரா வேன். அப்ப, அம்மா வேலைக்குப் போக வேண்டியதில்லை. உனக்கு காப்பும் சங்கிலியும் செய்து போடுவேன்” என்று அடிக்கொருதரம் கழுத்தைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியாகக் சொல்பவள். சோகப் பிறவியாகவிருந்த .எனக்கும் மகிழ்ச்சி தொத்திக்கொள்ளும். இப்படிக் கனவுகளில் இருந்தவளை அவர்களின் அனாதரவு நிலை. இந்த நிலைக்குத் தள்ளிவிட்டதே.
என்னைவிட 4 வயது இளமையானவளாகவிருந்தபோதும் என்மேல் எவ்வளவு அன்பை வைத்திருந்தாள். ஒரு தோழிபோல எவ்வளவு ஆதரவாகப் பழகினாள். கழுத்தைக் கட்டிப்பிடிப்பது;
கண்ணைப்பொத்துவது அவளோட சீண்டலான பழக்கங்கள். தவிர, பள்ளிக்கூடச் செய்திகள் எல்லாவற்றையும் என்னிடம் கொட்டாவிட்டால் அவளுக்கு அன்றைய பொழுது போகாது. ‘இன்ன ஆசிரியருக்கு இன்ன பட்டப்பெயர் தொட்டு இன்ன சினேதிக்கு இவன் மேல் காதல் வரை சகலதும் அதில் அடங்கும்.

அவள் வாசற்படியில் இந்தக் கோலத்தில் இருப்பதை என்னாலே ஜீரணிக்கமுடியாதிருந்தது. எனக்கே இப்படி யென்றால். அவளுக்கு எப்படியிருக்கும்? இருவருக்கும்தான் எதிர்காலம் சதா சிந்திக்கும்படி அமைந்துவிட்டது. அடுத்தவள் செல்லம்.ம்ே வகுப்புப் படிக்கிறாள். டியூசனுக்குப் போயிருந்தாள். அவளாவது நல்லாய் வாழனும். நீண்டப்பெருமூச்சு விட்டாள். அவள் பார்வையில் எதிர்த்தாற்போல் இருந்த கிழுவைவேலி தெரிந்தது.சிறிய கண் மீன்வலைகங்கா அண்ணை வீட்டுப்பக்கம் கொழுவப்பட்டிருந்தது. அதில் ஒட்டுகளை சீர்செய்துகொண்டு சுருட்டோடு அண்ணை நிற்பது தெரிந்தது. அவள் கல்யாணம் நடப்பதில் அவர் பெருமளவு உதவியவர். ‘நல்ல மனிசர்தான்.ம் எங்கட தலைவிதி இப்படியிருப்பதற்கு யார் என்ன செய்ய முடியும்? அவர் இவளைக்காண்கிற போதெல்லாம் “எப்படி இருக்கிற புள்ள” என்று கேட்பார். அவருக்கே இப்ப என்ர கல்யாணம் வெறுத்துப்போய்விட்டது. அயல் அட்டை முழுக்க முழுக்க கடல்த்தொழில் செய்பவர்கள் என்றில்லை. அவரைப்போல கொஞ்சப்பேர் முழுநேரமாக, செய்கிறார்கள். சிலர் தினமும் காலையில் நகர வேலைகளுக்குப் போய்விட்டு இரவில் கொஞ்சநேரம் கடலையும் துலாவுகிறார்கள். இரண்டு வேலை செய்வது அங்கே பொதுவானது. அவள் ஒழுங்கையிலே அவர்கள் சைக்கிள் பட்டாளமாக சாந்து அகப்பை மட்டக்கோல் மற்றும் பல வித தொழில் ஆயுதங்கள் சகிதம் போவதைப் பார்த்திருக்கிறாள். சட்டரிங் (கட்டிடமால்) வேலைக்கு அவ்விடத்து ஆட்கள் பேர் போனவர்கள். கொஞ்சப்பேர் காங்கேசன்துறை சீமேந்து ஆலையில் வேலை பார்க்கிறார்கள். அவள் அப்பா கூட அங்கேதான் வேலை செய்தார். சீமேந்து புகை அங்கே பெரும் பாதிப்பு ரத்தினம் மாமா, அப்பா உட்பட பலர் அந்தப் புகையாலே அற்பாயிசிலே மண்டையைப்போட்டு விட்டார்கள்.

அவர்கள் வீட்டிலே அவர் செத்தது பெருமளவு பாதித்தது. வீட்டிலே அனைவரும் பெண்கள். எதிர்பாராத.இந்த நிகழ்விற்கு என்ன செய்வார்கள். அம்மாட உறவுகளிலே.சில்லறைப் பிரச்சனைகள்.உப்பிடிப்பிரச்சனைகள் எல்லார்க்கும் 3ம் தரமாகவிருக்கிறபோது.எப்படி தலை போடுவார்கள்? எங்கப்பா மாதிரி ரத்தினம்மாமா வீடும். இன்னும் எத்தனையோ அப்பன்களுக்கு. சீமேந்து ஆலை எம்னாக இருக்கப்போகிறது எங்கட நிலையில் இருக்கிற எத்தனையோ பெண்கள்.வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது?.அவள் முகத்தை முழங்கால்களிலே புதைத்துக்கொண்டு அழுதாள்.

சினிமாவிலே வருகிறமாதிரி பெண் விடுதலைக்கொடியை ஏந்திக்கொண்டு வெளிக்கிடமுடியுமா? சினிமாத்தனங்களை ரசிக்கிற ஆண்களும்.ஏதோ பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ம். நியவாழ்வு என வருகையில் ‘வாழ்க்கைப்பிரச்சனை’ என்று சொல்லி தட்டிக்கழித்துவிடுகிறார்கள்.இன்று படித்தவர்களில் கணிசமான பேர் வெளிநாடு என போய் சதா தாங்கள் கஷ்டப்படுவதாகவும் சீதனம், சீர் இவ்வளவு தரணும் என்று சொல்லிக்கொண்டு இங்கத்தைப் பிரச்சனைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். ம்.ஒரு பெட்டச்சி பேச்சை யார் கேட்கப்போகிறார்கள். நடுத்தரவர்கள் கணிசமானோர் இரண்டும் கெட்டான்கள் இங்கேயே உருப்படியாய் நின்று கொண்டாலும் “நீ பிழை உவன் பிளை’ என்று சொல்லிக்கொண்டு ஒருத்தனை ஒருத்தன் விழுங்கிக்கொள்கிறவனாக சூழல் எத்தனை தூரம் நம்பிக்கையிழந்து போய்க்கிடக்கிறது. ஆளுக்கொரு கொள்கைகள் ஆளுக்கொரு நியாயப்படுத்தல்கள் இன்னும் ஒரு பகுதியினர் அரச உத்தியோகத்தில் இருவர்கள். இவர்களே பொழுது போகாமல் சமூகசேவை செய்வோமே என சிறுசிறு குழுக்களை ஏற்படுத்தி ஏதோ வேலை செய்பவர்கள். குடும்பத்தகராறுகளை, கோவில் விசயங்களை ஒரளவு பேசித்தீர்த்துக்கொள்ள. வைக்கிறார்கள். சேவை குழந்தைகளுக்கு வரும் (அரச) மானியங்களை கிடைக்க வழி செய்கிறார்கள். சமயத்தில் அகதிகளாக வரும் மக்களைப் பராமரிக்கிறார்கள். பெயர்களைப் பதிவுசெய்து அரசு, இந்திய நிவாரணம் பெற்றுக்கொடுக்க உதவுகிறார்கள். இப்படி இவர்களின் வேலைகள் பொதுவாக எங்கள் எல்லோர்க்கும் உதவிசெய்பவையே! இவர்களோடு கிளிமாமாவையும் காணலாம். அவர்கள் இளைஞர் அணியின் விளையாட்டுப்போட்டிகளுக்கும் ஆதரவாக நின்றதால் பெடியளின் உதவிகளை பரவலாக பெற்றிருந்தார்கள். அவ்விடம் இரு சாராரும் சேர்ந்து நின்றதனால். கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி நின்றது. நம்மவர்கள் நம்மவர்கள் என்று முன்னுக்கு நின்றபோதும் நம்மத்தியில் நடக்கும் சீர்கேடுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சமயத்தில் தங்களுக்கும் பங்கு இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக. ஏதாவது ஒரு தீர்வைத்திணித்து விடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இதுதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. இப்படி எல்லார் மத்தியிலும் இருந்தபோதும் ‘எங்க குடும்பம் அனாதையாவிருக்கிறது போல நினைப்பாள். அவர்களிடமிருந்து கணிசமான உதவியை அவள் வீடும் பெற்றுத்தானிருந்தது. அப்பா இறந்தபோது எங்கட குடும்பம் பெரிய கப்பல் உடைந்து நடுக்கடலில் கட்டு மரத்தைப் பிடிச்சதுபோல தள்ளப்பட்டிருந்தது.

அம்மாட உறவுகள் சிலர் முகமுறித்திருந்தது. அந்த நேரத்தில் மோசமாக பாதித்தது. சின்னம்மாட கல்யாணத்தின்போது சீதன சீர்வரிசையில் ஏதோ.குறைஞ்சு பெரிய பிரச்சனையாகியது. அப்ப, அம்மா பெரியம்மாட்ட.அத்தானை பொறுப்பு நிற்கச்சொல்லிக் கேட்டார். பெரியம்மா புருஷன் கஸ்டம்சிலே வேலை செய்பவர். அவர் நம்பிக்கைக்குரிய ஆளாக.எல்லார்க்கும் இருந்தார். அவரை எல்லோரும் திலகர் அண்ணை என்றே கூப்பிடுவோம். பெரியம்மா கேட்டதற்காக அவரும் பொறுப்பு நின்றார். கல்யாணம் நல்லபடி நடந்தது. பிரச்சனை பிறகுதான் உருவாகத் தொடங்கியது. பாட்டா மண்டையைப் போட்டார். கடைசி மகளின் கலியானத்தையும் கண்குளிர பார்த்துவிட்டு போய்விட்டார். சொத்துப்பத்து என.. அவர்களிடமும் இருக்கவில்லை எங்கப்பா. .திடீரென சீமேந்துப்புகையால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அடுத்தடுத்து பெரிய சாவுகள். கடைசியில் அம்மா கேட்ட குற்றத்திற்காக முகமுறிவு ஏற்படதிலகன் அண்ணை தன் காசைக்கட்டி அழவேண்டியேற்பட்டது. அது நல்லவே அவரைப் பாதிச்சு விட்டது. அவருக்கும் கல்யாணவயசில் பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கையில் வேண்டாத சுமையாக அழுத்தியது. பெரியம்மா அம்மாவை வந்து திட்டி பெரிய சண்டை பிடித்து விட்டுப் பிரிந்தார். சின்னம்மாவோட கதைக்கிறதை சொந்தம் கொண்டாடுறதை அம்மா கட் பண்ணினார். இனி மாமா மட்டுமே ஒரே உறவாக இருந்தார். அவர் சகோதரர்களை ஒற்றுமைப்படுத்த விரும்பினார். பிரச்சனைகள் இருக்கிறபோது அவர் எல்லோர் வீட்லேயும் போய் ஒரே உறவாக இருக்க முடிந்ததே தவிர வேற எதுவும் செய்ய முடியவில்லை. கிளிமாமாட தொந்தரவால் சேவைக்குழு அம்மாவிற்கு உதவ முன்வந்தது. சீனோர் என்ற மீன்பிடிக்கொம்பனியொன்று குழுக்கூடாக அவ்விடத்தில் ஏற்கனவே நேசரி வகுப்புக்கள் மற்றும் சிறுவர் நலத்திட்டங்களை நடத்திவந்தது. இலங்கையும் நோர்வேயும் சேர்ந்து ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் ஒரே கொம்பனி அது. அவர்களுடைய ஃபாக்ளிகள் காரை நகரிலும் யாழ்ப்பாணத்திலும் அமைந்திருந்தன. பைபர் கிளாஸ், மீன்பிடி படகுகள் செய்தல், மீன்வலை தயாரித்தல், மீன்பிடித்தல் போன்றன அவர்களின் முக்கிய தொழில்கள். தம்மோடு கைகுலுக்கிய தன்மையைப் பாவித்து குழுவும் அம்மாவிற்கு ஒரு வேலை போட்டுத்தரும்படி கேட்டது. அம்மாவிற்கு தையல் நன்றாகத்தெரியும். எங்களுடைய கஷ்டத்தைக் கவனத்தில் எடுத்து அதுவும் நெட்ஃபாக்ரியில் அம்மாவிற்கும் வேலை கொடுத்தது. அம்மாவிற்கு வேலை கிடைத்தது. எங்களுக்கெல்லாம் பெரிய ஆறுதல். அவர்கள் நைட் சிப்ரைத் தவிர்த்து ஒவர்டைம் மும் கொடுத்தார்கள். அதனால் பணக்கஷ்டம் கொஞ்சம் குறைந்தது.

அந்த நேரம் (0/L) படித்துக்கொண்டிருந்த எனக்கு படிப்பு அவ்வளவாக ஒடவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தேன். இருக்கிற வீடும் சின்ன வளவும், 2 பரப்புக்

காணியும்தான் எங்கட சொத்துக்கள். அம்மாவிற்கு கல்யாணத்திலே போட்ட நகைகள் சிலவற்றையும் வைத்திருந்தார். தாலி, காப்பு, சங்கிலி, இப்படி. இந்த நிலவரத்தில் எங்கட குடும்பத்தில் படித்தாலாவது ஒளரவு, நல்லாயிருக்கும். படிப்பை நிறுத்தியதால் நான் வீட்டுக்கு சுமையாக பொறிவது புரியத்தான் செய்தது. என்ன செய்யிறது. அந்த சனியன் பிடிச்ச பாடங்கள் ஏறமாட்டேன் என்கிறதே படிப்பை நிறுத்துவது என்னால் தவிர்க்க முடியாததாகி விட்டது. தலைவிதி. கிளிமாமாவிற்கு என்மேலே தனிப்பட்ட பட்சம் இருந்தது. அவர் “எடியே புள்ள, என்னடி உன்ர படிப்புகளெல்லாம்” என்று முன்னர் கேட்பார். இப்ப அடிக்கொரு தடவை வீட்டிலே வந்து “எடி புள்ள அம்மா எப்படி இருக்கிறா” என்று விசாரித்துவிட்டுப்போவார். அவள் டீ போட்டுக் கொடுப்பாள்.

ஊர்க்கதைகள் சிறிதுநேரம் அலம்புவார். ஒரு தடவை அம்மாவோடு கதைக்கிறபோது “என்ர மூத்தவனை சுலோவுக்கு கட்டி வைச்சால் என்ன? தங்கச்சி நீ என்ன சொல்றே?” என்று கேட்டார். அம்மாவிற்கு முழு விருப்பம். அண்ணன் குடும்பத்திலே சம்பந்தம் செய்வது அவருக்கு உவப்பாகவிருந்தது. அவருடைய மூத்தமகன் சிவம். அவனோடு சின்ன வயசிலே அடிக்கடி சண்டை போட்டிருக்கிறேன். இப்ப கிளிமாமா சொல்லி. அம்மாட்ட ஏதாவது சொல்ல வாரபோது. “அடி சுலோ அம்மாட காதிலே விசயத்தைப் போட்டுவிடு” என்று சொல்லிவிட்டு போறதோடு சரி.

அங்கத்தைய சன சமூக நிலையத்தோட இயங்கிய ‘சம்பியன் ஸ்போர்ட்ஸ் கிளப்’ கால்பந்து ரீமிலே விளையாடுகிறவன். அதனாலே தினமும் மாலையிலே கோயில் மைதானத்தில் ஜேர்சி பூட்சகிதம் பிராக்ரிஸ் பண்ணிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அவன் படிப்பைப்பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை. கிளிமாமா அடிக்கடி கறைப்பட்டுக்கொள்கிற விஷயம். “அடி புள்ள, மற்றவைகளாவது. படிக்கிறதா பார்ப்போம்’ பெருமூச்சோடு சொல்லுவார். எனக்கு என்ன பெரிசாய் கனவு இருக்கிறது எனவே சம்மதம்தான். அம்மா ‘என்னை விருப்பமா’ என்று கேட்கவில்லை. எனக்குப் பிடிக்கவில்லைஎன்றாலும் பொதுவாக என் பேச்ச அங்கே எடுபடாது. எல்லா வீட்டிலேயும்தான். சீதன சீர்வரிசையில் பாஸ்பண்ணினாலும் தொடர்ந்த வாழ்விலும் பெயிலாகிறவர்கள் இருக்கிறார்கள். ‘வெளிநாடு தொழில் வாய்ப்பு’ எனப் புருஷன்மார் திட்டம் போடும் போதெல்லாம். FREE ஆகக்கொடுக்கிற வங்கிகள் பெண்கள் பகுதியினர்தான். அம்மமாட நகைகள் ஒரு பரப்பு நெற்காணி வீட்டிலே அரை பாதி என உறுதி எழுதி அம்மா கையளித்தார். முதலில் ரெஜிஸ்ரேசன் மட்டும் செய்தார்கள். நகைகளை விற்றுப்போட்டு அவரை ஜேர்மனிக்கு அனுப்புவதென புகுந்த வீட்டில் தீர்மானிக்கப்பட்டது. ஜேர்மனியாலே வந்த பிறகு கல்யாணத்தை வைப்பதென. மாமா அம்மாவிடம் சொல்லியிருந்தார். பெரிசாய் என்ன? எளிமையாகத்தான் நடக்கும். நாட்டு நிலவரம் அப்படி. செல்லடிகளும் துப்பாக்கிச்சூடுகளும் அங்கே வஞ்சகமில்லாமல் எல்லாப்பகுதிகளிலும் வானத்திலிருந்து விழுந்தன. ஏதோ புண்ணியத்தில் நாங்கள் தப்பியிருக்கிறோம்.
இனிமேல் இருப்போம் என்பதை திடமாக சொல்ல முடியாது.

எங்கட பள்ளிக்கூடத்தை சில நாட்களாக மூடிவிட்டினம். இப்ப அங்க வேற இடத்து 30-35 குடும்பங்கள் அகதிகளாக வந்திருந்தன. மாமாவிற்கு அந்த அலைச்சலே பெரும் பொழுதை எடுத்தது.

இந்த நிலவரத்தில் கொழும்புக்குப்போய் வெளிநாடு பறப்பதும் அநேகமாக நடந்தது. எங்கட பகுதியிலே 10-15 பேருக்குமேல் சப்ஏஜன்சியாக வேலை பார்த்தார்கள். ஏஜென்சிக்காரர் வேலை வாய்ப்பு இவ்வளவு காலமுமில்லாது இப்ப அதிகமாகவிருந்தது.

மாமா அவளை தங்கட வீட்டிலே வந்து இருக்கச்சொல்லி விட்டார். கல்யாணத்தை ஜாம்ஜாம் என்று நடத்துவதாகவும் வேறு கூறியிருந்தார். வீட்டவிட்டு அவள் வெளிக்கிட்டபோது அவள் அழுதது எல்லாரையும் கண்கலங்க வைத்தது. அம்மாவை, ஜமுனாவை, செல்லத்தை விட்டுப்பிரிவது அவளுக்குத் தாங்க முடியாதிருந்தது. கிளி மாமா “எடி புள்ள நீ எங்க தூரத்திலேயே
போகப்போகிறாய் பக்கத்திலேதான்! இஸ்டப்படுகிறபோது வந்து பார்க்கலாம்” என்று தேற்றினார். மாமா நல்லவர்தான். ஆனால் மாமி அவரை மீறி வீட்டிலே எதுவும் நடக்க முடியாது. என்பதைப் போன ஒரு சில நாட்களிலே புரிஞ்சுகொண்டேன். அவளிட வீடு ஒரே அயலாகவிருந்தாலும், கொஞ்சம் தள்ளியேயிருந்தது. சைக்கிள் காரருக்கு அது தூரமில்லை. நொடிப்பொழுதில் போய் வரலாம். நடக்கிறவர்களுக்கு அது பெரிய தூரம். அவளால் அம்மாவை சகோதரங்களைப் போய்ப்பார்க்க முடியவில்லை. அவர்கள் பாவம். அவளுக்கு ஏதாவது செய்து காவி வந்து.பார்த்தார்கள். “அக்கா எப்படியிருக்கிறே என்ற அந்தப் பாசம். அந்த வீட்டிலே அவள் சதா வேலை செய்வது அதை அவள் சொல்ல விரும்பவில்லை. மகிழ்ச்சியாகவிருப்பதாக காட்டிக்கொண்டாள். சிவம் ஜேர்மனிக்குப்போற அலுவல்கள் நடக்கத்தொடங்கின. அவள் கொண்டு வந்த நகைள் விற்கப்பட்டு ஏஜென்சிக்காரரிடம் கையளித்தது போக, புதுச்சட்டைகள், கோர்ட், சப்பாத்து, சூட்கேஸ்.அவன் போறதுக்காக வாங்கப்பட்டது.அவள் வயிறு சிறிது உப்ப மனிசியாகிக்கொண்டிருந்தாள். பிள்ளை பிறந்தபிறகுதான் கல்யாணம் நடக்கப்போகிறது. சிரிப்பு வந்தது. இப்பவே எளிமையாக வைத்திருக்கலாம். நாட்டு நிலவரம் ஒரு சாட்டு. சிவத்தின் இந்தச் செயல்..?? அவனை ஜேமனிக்கு அனுப்புவதே அவர்களுடைய முக்கிய நோக்கம். மாமாவைக்குறை சொல்ல முடியாது. அவர் ஒருத்தர்தான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மருமகளாக ஏற்கவிரும்புகிறவர். ஆனால் அவர் மூக்கணாங்கயிற்றை மாமியிடமல்லவா கொடுத்துவிட்டார். ஏஜென்சிக்காரன் இந்தக் கிழமை அடுத்த கிழமை என போக்குக் காட்டிக்கொண்டிருந்தான். ஒரு கிழமை பயணம் சரிவர கொழும்புக்கு 2 நாட்களுக்கு முதலே போனான். அப்படியே பிளேனிலே பறந்துவிட்டான். சுலோவிற்கு வயிற்றில் பிள்ளை வளர்வ்து புரிய மலர்ந்துபோனாள். ‘நானும் ஒரு அம்மாவாகப் போறேன்’அவளுள் வசந்தங்கள். சிவத்திடமிருந்து கடிதம் வந்தது. அவளை கவனமாக இருக்கச் சொன்னான். மற்றபடி சுகமாய்ப் போய்ச் சேர்ந்ததாக எழுதியிருந்தான். அகதிகள் முகாமில் கணக்க யாழ்ப்பாணப் பெடியளுடன் தானும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தான். மாசத்திற்கு ஒன்றாக கடிதம் வந்தது. திடீரென வராமல் நின்றது. அவள் எழுதின கடிதத்திற்கு பதிலைக்காணோம். அவளுக்கு 8 மாசம் ஆகியது. வயிற்றில் சிறிது நோவெடுக்க.தொடங்கியது. புள்ள பிறக்கிற.நேரம் புருசனின் மேல்.அன்பு காட்றாற்று வெள்ளமாக பிரவாகிப்பது எல்லாப் பெண்களுக்கும் ஒன்றதானே! “அதனால் அவள்.கலக்கமாக விருந்தாள். 9 மாசமாகும்போது ஜேர்மனியில் இருக்கிற அயலான் ஒருத்தனின் கடிதம் பெரிய குண்டைத் தாங்கிவந்தது. ‘சிவம் அகதிகள் முகாமை விட்டு வெளியேறி வேலையும் எடுத்துவிட்டான். அவன் கலா என்ற பொட்டையோடு குடும்பம் நடத்துறான். கலா யார் என்பது ,பற்றிய செய்தி தனக்கு அவ்வளவாகத் தெரியாது. அவன் ரூம் மேட்டாகவிருந்தவன் ஒருத்தனின் தங்கச்சி என்று கேள்வி என்று எழுதியிருந்தான். அவளால் தாங்கமுடியவில்லை. என்ன செய்வாள்?அழுதாள். மாமா “என்ர மருமகள் நீதானம்மா! வேற யாரையும் எற்கமாட்டேன். அவனைக்கொல்லுவேன்” என்று கத்தினார். மாமி “சனியன், நீ நல்லபடி நடக்கவில்லை” எனத் திட்டினாள். வயிற்றிலே சுமந்தபிறகும் மாமிக்கு நல்லபடி நடக்கத் தெரியவில்லை. அவளுக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது. வாழ்ந்து என்ன பிரயோசனம் என்று நினைத்தாள். அங்கத்தைய எல்லாப் பெண்களுக்கும் புருஷன்மாரே உலகமாகவிருக்கிறார்கள். அந்த உலகம் அநியாயமாக சுற்றுறபோது, அவர்களுக்கு வாழ்வே இருண்டு விடுகிறது. அம்மாவோடும் தங்கச்சியோடும் அழுது என்ன பிரயோசனம்? அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். பூமிக்கு பாரமாக இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லம். அவள் ஒருநாள் களவாக மண்ணெண்ணையை எடுத்துக் குடித்தாள். அவளுக்குத் தெரிந்த வழி.அதுவொன்றாகவேயிருந்தது? மாமா பதறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டோடினார். “மாமி செத்துப்போகத்தானே குடித்தாள். செத்துப்போகட்டும்” என்று அவளை ஏசியதுபோலக் கேட்டது. அவள் எல்லாரையும் விட்டுப்போகத்தானே போகிறாள்? யார் எப்படியிருந்தால் என்ன? யார் என்ன பேசினால் என்ன?நிம்மதியாக கண்ணை மூடி மயங்கிப்போனாள்.

வாந்தி எடுக்கவைச்சு செய்த சிகிச்சையால்தான் இன்னமும் எல்லாரையும் விட்டுப்போகவில்லை என்பதை அறிந்து அழுதாள். அம்மா,ஜமுனா, செல்லம் எல்லோரும் சூழ கண்ணிரோடு நின்றார்கள். “எடி விசரி நாங்கள் இல்லையா? ஏண்டி இந்த முடிவுக்கு போன நீ” அம்மா அவள் தலையை ஆதரவாக தடவி அழுதார். மாமா எழுதிய உறுதி எல்லாவற்றையும் மாற்றி எழுதினார். திரும்ப அவர்களிடமே கையளித்த அவரால் நகைகளைக் கொடுக்க முடியவில்லை. நடுத்தர வருவாய் உள்ள உத்தியோகத்தர். அவர் சிவத்தை அனுப்ப அதைப் பயன்படுத்தியிருந்ததால், “இலேசிலே அந்தப்பணத்தைப் பிரட்ட முடியவில்லை. “தங்கச்சி எப்படியும் உனக்குத் திருப்பித்தருவேன்” எனக் கூறினார்.

சிவம் நகைக்காசை தான் அனுப்புவதாக எழுதியிருந்தான். உவன் வந்தால் கொல்லுவேன் என்று திட்டி பதில் கடிதம் போட்டதாகச் சொன்னார்கள். மண்ணெண்ணெய் குடித்ததால் பிரசவம் குறைப்பிரசவமாகி குழந்தை செத்தே பிறந்தது.ம்! பெண்ணுக்கு சொந்தம், துயரம் ஒன்றே! அதற்குப்பிறகு அவள் நடைப்பினம்தான். கனவுகள் கண்டு எழும்பி பயந்துவாழும் பிறவிபோல வருத்தக்காரியாகிவிட்டாள். வீட்டிலே அதிகமாகப் படுத்திருந்தாள். மண்ணெண்ணெய் குடித்தது அவளைத் தொடர்ந்தும் பாதித்தது. அடிக்கடி மயங்கி விழுந்தாள். ஏலாதவள் போல் நடமாடினாள். இவ்வளவுக்கும் அவளுக்கு வயசு 19 பிளஸ். இதற்குள்ளே.ஒரு யுகத்தைக் கடந்தது போல் பாதிக்கப்பட்டு விட்டாள். அந்த நேரம் அவர்களை இன்னொரு கஷ்டமும் வந்து அழுத்தியது. கடவுள் கொடுமைக்காரனாகத் தோன்றினான். அவன் ஒரவஞ்சகம் செய்ய நாங்களா அகப்பட்டோம்? அம்மா வேலைத்தளத்தில் யோசனையில் மயங்கிவிழ.ஆஸ்பத்திரிக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கே எக்ஸ்ரே தொட்டு பல சோதனைகள் செய்யப்பட்டன. அம்மாவிற்கு அநேகமாக .கான்சர்.என
அறிவித்தார்கள். இருந்தாலும். மகரகமைக்கு றிப்போர்ட்டுகளை அனுப்பி பதில் வந்த பிறகே திடமாக சொல்லமுடியும் என்றார்கள்.

மகரகமைக்குப்போன நிப்போர்ட்டுக்கு பதிலே வரவில்லை. இனப்பிரச்சினையால் அவசர அமைப்புகள் அனைத்திலும் பாகுபாடுகள் காட்டுறதுக்கு பழக்கப்படுத்திவிட்டார்கள். என்றுதான். மனிதர்கள் இந்தப்பிரச்சனைகளை சுட்டுப் பொசுக்கப்போகிறார்களோ, அம்மாவிற்கு கான்சர் என்பது பயத்தை ஏற்படுத்திவிட்டது. என்னைப்போல அவரும் வருத்தக்காரியாகி படுக்கையில் விழுந்து விட்டார். சீனோர் நிறுவனம் அனுதாபமாக நடந்து கொண்டது. அது அவர்களது வியாபாரத் தந்திரமாகவும் இருக்கலாம். கணிசமான நட்டஈடு கொடுத்தது, 6000 ரூபாய் வரையில். சக தொழிலாளர்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறகொம்பனியிலும். போய்க்காசு சேர்த்து 4000 ரூபா வரையில் கொடுத்தார்கள். அம்மாட இடத்துக்கு அந்தப்பகுதி ஆள் ஒருத்தரை தெரிவு செய்யச்சொல்லி நிறுவனம் குழுவிடம் கேட்டுக்கொண்டது. பணத்தை அம்மா புத்திசாலித்தனமாக வங்கியில் வைப்பு செய்தார். “இனிமேல் பணவருவாய் இருக்கிறதை வைச்சுத்தான் என்பதால் கவனமாக இருக்கவேணும்” என்றார். கொஞ்ச நாளைக்குப்பிறகு பணம் தீர்ந்துபோகும். பிறகு அவர்கள் நிலை? யோசிக்க அவளுக்கு அலுப்பாகவிருந்தது. அதோடு பிரச்சனையாக 3. பொம்பிளைப்பிள்ளைகள். உறவுகள் யார் உதவப்போகிறார்கள்? எல்லார்க்கும் , தம்தம் பிரச்சினைகள்.பாரதப்பிரச்சினைகள். எங்களைக் கவனிக்க இனி அவதாரங்கள்தான் வரவேணும். நடுத்தெருவுக்குப்போற. எங்கட நிலை.தெரிந்தும் மற்றவர்கள். மனிதாபிமானக் குணங்களை விட்டு வாழப்பழகிவிட்டார்கள். தம் தம் பிள்ளைகுட்டிகள் என்ற கனமான பைகளைத் தூக்குவதால் இன வாதிபோல முகத்தை முறித்துக்கொண்டு பேர்ய் விடுகிறார்கள். அம்மாட சகோதரங்கள் மத்தியில் அவவும் அவர்களைப்போல் ஒருத்திதானே! ஒருத்தரின் வாழ்வு அவலமாக முடிந்தால்.மற்றவர்களுக்கு ஒன்றுமேயில்லையா? அப்படி வாழுறதுக்கு சமூகப் பிரச்சினைகள் பெரிதும் காரணமாக விருக்கின்றன. அதை அகற்றுவதற்கு தம்தம் பிள்ளைகளை வளர்க்கவேண்டியவர்கள் தாம் நல்லபடியாய் இருப்பது தமக்குக் கிடைத்த வரம் போல இருக்கப் பழகிவிட்டார்கள்.

தங்களுக்கும்.சகோதரப்பிரச்சனைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்று முடிவெடுக்கிறபோது.நமது பகுதி சீரழியாமல் என்ன செய்யும்? தம் பிள்ளைகளை பணத்திற்காக சேவகம் செய்ய. பழகிவிடுகிறார்கள். கிராமப்புறங்களில் வாழ்கிற அன்பு, பாசம், இவயெல்லாம்.கொன்றொழிய சிவத்தைப்போல சங்கரனைப் போல் ஆட்கள் ஏன் தோன்றாமல் இருக்கப்போகிறார்கள். அம்மாவைக் கவனிக்கணும் என்ற உணர்வில் நான் கொஞ்சம் தைரியம் பெற்றவளாக வீட்டில் நடமாடத் தொடங்கினேன். வீட்ட கொஞ்சம் அழகுபடுத்தினேன். அவருக்கும் சந்தோஷம். என் மாற்றத்தை தன் நோயிலும் விரும்பினார். கிளி மாமா மட்டும் வந்து கொண்டிருந்தவர் அவரும் என்ர பிரச்சனையால் வருவதைத் தவிர்த்துவிட்டார். வீடு மெளனத்தில் குமைந்துகிடந்தது. கங்கா அண்ணை வேலியருகில் வந்து ஆதரவாக கதைப்பார். அவருக்குத் தொழில் பெருமளவு நேரத்தை விழுங்கியது. அவர் வீட்டிலும் ஒரு கரைச்சல் ஏற்பட்டது. அவரின் மூத்தமகன் கணேஸ்.ஏதோ ஒரு இயக்கத்திற்கு ஒடிப்போய்விட்டான். எந்தப்பிரிவு என்பதை தெளிவாக எழுதி வைக்கவில்லை. அவராலும் அறிய முடியவில்லை. இயக்கங்கள் பலது இருக்கின்றன. என்பதையே தெளிவாக அறியவே நாள் எடுத்தது. ஒவ்வொன்றினதும் துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்தபிறகே இத்தனை வகை இருக்கிறதா? என்று எல்லோர்க்கும் ஆச்சரியம். சமயத்தில் தம்தம் பேப்பர் புத்தகங்களை விற்க வருகிறபோது “இயக்கப்பெடியளாம் என்ற மரியாதையில் அவற்றை வாங்குவது நடந்தது. நாட்டு நிலவரத்தை அறியும் ஆவலில் அவர்களிடம் கதைப்போம். எம்மை சப்போர்ட்டர் என நினைச்சுக்கொண்டு அவர்களும் கொஞ்சம் கூட்டியே கதைப்பார்கள். இயக்கம் என்பது ஒவ்வொரு வியாபாரத்தனம் கொண்ட கடைகளை விரித்து வைப்பதுபோல நடந்து கொண்டன. அரசாங்கத்தின் படைகளோ இனக்காய்ச்சல் கொண்டு யுத்தமே நடத்தத் தொடங்கி விட்டபோது. இவர்களின் கடைத்தனம் அவ்வளவாக உறுத்தவில்லை. தப்பியவையள் எங்களுக்காக வெளிக்கிட்டிருக்கிறார்கள்.

எல்லோரும் ஒன்று சேர்ந்தால்.எங்களுக்கு விடிவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் ஏற்பட்டன. சிற்சில பகுதிகளில் சாதியில் ஒருத்தன் இயக்கத்தில் இழுபட்டால் அவனோடு பிணைக்கப்பட்டவர்களின் கணிசமான சப்போட்டை அந்த இயக்கம் பெற்றது. அது கிளைவிட்டதுபோல யாழ்ப்ாண மூலை முடுக்கெல்லாம் பரவி அவர்களுக்கெல்லாம் ஒரு சாதகமான நிலையை உருவாக்கியது. இதைவிட, அரசியல் கருத்துக்களால் கவரப்பட்டு புதிய தமிழீழம் படைக்கப்படபோகிறது என்ற நம்பிக்கையில் கணிசமான இளைஞர்கள் இயக்கத்திற்குப் போனார்கள். இம்முறையும் கலவரத்தில் கொழும்பு திருகோணமலையே பெரும் பாதிப்புக்குள்ளாகியது. ஆனால் வழக்கத்தை விட யாழ்ப்பாண இளைஞர்கள் கொழும்பில் ஒரு தொகைவாரியே பலியாகிவிட்டனர். அவர்கள் வீட்டில் இருந்ததெல்லாம் ஒவ்வொரு பெடியன்கள். உணர்வூட்டப்பட்டு இயக்கத்திற்குப் போனார்கள். இப்படி இயக்கம் என்று சொல்லி கணிசமான பேர்களை பயிற்சிக்கென இந்தியாவுக்கு அனுப்பும் நடைமுறைகள் எங்கும் நடைபெறலாயின. திருவிழாக்காலங்களில் பெண்கள் முதிர் பெண்கள் சலசலப்பதுபோல எங்கும் இந்த சலசலப்பே நிலவியது. தங்கம் உன்ர பொடி எப்படி? இருக்கிறானா போய்விட்டானா? என்ற அனுதாப விசாரிப்புகள். “வேறு எதற்காகப் போய் இருக்கிறான். கொஞ்சம் யோசித்துப்பார். உந்த சிங்கள ஆமி அறுவான்களிட்டயிருந்து காப்பாற்றத்தானே. கவலைப்படாதே” ஆதரவான அன்பு அலை எங்கும் வியாபித்து பிரவாகித்தது. சமயத்தில் 5-10 ரூபா அரிசி பருப்போ மற்றும் எந்த சாமான் தேவை ஏற்பட்டபோதும் சனங்கள் தயங்காமல் “உனக்கில்லாததா” என்று உதவி செய்தார்கள். வேலி கதியான்கள் பின்னப்பட்ட தென்னங்கிடுகுகள் கூட பணத்தைப் பெருசு படுத்தாது கொடுக்கிற தன்மை அவ்வூர் மக்களிடம் ஏற்பட்டது அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அவரவர் வீட்டிலே பெரிசாய் மதிச்ச பொக்கிசங்களான மகன்மார் போனபிறகு எல்லார் மத்தியிலும் மனிதாபிமானம் கொடிவிட்டுப் படர ஆரம்பித் திருந்தது. இயக்கப்பெடியள்களுக்கான ஒரு வரவேற்பான. பொற்காலம் ஏற்படத்தொடங்கியது. வேலிப்பிரச்சனை,

சீதனப்பிரச்சினை, பங்குப்பிரச்சனை, என சமயத்தில் முரண்டு பிடிப்பவர்களையும் இயக்கப்பெடியள் தட்டிக்கேட்க அடங்கிப்போனார்கள். நாங்களும் அனாதை இல்லை என்ற நினைப்பு மெல்ல மெல்ல எங்கள் நெஞ்சில் ஏற்படத் தொடங்கியது. பெண்களிலும் பயிற்சி பெற்ற மகளிர் அமைப்பு என புற்றிசல்களாக வேலை செய்ய எங்கட அம்மாமார்க்கு எல்லாம் மூக்கிலே ஆச்சரியம் பூத்தது.

ஒவ்வொரு பெயர்களைத் தாங்கி வந்தாலும் மகளிர் அமைப்பு பெண்நலத்திட்டங்களையே நடத்தியது. தையல் வகுப்புகளை வாசிகசாலையில் ஒழுங்குபண்ணியது. பெடியங்களை “தோழர்” என்று அழைத்து காரியங்களை நடத்தும் பாங்கு ‘ஒரு ராட்சியத்தை ஆள பெண்ணாலும் முடியும் என்பதைக் காட்டுவது போலவிருந்தது. இப்படி ஒரு நாள் இரவு நேரத்தில் அரசியல் வகுப்பு வைக்கிறதுக்கு எங்கட வீட்டிலே “இடம் தருவீர்களா” என்று கேட்டுக்கொண்டு வந்த கேமா ஆட்களுடன் சங்கரன் வந்தான். அவன் எங்கட பகுதிப்பெடியன் சிவத்தைப் போல சாம்பியன் விளையாட்டுக் கால்பந்துக்குழுவிலே விளையாடு கிறவன் இயக்கம் என தவறி ஒடாமல் இருந்தவர்களில் ஒருத்தன் நடேசன் மாஸ்டருக்கு இரட்டையர்களாக பிறந்த பெடியள்களில் மூத்தவன் 2 மணித்தியாலம் மூப்பு. மற்றவன் ராஜேஷ். ராஜேஷ் கம்பஸ் என்ரர் பண்ணியிருந்தான். இவன் படியாமல்.விளையாடி காலத்தைப்போக்கிவிட்டிருந்தான். தம்பி படிச்சிருப்பது அவனைப் பாதித்தது. படிச்சவர்கள்தான் ஒரளவுக்காவது அரசவேலை எடுக்கமுடியும். மற்றவர்கள் இனக்காய்ச்சலால் அதிகமாகவே சீரழிய வேண்டியிருந்தது. எதிர்கால பயமோ.என்னவோ சோர்வாகவே அவன் இருந்தான். சொக்கிப்போன ஒரு ரசிகர். தம்பி அங்க விளையாடினால் கோல்போட்டால் இங்க இவர் குதிப்பார் இவனை எனக்கு முதலே தெரியும். கோல் அடிப்பான் என்று விலாசம் அடிப்பார். சுலோ பொழுது பாராமல் கங்கா அண்ணையோடு வேலிக்கருகில் நின்று பேசிக் கொண்டி ருப்பாள். ஆட்டுக்கும் அப்படியே கிளை ஒடிச்சுவிடுவாள். குருவி பறக்கும் அந்த சூழ அவளுள் பழைய உற்சாகத்தை உயிர்ப்பிப்பதுபோல இருக்கும். அம்மா படுக்கையில் விழுந்தவுடன் ஆடு ஒன்று வாங்கிவிட்டிருந்தார். அவன் இப்ப பெட்டைகளோடு வருகிறபோது இயக்கப்பெடியன் என்ற மதிப்பு எங்களுக்கு இருந்தது. பெட்டைகளும் இலகுவில் என்னுடைய சினேகிதிகளாகிவிட்டனர். அவள்கூட மகளிர் அமைப்பைச் சேர்ந்தவளாகிவிட்டாள். மகளிர் அரசியல் வகுப் போடு சமயங்களில் இரவில் வந்து தங்கிவிட்டு பகலில் போவதும் பழகிப்போய்விட்டது. கேமா அவளின் திக்ப்ரெண்ட் பாதையில் சங்கரனைக்கண்டால், அவளைப்பற்றி விசாரிப்பாள். அவள் தலைவி போன்றவள். அவ்விடத்தில் ஒரளவுக்கு தையல்கிளாஸ், ரைப்ரைட்டிங் வகுப்புகள் ஒழுங்கு பண்ணியதும் அவள் வேறு இடத்திற்கு வேலை செய்யப்போய்விட்டாள். நல்லபடி வீசிய காற்றுதிடீரென மாறி வீசத்தொடங்கியது. இயக்கங்கள் மத்தியில் உள்பூசல்கள், கொழுவல்கள், எம்.ஜி. சிவாஜி ரசிகர் மன்றம்போல் ஒன்றை ஒன்று வம்பம் பாராட்ட வெளிக்கிட்டன. அவர்கள் இடத்துக்கருகில் சற்றும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. ஒரு இயக்கத்தில் மேல் ஒரு இயக்கம் திடீரெனத் தாக்குதலை மேற்கொண்டது. அவ்விடங்களில் காம்ப் என்று இருந்த சிறிய சிறிய வீடுகளில் இயக்கப்பெடியள் பிரேதங்களாக நிரைக்கு கிடத்தப்பட்டனர். கங்கா அண்ணை போய்பார்த்து வந்து கண்ணராவியை அழுகுரலில் விபரித்தார். “உவங்களை நேற்று சைக்கிளில்போய் வரேக்கை கண்டனான். இண்டைக்கு இப்படி.” இயக்கம் என்பது விபரீதங்களையும் காவியது என்பது முதல் தடவையாக புரிந்தது. வரவேற்பை காவி நின்ற எல்லோர் நெஞ்சிலும் திகைப்பும் பயமும் கலந்த கலவை ஏற்பட்டது. கிட்டத்தட்ட அந்தப் பகுதியில் இறந்த பெடியளை எல்லாம் ஒரே காம்ப்பில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். 20-25 பேருக்கு கிட்ட இருக்கும்.

அவ்வளவு பேரும் நேற்றுவரை புத்தகங்களை பிரசுரங்களை காவி வந்து படலையில் நின்று “வாங்குங்கோ அக்கா” என்று விற்றவர்கள். சமயங்களில் பல வீடுகளில் “வாருங்கோ தம்பி” என டீ போட்டு கொடுக்கப்பட்டவர்கள். “எப்ப தம்பி விடியல் வரும்” என்று விசாரிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு இயக்கங்கள் மத்தியிலும் கொழுவல்கள் விரிசல்களாகிப் படர்ந்ததால் ஒவ்வொன்றும் அனாதைகளாகவே இருந்தன. ஒவ்வொரு சாதிகளைப்போல அனாதைகளாகவே சீரழிந்தன.

சங்கரனின் பகுதி ஆட்கள் பாதிக்கப்படவில்லை.ஆனால் அவர்கள் மத்தியில் இன்னொரு கரைச்சல். உட்பூசல் மகளிர் அமைப்பு மற்றும் இயக்கப்பெடியள் செயலற்ற நிலைக்கு உள்ளானார்கள். இயக்கத்துக்குப்போன பெடியள் திருப்பி வர்ரதை இப்ப தாய்மார்கள் அவ்வளவாக விரும்பவில்லை. கைவிட்டு எண்ணக்கூடியவர்கள். அவர்களை இந்தியாவிலிருந்தே வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட முயற்சித்தார்கள். ஆனால் சங்கரனின் பகுதியில் அந்த நிலையிலும் ஒரு ஆச்சரியமான விடயம் நடந்தது. இயக்கப் பெடியளில் பலர் மகளிர் அமைப்பினைச் சேர்ந்தவர்களையே கைப்பிடித்தார்கள். சாதி சமய சீதனப்பிரச்சனை அற்று ஏற்பட்ட அந்த மாற்றம் பல யாழ்ப்பாணப் பெண்களை கரை சேர்த்தது. பெண்ணடிமைத் தனங்களை ஒரளவுக்கு பேசியவர்களாக இருந்தால். ஆண் அடக்குமுறையைற்ற வாழ்வை சில பெண்கள் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. கேமாவும் நகுலன் என்ற பெடியனை திருமணம் செய்து விட்டதாகக் கேள்விப்பட்டார்கள்.

இந்த நாட்களிலே சங்கரன் என்ன நினைத்தானோ? திடீரென என்னை திருமணம் செய்யப்போவதாக அம்மாவிடம் வந்து அனுமதி கேட்டான். நடேசன் மாஸ்டரும் பெண்சாதியுமாக வந்து கேட்பதை விடுத்து இவன் மட்டும் வந்து கேட்கிறான் என்றால். உது இந்த இயக்கப்பெடியளின்ரை நடைமுறை போலிருக்கு என்று அவர் தயங்கினார். “தம்பி மாஸ்டரை அனுப்பன். கதைச்சு நல்ல முற்று எடுப்பம்” அவன் முகம் தொங்கிப்போய்விட்டது. அவனுக்கு நேற்றுவரை இயக்கம் இருந்தது. இண்டைக்கு திரும்பவும்

அனாதையாகப்போனவன் போல் சோர்ந்து விருந்தான். “எனக்கு முழு விருப்பம். அப்பாவின் காதில் போட்டு பார்க்கிறன். அவர் மறுப்பு தெரிவிச்சாலும் எனது முடிவில் மாற்றம் இல்லை” உறுதியாகச் சொன்னான். அம்மாவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. கங்கா அண்ணை மாஸ்டர் துள்ள்க் குதிப்பதாக செய்தி கொண்டு வந்தார். “சொத்திலே பங்கு கிடையாது” எனச் சொன்னபோது அவன் ரோசத்தோடு வெளிக்கிட்டு அவர்கள் வீட்ட வந்து விட்டான்.

பிறகு எளிமையாக கண்ணகி அம்மன் கோவிலில் தாலி கட்டியது. குடும்பம் என அந்த சிறிய வீட்டில் இருந்தது. அவளுக்கு கண்ணிர் துளிர்த்தது. அவனோடு மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலைவெட்டி இல்லாத நிலைமை. அவனையே மோசமாகப் பாதித்தது. எங்களையும் பாதித்தது. மாஸ்டர் குடும்பமாக இருந்ததால் அவன் தொழிலுக்குப் பழக்கப்படாதவனாக இருந்தான். அப்படி.ஒரு படி விலகியவர்கள் எல்லாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரே வழி வெளிநாடு போவதாகவே இருந்தது.

மாஸ்டர் முகத்தை முறிச்சதால் அதற்குரிய பணத்தை திரட்டுவது எங்கள் தலையில் விழுந்தது. எங்கட தலையில் பனங்காயை வைச்சுக்கொண்டு இன்னொரு காயை விலைக்கு வாங்கியது போலாச்சு. என்னோட மணவாழ்க்கையால் அம்மா தங்கச்சி இவயள்கூட என்னால் பாதிக்கப்படுகிறது வருத்தமாயிருந்தது.

வெளிநாடு போற எண்ணம் அவனிடம் உறுதியாக விழுந்திருந்தது.

என்னைக் கட்டியதற்காக அம்மா சீதனமாக வீடு வளவில் பாதியை எழுதிவைச்சிருந்தார். அதை உடனடியாக ஈடுவைக்கச்சொல்லி அவன் ஒரே பிடியாக நின்றான். இருக்கிறதே ஒரு வீடு. அதையும் நேற்று வந்தவனுக்காக விட்டால்.ஒருவேளை இவனும் கைவிட்டால் நாங்கள் எங்கே போவோம்? யார் உதவுவார்கள்? ரத்த உறவுகளே பொருளாதாரப் பிரச்சனைகளால் இயக்க வடிவம் எடுத்திருக்கிறபோது எந்த வித உரிமையும் இல்லாத அயலவனை எப்படி எதிர்பார்க்க முடியும்? நாங்கள் பிச்சை எடுத்தால் என்ன? ஏன் எண்டு கேட்கிறதுக்கு ஆக்கள் இல்லாமல் இருக்கும்.

யோசிக்க யோசிக்க சுலோவுக்கு மண்டை வெடித்தது. கல்யாணம் அவளுக்கு சரிவராத ஒன்று. அலுத்துப்போனாள். அதோடு அவன், வங்கியிலே போட்டு வைத்திருக்கிற பணத்தையும் எடுத்துத் தரச்சொல்லி கட்டாயப்படுத்தினான். அவளால் அவனைப்புரிஞ்சுகொள்ள முடியவில்லை. இயக்கம் இருக்கும் வரையில் இப்படிப்பட்ட அநியாயங்களை தட்டிக்கேட்டது. இப்ப குழம்பிப்போய் கிடக்கையில் எல்லாமே பழையபடியே.கோயில் குழுஅதிகாரம் கொண்ட குழுவாக எங்கள் பகுதியில் இயங்கியது. பிரச்சனைகளின் தரத்தைப்பொறுத்து விலத்திவைப்பது, தண்டம் விதிப்பது, கட்டாயப்படுத்துவது அதன் செயற்பாடாக இருந்தது.

விலத்தி வைத்தால் கல்யாணம், செத்த வீடு எதிலும் ஊர்ச்சனம் பங்கு பற்றாது. அந்த வீட்டார் மட்டுமே மாயவேண்டும். அவர்கள் எக்கேடு கெட்டாலும் ஊர் கவலைப்படாது. கோயில்குழு காலங்காலமாக தேசவழமை என்ற பெயரில் சட்ட ஆவணங்களை வைத்திருந்து ஆட்சி நடத்திவந்தது. வருகிறது. இந்த நடைமுறை மற்ற சாதிகளை விட எங்கட சாதியில் அழுத்தம் கூடவாகயிருந்தது. மற்ற சாதிகளின் முரண்பாடுகளினால் பட்ட அனுபவங்களால் நம் முன்னோர் தயாரிச்சது. இருந்தபோதும் சிலவிதிகள் மோசமாகவே இருந்தன. அவற்றை திருத்த யாருமே முயலவில்லை. இயக்கம் வந்த பிறகு சாதி முரண்பாடு குறைந்தது போலிருந்தது.

அதனால் எங்கட குழு அதிகாரமற்று போயிருந்தது. சங்கரனிடம் இந்த டிமாண்ட் பண்ணிறகுணம் எங்கேயிருந்து வந்ததோ? இவனைச் சொல்லிக் குற்றமில்லை. எங்கள் சாதி சனங்களைத்தான் குறை சொல்லவேணும். நாம் கூட எது நடந்தாலும் தட்டிக்கேட்க முடியாத பிறவிகளாய் தானே இருக்கிறோம்.

வீட்டின் மறுபாதி ஜமுனாவின் பெயரில் இருந்தது. ஈடுவைக்க அவளின் அனுமதி தேவையாயிருந்தது. எனக்கும் வீட்டை ஈடுவைக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. அவளைக்காட்டி மறுத்துவந்தேன். அதனால் சங்கரன் ஒருநாள் குடித்துவிட்டு அம்மாவை தங்கச்சியைத் திட்டினான். சத்தி எடுத்தபடி விழுந்து படுத்தான்.

விபரீதத்தின் அறிகுறி அது என்பதை நான் அப்ப யோசித்துப் பார்க்கவில்லை. நாலு நாளுக்குப்பின் ஜமுனாவை இன்னமும் காணேலை என்று தவித்தபோது அவன் இவ்வளவு தூரம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பள்ளிக்கூடத்தால் வந்தவளை “அக்காவை மூளாய் ஆஸ்பத்திரியிலே சீரியஸாய் சேர்த்திருக்கு” என்று சொல்லி சைக்கிளில் ஏத்திக்கொண்டு போனவன், ஆண்கள் பொதுவாக தந்திரங்களில் வல்லவர்கள். ஜமுனா “அக்கா” என்று அழுதுகொண்டு நின்றபோது அவளுக்கு உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது.
இனி.? அவன் ஆரவாரமாக அறிவித்தான். “இப்ப என்னடி செய்வாய்? உன்ரை கொம்மாட்டை போய் சொல்லு. எனக்கு இவளும் பெண்டாட்டி என்பதை சேவைக்குழு, கோவில்குழு எல்லாம் பஞ்சாயத்து நடத்தின. ‘ஊர் உலகத்தில் நடக்காததில்லை என்று சொல்லி அவளையும் கட்டி வைக்கச்சொல்லி வற்புறுத்தியது. ‘உந்த ஆண்கள் எவனாக இருந்தாலும்உந்த மாதிரி ஆண்களுக்கு சார்பாகத்தான் நிற்பார்கள்?

தங்கச்சிட விருப்பம் எடுபடாது. அடுத்தவள் செல்லம். கடைக்குட்டி. அதையும் இந்த பிசாசு ஏப்பம் விட்டு விடலாம். உவனுக்கு சரிநாமம் போட? இங்க பல குழுக்கள். இயக்கங்களுக்கு தங்களுக்குள்ளே சண்டை போடவே நேரம் இல்லை. இனி மக்கள் மத்தியில் காப்பாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. பிரபல உதைபந்தாட்ட வீரன் சங்கரனின் விளையாட்டில் சொக்கிப்போய் நிற்கிற எங்கட பகுதி.இவன்ரை எந்த டிமாண்டையும் நியாயப்படுத்த காத்துக்கிடக்குது.

அவன்ர காட்டிலே மழை. அவனுக்கும் தங்கச்சிக்கும்

கலியாணம் என்ற சடங்கு நடந்தது. மஞ்சள் கயிறு அவள் கழுத்திலும் ஏறியது. வீடு வளவு போய் நடுத்தெருவில் நின்றாலும் பரவாயில்லை என அவன் கேட்ட பணத்தை பிரட்டிக்கொடுத்து ஜேர்மனிக்கு உடனடினயாக அனுப்பியாச்சு.

கடனாளியாகப் போய்க்கிடக்கிற எங்களுக்கு இப்படியான ஆண்கள் தான் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதை நினைக்கையில் அவளுக்கு சிரிப்பு வந்தது. இவர்கள் அழுவதையும் சிரிப்பதையும் கவனியாத அதிகாரம் பெற்ற குழுக்கள்.

வாசற்படி யில் படிப்பை விட்டு வயிற்றைத் தள்ளிக் கொண்டிருக்கும் தங்கச்சி எதை நினைச்சுக் கலங்குகிறாள்? வாழ்ந்தாகவேண்டும் என்பதை நினைச்சா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *